நாளை மறுநாள் வர இருக்கும் அதிசய தேதி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் நாளை மறுநாள் 11.12.13 என அடுத்தடுத்த தொடர் எண்களை கொண்டதாக உள்ளதே இதன் சிறப்பம்சம். அன்றைய தினத்தை மிகவும் ராசியான, அதிர்ஷ்டமான நாளாக கருதி உலகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 3000 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள மண்டபங்களை புக் செய்து விட்டு காத்திருக்கின்றனர். இதனால் மண்டபங்கள், திருமண ஹாலுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. மும்பையிலும் இந்த சிறப்பு நாளை வரவேற்க பலவித கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகூர்த்த தினம், நல்ல நேரம் காலம் பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் கலாசாரத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களும் இந்த நாளில் திருமணம் செய்வதை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். அதனால் 11ம் தேதிக்கு பின்னர் நடத்த இருந்த திருமணங்களையும் இதே நாளில் செய்து கொள்ள பலர் முடிவு செய்துள்ளனர். இதனால் முகூர்த்த பத்திரிகை அச்சிடுபவர்களும் படுபிசியாக உள்ளனர்.
இதுகுறித்து ஜாக்விம் டிசோசா என்பவர் கூறுகையில், நாங்கள் 7.7.7ம் ஆண்டு முதல் இதுபோன்ற எண்களில் வரும் நாட்களில் நடக்கும் திருமணங்களுக்காக பத்திரிகை அச்சிட்டு வருகிறோம். இந்த ஆண்டு 11.12.13 அன்றைய தினம் திருமணம் செய்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்ளி என்றார். கடந்த ஆண்டு 10.11.12 அன்று திருமணம் செய்து கொண்ட லக்னோவை சேர்ந்த தேவேஷ் தம்பதிகள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இத்தகைய அரிய நாட்களில் இணைவது சிறப்பானது மட்டுமின்றி மறக்க முடியாதது என்றும் தெரிவித்தார்.
மும்பையை சேர்ந்த எண் கணித ஜோதிடர் கனிகா கத்வானி கூறுகையில், 11.12.13 என்ற தொடர் எண்கள் கொண்ட அன்றைய தினம் காதலர்களுக்கும் திருமணம் செய்பவர்களுக்கும் மிக சிறப்பான நாளாக அமையும் என்கிறார். நல்லது நடந்தால் சரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக