கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒருவித மந்த நிலை இருந்து வருகிறது.
இருநாடுகளுமே தமக்கிடையிலான உறவுகளில் எந்தக் கசப்புணர்வோ, இடைவெளிகளோ கிடையாது என்று அவ்வப்போது கூறிக் கொண்டாலும், ஒரு வெளித்தெரியா இடைவெளி நீடித்து வருகிறது.
ஜெனீவா தீர்மானத்தின் போது தொடங்கிய இந்த இறுக்கநிலை கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர் இன்னமும் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைந்துள்ளதாகத் தெரியவில்லை.
சர்வதேச இராஜதந்திர அரங்கில் இலங்கையைக் காப்பாற்றுவதில் இந்தியா தனது முழுப்பங்களிப்பை செய்யவில்லை. அல் லது முழுமனதோடு செய்யக் கூடிய நிலை இருக்கவில்லை.
இதுதான் இராஜதந்திர முனையில் இலங்கை – இந்திய உறவுகளில் தோன்றி யுள்ள முக்கியமான இடைவெளிக்கான காரணம்.
இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி இப்போதைக்கு குறைவடைவதற்கான சாத்தியங்களோ அறிகுறிகளோ தென்படவில்லை.
இந்த இடைவெளியைக் குறைக்க கொழும்பும் புதுடில்லியும் விரும்பினாலும் கூட சில அக புறக் காரணிகள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.
இலங்கையுடன் இந்தியா கொண்டு ள்ள ஆழமான நட்புறவை தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம் அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது.
அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல் அமுக்கி வருகிறது.
அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன.
இது இராஜதந்திர அரங்கில் உள்ள முக்கியமான இருதரப்புச் சிக்கல்.
ஆனால், பாதுகாப்பு உறவுகளில் இந்த உறவுச்சிக்கல் ஏதும் இருக்கவில்லை.
பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில், இலங்கையுடன் எந்த இடைவெளியும் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புதுடில்லியின் இந்த இரட்டை அணுகுமுறை யைப் புரிந்து கொள்ளாமல் திரும்பத் திரு ம்ப அதற்குள் மூக்கை நுழைத்து முட்டிக் கொள்கின்றனர்.
இராஜதந்திர உறவுகளையும் பாதுகா ப்பு உறவுகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாத இரட்டை அணுகுமுறையை இலங்கையுடன் முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு அமெரிக்கா தான்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், என்று ஒரு வழியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய போது அது இலங்கையுடனான நெருக்கத்தைக் குறைக்கும் என்று அமெரிக்கா உணர்ந்திருந்தது.
ஆனால், இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத் துவம் கருதி இலங்கையுடனான பாதுகா ப்பு உறவுகளை சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.
இலங்கை விமானப்படைக்கு கடல்சார் கண்காணிப்புக்கான கருவிகளைக் கொடுத்தும் பசுபிக் கட்டளைப் பீடத்தின் மூலம் பயிற்சிகள், கூட்டுப் பயிற்சிகளை நடத்தியும், சில உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பாதுகாப்பு உறவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொண்டது அமெரிக்கா.
இன்று வரை அது சுமுகமாகவே தொட ர்கிறது.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் கொழும்பும் கிட்டத்தட்ட கீரியும் பாம்பும் என்ற நிலை வரைக்கும் சென்றுள்ளது.
இதுபோலத் தான் இப்போது இந்தியாவும் இரட்டை அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுடில்லியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் இலங்கையுடனான உறவுகளை சமநிலைப்படுத் திக் கொள்வதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு இந்திய அரசுக்கு அவசியமாக உள்ளது.
அரசியல் இராஜதந்திர ரீதியாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த விருப்ப ஈடுபாடுகளுக்காக நெகிழ்ந்து போக நேர்ந்தாலும், பாதுகாப்பு ரீதியாக அத்தகைய இழுப்புகளுக்கு விட்டுக் கொடுக்காத போக்கை புதுடில்லி அண்மைக்காலமாக கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரு க்கு இந்தியா மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போர்த்தளபாட உதவிகள் உள்ளிட்டவற்றை கொடுத்திருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையுடன் எத்தகைய பாதுகாப்பு உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தாலும் அவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படும் விவகாரம் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடும் விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழகம் எந்தளவுக்கு முட்டி மோதியும் எதையுமே சாதிக்க முடியவில்லை.
இப்போதும் கூட இருதரப்பு கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளில் நெருக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி, இலங்கையில் 5 நாள் பயணம் மேற்கொண்டிருந்ததும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ புதுடில்லிக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டிருந்ததும் இந்த உறவின் முக்கிய அடையாளங்களாகும்.
இந்திய கடற்படைத் தளபதி காலி கலந்துரையாடலுக்காகவே வந்திருந்தாலும் மேலதிகமாக மூன்று நாட்கள் இங்கு தங்கியிருந்து முக்கிய கடற்படைத் தளங்களுக்கு சென்றதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்டோரைச் சந்தித்து விட்டே போயிருக்கிறார்.
அத்துடன், இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த நால்வருக்கு தொழில்நுட்ப பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான, வச தியை அளிக்கவும் அவர் இணங்கியுள் ளார்.
அதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷ புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் குறித்து இன்னமும் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை.
இரண்டு நாட்கள் புதுடில்லியில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தி விட்டு அங்கிருந்து கொழும்பு திரும்பிய பின்னர் தான் அவர் வந்து சென்ற விவகாரமே புதுடில்லி ஊடகங்களுக்குத் தெரியவந்தது.
அவர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் குறிப்பாக, இந்தியக் கட ற்படைத் தளபதிகளுடன் இரண்டு நாட்களும் பேச்சுக்களை நடத்தியதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்ததாகவும் மட்டுமே மொட்டையான தகவல்கள் வெளியாகின.
கொழும்பு திரும்ப முன்னர் அவர் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷி த்தை சந்தித்தது கூட ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது.
எனவே அவரது புதுடில்லிப் பயணத் தின் அடிப்படை, அரசியல் இராஜதந்திர நோக்கிலானது அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
பாதுகாப்பு ரீதியாக இலங்கையுடன் இந்தியா நெருக்கத்தை கொண்டுள்ளதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம்.
முதலாவது சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இலங்கை கொண்டுள்ள உறவுகள் பலமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு துறையிலும் அத்தகைய இடைவெளி ஒன்று ஏற்படுவதை அதற்கு இடமளிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை.
இந்தியா எங்கிருந்தெல்லாம் பின்வாங்குகிறதோ அங்கெல்லாம் மூக்கை நுழைப்பதற்கு சீனா ஆர்வம் காட்டுவதால் எந்த வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை.
அடுத்தது, இந்தியாவுக்கு அதிகரித்து வரும் கடல்வழி பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
குறிப்பாக, கடற்கொள்ளையருக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் செயற்படும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் தீவிரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்று இந்தியா அதிகளவில் அச்சம் கொண்டுள்ளது.
இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் 140 தனியார் ஆயுதக்கப்பல்கள் நடமாடுவதாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோஷி கடந்தவாரம் கூறியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் உதவியும் ஒத்துழைப்பும் இருந்தால் தான் இத்தகைய தீவிரவாத தாக்குதல்க ளில் இருந்து தப்பிக்க முடியும்.
எனவே இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை குறிப்பாக கடற்படைகளு க்கு இடையிலான நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த நினைக்கிறது இந்தியா.
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த இலங்கையுடன் அவுஸ்திரேலியா எவ்வாறு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளதோ அதுபோலத் தான் தனக்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடிக்க இலங்கையுடன் நட்புறவு கொள்வதை விட இந்தியாவுக்கு வேறு வழியில்லை.
இந்தியாவின் இந்தப் பலவீனம் தான் இலங்கைக்கு சாதகமாக உள்ளது,
அரசியல் இராஜதந்திர முனையில் இந் தியா அழுத்தங்களை கொடுத்தாலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக வலிய வந்து ஒட்டிக் கொள்ளும் இந்தியாவின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை.
இந்த பாதுகாப்பு உறவுகளை தமிழ்நாட் டின் எந்த அரசியல் அழுத்தங்களாலும் உடைக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக