ஞாயிறு, 18 மே, 2014

இறந்த தாய் யானையை விட்டு அகல மறுத்த குட்டி யானை கென்யாவில் மனதை நெகிழவைக்கும் சம்பவம்

கடும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாய் யானையை விட்டு அகல மறுத்து அந்த யானை யின் உடலருகே இரவு முழுவதும் கடும் குளிரையும் பொருட் படுத்தாது குட்டி யானை காவல் இருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.



வட கென்யாவில் சம்புரு எனும் இடத்திலுள்ள வனப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், டேவிட் ஷீல்ட்றிக் வனவாழ்வு நிதியம், கென்ய வனவாழ்வு சேவை மற்றும் யானைகள் பாதுகாப்பு நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களால் பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்ட அந்த யானைக் குட்டி, விசேட விமானத்தின் மூலம் நைரோபி தேசிய பூங்காவிலுள்ள யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல