திங்கள், 9 டிசம்பர், 2013

டில்லியில் தேவையில்லாமல் தலையை கொடுத்து விஜயகாந்த் வாங்கிய 'செம அடி'

டில்லி சட்டசபை தேர்தலில், சில நூறு ஓட்டுகள் மட்டுமே கிடைத்த தால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நொந்து போயுள்ளார்.

தமிழர்கள் வாழும் தொகுதி:

இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலை புறக்கணித்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், டில்லி சட்டசபை தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும், 11 தொகுதிகளில் போட்டியிட்டது.மைத்துனர் சுதீசை, டில்லி அரசியலில் களம் இறக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்த முடிவை எடுத்தார். அத்துடன், தன் மனைவி பிரேமலதாவுடன் இணைந்து, டில்லியில், ஐந்து நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரமும் செய்தார்.

அப்போது, டில்லி தமிழர்களிடம், பல வாக்குறுதிகளை அள்ளி வீசினர். 'இனி, டில்லியில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும், தே.மு.தி.க., போட்டியிடும்' என்றும் கூறினர்.டில்லி தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், தே.மு.தி.க.,விற்கு, 1,000 ஓட்டுகளாவது கிடைக்கும் என, விஜயகாந்த் நம்பினார்.

ஆனால், 11 தொகுதிகளிலும் சேர்த்து, தே.மு.தி.க.,விற்கு, மொத்தம், 2,285 ஓட்டுகளே கிடைத்துள்ளன. கட்சி வேட்பாளர் யாருக்கும், 'டிபாசிட்' கிடைக்கவில்லை.டில்லி சட்டசபை தேர்தலில், தங்கள் கட்சியினர் பெறும் ஓட்டு நிலவரங்களைத் தெரிவிக்க, தனிக்குழு ஒன்றை, விஜயகாந்த் நியமித்திருந்தார். இந்தக் குழுவினர், டில்லியிலிருந்து, நேற்று காலை முதல், மதியம் வரை, தே.மு.தி.க., வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை, அவரிடம் கூறி வந்தனர்.

ஆனால், நேரம் செல்ல செல்ல, தகவல் கூறத் தயங்கினர். ஒரு கட்டத்தில், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர்.

விஜயகாந்த் சோகம்:

டில்லி சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்காதது, விஜயகாந்தை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது. அத்துடன், தேவைஇல்லாமல், டில்லி தேர்தலில், கட்சி யினரை போட்டியிட வைத்து, 'செம அடி' வாங்கியுள்ளார்.இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

"நோட்டோ'வை விட குறைவு:

ஒவ்வொரு தொகுதிகளிலும் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பெற்ற 6,555 ஓட்டுகளை விட, தே.மு.தி.க., (2,285) குறைவாகவே ஓட்டுகளை பெற்றுள்ளது.


தினமலர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல