உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து நிறையை குறைக்க மேற்கொண்ட முயற்சி காலங்கடந்த ஞானோதயமாகிய பரிதாபம்
பிரித்தானியாவிலேயே மிகவும் பருமனான நபராக சாதனை படைக்க தினசரி 29,000 கலோரி சக்திப் பெறுமான உணவை உண்ட நபரொருவர் தனது அளவுக்கதிகமான நிறை காரணமாக உயிருக்குப் போராடி வருகிறார்.
பரி அஸ்ரின் என்ற மேற்படி நபர், தனது 20 வயது முதற் கொண்டு பிரித்தானியாவின் பருமானான நபராக இடம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது நிறையை 910 இறாத்தலாக உயர்த்திக்கொண்ட பரி அஸ்ரின், கடும் உடல்நல பிரச்சினைக்குள்ளான நிலையில் தனது உடல் நிறையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில் அவர் தனது நிறையை தற்போது 630 இறாத்தலாக குறைத்துள்ள போதும், உடற் பருமனுடன் தொடர்புடைய நோய் பாதிப்புகளால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகப் புகழ் பெறுவதற்காக தவறான வழிமுறையை தேர்ந்தெடுத்ததால் அவர் சுவாசப் பிரச்சினை, நோய் தொற்றுகள் உள்ளடங்கலாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதியுற்று வருகிறார்.
மேலும் ஒரு வருட காலம் உயிர் வாழ்வதே அவரது இலட்சியமாக உள்ளது.
இது தொடர்பில் பரி அஸ்ரின் பேஸ் புக் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், தன்னைப் போன்று இருக்கக்கூடாது என்பதே இன்றைய சிறுவர்களுக்கு தான் கூறும் அறிவுரை என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக