ஞாயிறு, 3 நவம்பர், 2013

“பிரிட்டனின் கதவுகள் உங்களுக்காக ஜனவரி 1-ம் தேதி திறக்கின்றன; வேலையும் ரெடி”

“பிரிட்டனின் கதவுகள் ஜனவரி 1-ம் தேதி உங்களுக்காக திறக்கின்றன. தொடக்க நாட்களில் பிரிட்டனுக்குள் செல்வதை தவற விடாதீர்கள்.. கையில் ஒரு உத்தியோகத்துடன்” இந்த விளம்பரம், ரொமேனியா நாட்டு பிரபல பத்திரிகைகள் அனைத்திலும் தினமும் வெளியாகின்றது.

எம்பிளாய்மென்ட் ஏஜென்சி ஒன்றால் கொடுக்கப்படும் விளம்பரம் இது. பிரிட்டனில் ஹோட்டல்கள், ஃபாஸ்ட் ஃபூட் உணவகங்கள் தொடக்கம், ஹாஸ்பிட்டல் உத்தியோகங்கள் வரை இவர்களால் விளம்பரப்படுத்தப் படுகின்றன. அனைத்து பொசிஷன்களுக்கும் வேலை தொடங்கும் தேதி, ஜனவரி 1, 2014.

அன்று என்ன விசேஷம்? பல்கேரியா, மற்றும் ரொமேனியா நாட்டவர்கள் விசா இல்லாமல் பிரிட்டனுக்குள் வரலாம், குடியேறலாம், பணிகளில் இணைந்து கொள்ளலாம், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில், அங்கத்துவ நாடுகளிடையே குடியேற்ற சுதந்திர சட்டம் (ழூEU’s freedom of movement law) உள்ளது. அதன்படி, ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் பிரஜை, மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குள் எவ்வித முன் அனுமதியும் இன்றி குடியேற முடியும்.

ரொமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2007-ம் ஆண்டு இணைந்தன. ஆனால், அந்த நாட்டவர்கள் தமது நாட்டில் குடியேறுவதை பிரிட்டன் அனுமதிக்காமல் இருந்தது. காரணம், அந்த இரு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஏழ்மையான நாடுகள். பிரிட்டனில் மணிக்கு 7 பவுண்ட்ஸ் சம்பளம் பெறும் அதே வேலையை ரொமேனியாவில் செய்யும் ஒருவருக்கு கிடைப்பது, பிரிட்டிஷ் நாணய பெறுமதியில் வெறும் 1.5 பவுண்ட்ஸ்தான்.

இதனால், ரோமேனியா, பல்கேரியா நாட்டவர்களுக்கு பிரிட்டனின் எல்லையை திறந்து விட்டால், லட்சக்கணக்கான அந்நாட்டு மக்கள் வேலை தேடி பிரிட்டனுக்குள் வந்து குவிந்து விடுவார்கள். அதுதான், பிரிட்டன் அவர்கள் வருவதை அனுமதிக்காமல் இருந்தது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு அழுத்தம் மேல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அங்கத்துவ நாடுகளிடையே பிரிட்டன் பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு கிளம்பியது. இப்போது வேறு வழியில்லாமல், அவ்விரு நாட்டவர்களுக்காகவும் தமது எல்லைகளை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் திறப்பதாக கூறியுள்ளது பிரிட்டன.

பிரிட்டனின் அறிவிப்பு, ரொமேனியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தனியார் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிகள் புகுந்து விளையாட தொடங்கி விட்டன. இவர்கள் வெளியிடும் விளம்பரங்களால் ஒவ்வொரு ஏஜென்சிக்கு முன்னாலும் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி விடுகின்றனர்.

இங்கு வெளியாகும் விளம்பரங்களை பார்த்து, பிரிட்டனில் அரசியல்வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அலறுகிறார்கள். அப்படியுள்ளன அந்த விளம்பரங்கள்.

ஒரு விளம்பரம், “பிரிட்டனில் வேலை செய்ய ஆங்கில அறிவு அவசியமில்லை” என்கிறது. மற்றொரு விளம்பரம், “டாக்சி டிரைவர் வேலைக்கு எந்தவித அனுபவமும் தேவையில்லை. 1 மாதம் வீதியில் கார் ஓடியிருந்தாலே போதும்” என்கிறது. லண்டன் தென் கிழக்கு பகுதி டாக்சி டிரைவர் வேலைகளுக்கு பெண் டிரைவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும்படி சொல்கிறது மற்றொரு விளம்பரம்.

ஹோட்டல்களில் கீழ்மட்ட வேலைகள் பலவற்றுக்கு இப்போதே ஆட்கள் எடுக்கப்பட்டு விட்டார்கள். Marriott, Hilton, De Vere போன்ற பெரிய ஹோட்டல்களில் தற்போது பணிபுரியும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலையில் சேரும் தேதி, ஜனவரி 1-ம் தேதி என்கிறது, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். பிரிட்டனின் எல்லைகளில் டிசம்பர் 31-ம் தேதி லட்சக்கணக்கான ஆட்கள் வரிசையில் காத்திருக்கப் போகிறார்கள் என கூறுகிறார்கள்.

விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல