சனி, 7 டிசம்பர், 2013

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா..., இது படமல்ல - பெரும் தலைவலி..., இதுக்கு மார்க்கே கிடையாது... வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில் நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.

ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்க, பிரபு தேவா இயக்கியுள்ள படம் ஆர் ராஜ்குமார்.

நேற்று உலகமெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு, கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என கூறியுள்ள ஒன்இந்தியா, ஒன்றரை ஸ்டார்கள் தந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரசோ, 2013-ம் ஆண்டின் படுமோசமான திரைப்படம் என்றால் அது ஆர் ராஜ்குமார்தான் என்று காய்ச்சியுள்ளதோடு, ஜீரோ மதிப்பெண்களை வழங்கியுள்ளது.

உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மட்டுமே இந்த மாதிரி படங்களைப் பார்க்க முடியும். வேஸ்ட் படம், என திட்டியுள்ளது ஜீ நியூஸ்.பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளன்டர் ஆர் ராஜ்குமார் என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ்.

என்டிடிவி இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனத்தைத் தந்துள்ளதோடு, ஒரு ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளது.

சமீப நாட்களில் ஒட்டு மொத்த மீடியாவும் கூட்டாக கண்ட மேனிக்குத் திட்டியுள்ள படம் என்றால் அது அநேகமாக ஆர் ராஜ்குமாராகத்தான் இருக்கும்.

அவ்வளவு மோசமாவா இருக்கு?!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல