வியாழன், 29 மே, 2014

சார்ஜாவில் 04 பெண்களை வைத்திருந்த இலங்கையர் பலி!

சார்ஜாவில் உள்ள குடியிருப்பு தொடர் மாடி ஒன்றில் 04 இலங்கைப்
பெண்களுடன் சேர்ந்து வாழ்ந்த இலங்கை ஆண் ஒருவர் இம்மாடியில் இருந்து
வீழ்ந்து இறந்து உள்ளார்.



22 ஆவது மாடியில் இருந்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு இவர் வீழ்ந்து
இருக்கின்றார்.

இவரது மரணம் தொடர்பாக 04 பெண்களும் கடுமையாக விசாரிக்கப்படுகின்றனர்.

அத்துடன் தொடர் மாடியின் கவலாளி, முகாமையாளர் ஆகியோர் கைது
செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

பெண்களில் ஒருவரை இலங்கையர் அடிக்கின்றமை கண்காணிப்புக் கமராவில் பதிவாகி உள்ளது. ஆயினும் இதன் பின் என்ன நடந்தது? என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஆயினும் இவர் பல்கணியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
என்று பெண்கள் கூறுகின்றனர்.

தொழில் வழங்குனர்களிடம் இருந்து கள்ளமாக ஓடி வந்த பெண்களையே இவர் வைத்து இருந்து உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல