சனி, 7 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலாவின் காதல்களும் திருமணங்களும்!

நெல்சன் மண்டேலா ஒரு போராளி என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவர் பெண்களைக் கவர்ந்த நாயகன் என்பது உண்மை. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பயணத்தின் பல்வேறு கட்டங்களில் 3 மனைவிகளுடன் பயணித்துள்ளார். இதற்கிடையே ஒரு மண்டேலாவின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கப்பட்ட நிகழ்வும் அவர் வாழ்வில் உண்டு.

1918-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. இவரது தந்தை சோசா பழங்குடி இனத்தலைவராக இருந்தவர். இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்கள் மற்றும் 9 பெண் குழந்தைகள் சேர்ந்து 13 குழந்தைகள். அவரது மூன்றாவது மனைவிக்குப் பிள்ளையாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரது முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா.

ரோலிஹ்லாலா என்ற பெயரின் அர்த்தம் மரக்கிளைகளை உலுக்குபவன் அல்லது கலகக்காரன். மண்டேலாவின் ஆளுமைக்குள் ஒரு குத்துச் சண்டை வீரனும், சிறந்த வழக்கறிஞரும் உண்டு. அவரது தனிப்பட்ட, அரசியல் நடத்தைகள் மிகவும் தைரியமானவை. தார்மீக நெறிகள் கொண்டவை.

மண்டேலா தந்தைக்கு 4 மனைவிகள் என்றால், மண்டேலாவுக்கு 3 மனைவிகள். மூன்று மனைவிகளுடனும் அவர் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தியுள்ளார். மண்டேலாவின் முதல் திருமணம் 26 வயதில் நடைபெற்றது.

ஈவ்லின் மண்டேலா


1944-ம் ஆண்டு மண்டேலா, ஈவிலின் மேசேயை மணந்தார். முதல்பார்வையிலேயே எங்களுக்குள் காதல் மலர்ந்தது என ஈவ்லின் மன்டேலா ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள். இவர்களில் மூன்று குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். 1958-ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர்.

வின்னி மண்டேலா


1958-ம் ஆண்டு வின்னியை மணந்தார். வின்னி மண்டேலா நெல்சன் மண்டேலாவை விட 16 வயது இளையவர். அரசியல் நண்பரும் கூட. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. 40 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் 1998-ம் ஆண்டு பிரிந்தனர்.

கிரேகா மச்சேல்


பின்னர் தனது 80-வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மச்சேசலை மண்டேலா 3-வது திருணம் செய்தார்.

நிராகரிக்கப்பட்ட காதல்


மூன்று மனைவிகள் மட்டுமல்ல. 80 வயதில் கிரேசா மச்சேலுடன் திருமணத்திற்குப் பின்னர் காதல் வந்துள்ளது மண்டேலாவிற்கு. மண்டேலாவின் காதலை ஆமினா கச்சாலா என்ற பெண் நிராகரித்துள்ளார்.

மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல