வியாழன், 29 மே, 2014

நமது தேசியதலைவர் டெல்லியில் கதிகலங்கிப்போனாரம்!!!

"இந்திரா" பாணியில் மகிந்த ராஜபக்சேவை "டீல்" செய்தார் நரேந்திர மோடி?

ழத் தமிழர் பிரச்சனையில் 13வது அரசியல் சாசன திருத்தம் போன்ற காலாவதியான தீர்வை தற்போதைய பாஜக அரசு முன்வைக்கிறது என்ற அதிருப்தி குரல்கள் ஒருபக்கம் இருக்க முந்தைய பிரதமர்களைப் போல இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி சற்றே கடுமையான தொணியில்தான் தமது கருத்துகளை முன்வைத்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.

அவருடன் நேற்று முன்தினம் 20 நிமிட நேரம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசு விரும்பாத 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை 'கறாராக' பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ராஜபக்சேவிடம் மோடி முன்வைத்தவை.

அத்துடன், தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை ராணுவத்தினர் நில அபகரிப்பில் ஈடுபடக் கூடாது; தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் ராணுவத்தினரை விரைவில் வெளியேற்றிவிட்டு போலீசாரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் அதிகாரங்களை கட்டுப்பட்டுத்தும் உரிமையை மாகாண சபையிடம் கொடுக்க வேண்டும்; இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு 13வது அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்பதை "கறாரான" குரலில் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

எதிர்பார்க்காத ராஜபக்சே

பிரதமர் மோடியின் இந்த "கறார்" குரலை ராஜபக்சே எதிர்பார்க்கவில்லை என்பதால் இறுக்கத்துடனேயே அவரும் பேசியிருக்கிறார்.

உடனே சாத்தியமே இல்லையே...

மேலும் பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு பதிலளித்த ராஜபக்சேவோ, இப்பொழுதுதானே யுத்தம் முடிந்துள்ளது.. சிறிது காலம் எடுக்கும் என்று பதிலளித்திருக்கிறார்.

5 ஆண்டுகள் ஆயிற்றே..

அப்போது இடைமறித்த பிரதமர் மோடி, யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்துங்கள்.. இதில் உங்களுக்கு பிரச்சனை எனில் இந்தியா நேரடியாக தலையிட்டு உதவும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

சுஜாதாசிங்கிடம்

மேலும் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங்கிடம், முன்பு இலங்கைத் தரப்பில் நமக்கு என்ன உறுதிமொழி தரப்பட்டது? என்று கேட்க, 13வது அரசியல் சாசன திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்றாராம்.

ராஜபக்சேவிடம் கண்டிப்பு

இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நீங்கள் அளித்த உறுதிமொழியைத்தான் நிறைவேற்ற சொல்லுகிறோம்.. தாமதிக்க வேண்டாம் என்று சொல்ல இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முகத்தில் அதிர்ச்சிதான் வெளிப்பட்டதாம்..

இந்திரா காலத்து..

கடந்த 30 ஆண்டுகாலம் இந்தியாவில் நிலையற்ற அரசு, உறுதியான வெளியுறவுக் கொள்கை எதுவும் இல்லாத நிலையில் இலங்கை தன் இஷ்டத்துக்கு செயல்பட்டு வந்தது; இந்தியாவை மதிப்பதாக இல்லாமல் இந்தியாவுடன் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் மோடியின் இந்த கறார் பேச்சுவார்த்தையில் பொறி கலங்கினாராம் மகிந்த ராஜபக்சே. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில்தான் இந்தியா இப்படி கண்டிப்புடன் நடந்து கொண்டது என்பதையும் தமது சக அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் ராஜபக்சே.

பூசணிக்காய் சோற்றில் மறைப்பு..

அத்துடன் இலங்கை அரசு ஊடகங்களில் பிரதமர் மோடி 13வது அரசியல் சாசன திருத்தம் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் பேசியது குறித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் அதாவது தாம் மூக்குடைபட்டது தெரியாமல் மறைத்து இருக்கிறார் ராஜபக்சே என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல