ஞாயிறு, 18 மே, 2014

11 ஆவது மாடியிலிருந்து விழுந்த பாலகன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு

11 ஆவது மாடி­யி­லி­ருந்த குடி­யி­ருப்பின் மாடத்­தி­லி­ருந்து விழுந்த ஒரு வயதுக் குழந்தை அபூர்­வ­மான முறையில் உயிர் தப்­பிய சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.



சோமா­லிய வம்­சா­வளி இனத்தைச் சேர்ந்த மூஸா டாயிப் என்ற மேற்­படி குழந்தை மாடிக் கம்பிச் சட்­டங்­க­ளுக்­கி­டையில் இருந்த இடை­வெ­ளி­யி­னூ­டாக கீழே விழுந்­துள்­ளது.

இரு கரங்­களில் முறி­வுக்கு உள்­ளான மூஸா­வுக்கு சுவாச உப­க­ரணம் மூலம் ஒட்­சிசன் வழங்­கப்­பட்டு வரு­கின்ற போதும், அவ­னது உயி­ருக்கு ஆபத்­தில்லை என்றே நம்­பப்­ப­டு­கின்­றது.

குழந்தை மாடி­யி­லி­ருந்து விழுந்­ததால் அவ­னது பெற்­றோர் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் மூஸா­வுக்கு சிகிச்­சை­ய­ளித்து வரும் மருத்­து­வ­ரான ரினா ஸ்­லுஷிர் விப­ரிக்­கையில்,

இத்­த­கைய அள­வுக்­க­தி­க­மான உய­ரத்­தி­லி­ருந்து விழுந்த பாலகன் உயிர் பிழைத்­துள்­ளமை அபூர்­வ­மான நிகழ்­வென கூறினார்.

வயது வந்த ஒருவர் இந்த உய­ரத்­தி­லி­ருந்து விழுந்தால் உயிர் பிழைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை என கூறிய அவர், சிறார்­களின் உடல் நெகிழ்ச்­சித்­தன்­மை­யு­டை­யது என்­ப­தாலும் குழந்தை மண் குவியல் மீது விழுந்­த­தாலும் உயிர் தப்­பு­வது சாத்­தி­ய­மா­ன­தாக தெரி­வித்தார்.

''எனினும் இது உண்மையிலேயே அற்புதமாகும். அது அந்தப் பாலகனின் குடும் பத்திற்கு கடவுள் அளித்த கொடை யாகும் '' என்று கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல