வியாழன், 29 மே, 2014

பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய சில அருமையான யோசனைகள்!!!

தற்போது பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம் உள்ளது. அப்படி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தினால், அதில் இருந்து நாற்றமானது அவ்வளவு சீக்கிரம் போகாமல் அப்படியே இருக்கும். பொதுவாக இப்படி பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நாற்றம் வெளிவரும் போது, அதனைப் போக்க சோப்புகளைப் பயன்படுத்துவோம்.சில சமயங்களில் அந்த சோப்புகளால் கூட நாற்றத்தைப் போக்க முடியாதவாறு ஆகிவிடும்.

ஆகவே அப்போது பிளாஸ்டிக் பொருட்களில்ல் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்க, முதலில் குளிர்ச்சியான நீரில் அலசி, பின் வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு ஒரு சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்கலாம்.

சரி, இப்போது பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்க ஒருசில அருமையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து நாற்றம் போகாமல் இருந்தால், டப்பாவை நன்கு சோப்பு போட்டு அலசிய பின்னர், அதனுள் செய்தித்தாளை போட்டு நிரப்பி, இரவு முழுவதும் வைத்து மறுநாள், சுடுநீரில் அலசினால், அதில் இருந்து வெளிவரும் நாற்றத்தைப் போக்கலாம்.

நிலக்கரியை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக அப்படி போட்டு மூடி வைக்கும் போது, டப்பாவானது ஈரமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்த பேஸ்ட்டைக் கொண்டு பிளாஸ்டிக் டப்பாவை தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், நாற்றமானது நீங்கும்

எலுமிச்சை மிகவும் சிறப்பான வாசனையைக் கொண்டிருப்பதால், அந்த எலுமிச்சையைக் கொண்டு பிளாஸ்டிக் டப்பாவை தேய்த்தால், அதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்துடன், அழுக்கையும் நீக்கிவிடும்.

காபித் தூளைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை தேய்த்து சிறிது நேரம் கழித்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், நிச்சயம் துர்நாற்றமானது நீங்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல