ஞாயிறு, 18 மே, 2014

எடை­மே­டையில் மன்­மோகன் சிங்


``இலங்கைப் பிரச்­சி­னையில் மன்­மோகன் சிங் அரசின் அணு­கு­முறை அவ­ரது சரித்­தி­ரத்தில் மிகப்­பெ­ரிய கரும்­புள்ளி''

பிர­தமர் மன்­மோகன் சிங் மீண்டும் பிர­தமர் பதவிப் போட்­டியில் இல்லை என்­பது அறி­விக்­கப்­பட்ட முடி­வுதான் என்­றாலும், பத்­தாண்டு கால ஆட்­சிக்குத் தலைமை வகித்­தவர் தேர்­தலில் விவாதப் பொரு­ளா­கவே இருக்­க­வில்லை என்­ப­துதான் மிகப்­பெ­ரிய வேடிக்கை.



பொரு­ளா­தார நிபு­ண­ரான மன்­மோகன் சிங்கைத் தனது நிதி­ய­மைச்­ச­ராக்கி தான் விரும்­பிய பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களை அவ­ரது உத­வியால் நிறை­வேற்றிக் கொண்ட நர­சிம்­ம­ராவின் புத்­தி­சா­லித்­த­னத்தை இந்­திய சரித்­திரம் எப்­படிப் பதிவு செய்து பாராட்­டுமோ, அதே­போன்று, பிர­த­ம­ராக சோனி­யா­காந்­தியால் நிய­மிக்­கப்­பட்ட மன்­மோகன் சிங்கை வருங்­காலம் பாராட்ட ஏதா­வது இருக்­குமா என்று தெரி­ய­வில்லை.

மன்­மோகன் சிங் செயற்­ப­டாத பிர­தமர் என்­கிற குற்­றச்­சாட்டை, பிர­தமர் அலு­வ­லகம் மறுக்­கி­றது. தனது பத்­தாண்டு பத­விக்­கா­லத்தில் பிர­தமர் மன்­மோகன் சிங் 1198 உரைகள் நிகழ்த்­தி­யி­ருப்­ப­தா­கவும், 1600 பத்­தி­ரிகை அறிக்­கைகள் வெளி­யிட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கி­றார்கள். பிர­தமர் மன்­மோகன் சிங்கின் அறிக்­கை­களும், உரை­களும் முன்­னு­ரிமை கொடுத்து ஊட­கங்­களால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பது அவர்­க­ளது குற்­றச்­சாட்டு. அதில் சிறிது உண்­மையும் இருக்­கத்தான் செய்­கி­றது. சோனி­யா­காந்­திக்கும் ராகுல்­காந்­திக்கும் தரப்­பட்ட முக்­கி­யத்­துவம் கட்­சி­யி­னரால் மட்­டு­மல்ல, அவ­ரது அமைச்­ச­ரவை சகாக்­க­ளா­லேயே பிர­தமர் மன்­மோகன் சிங்­கிற்குத் தரப்­ப­ட­வில்லை எனும்­போது ஊட­கங்கள் மட்டும் முன்­னு­ரிமை அளிக்கும் என்று அவர்கள் எப்­படி எதிர்­பார்க்க முடியும்?

பொரு­ளா­தார நிபுணர் என்று உல­கமே மதித்து வியக்கும் பிர­தமர் மன்­மோகன் சிங்கின் தலை­மை­யி­லான பத்­தாண்டு ஆட்­சியில் இந்­தியப் பொரு­ளா­தாரம் வியத்­தகு முன்­னேற்­றங்­களை அடைந்­ததா என்றால், பாராட்­டும்­ப­டி­யாக இல்லை.

முந்­தைய தேசிய ஜன­நா­யகக் கூட்­டணி ஆட்­சியில் தொடர்ந்து வளர்ந்து கொண்­டி­ருந்த இந்­தியப் பொரு­ளா­தாரம் 2003–-04இல் 8.2 வீத வளர்ச்­சியை அடைந்­தி­ருந்­தது. அதே­வே­கத்தில் தொடர்ந்து அடுத்த மூன்­றாண்­டு­களில் மன்­மோகன் சிங் ஆட்­சி­யிலும் 9.57 வீத வளர்ச்­சியை எட்­டி­யது என்­னவோ உண்மை. இந்த வளர்ச்­சிக்கு, முந்­தைய ஆட்சி கார­ணமா, மன்­மோகன் சிங் ஆட்சி கார­ணமா என்­பதை அடுத்­து­வந்த ஆண்­டுகள் வெளிச்சம் போட்­டு­விட்­டன. 9.57 வீத வளர்ச்சி என்­பது படிப்­ப­டி­யாகக் குறைந்து, இப்­போது மன்­மோகன் சிங் பதவி வில­கும்­போது 4.5 வீத­மாக ஆகக் காட்­சி­ய­ளிக்­கி­றது.

மன்­மோகன் சிங்கின் மிகப்­பெ­ரிய சாதனை, சர்­வ­தேச நாடு­க­ளுடன் நல்­லு­றவை வலுப்­ப­டுத்­து­வதில் அவர் காட்­டிய முனைப்பு. வல்­ல­ரசு நாடுகள் கலந்து கொள்ளும் சர்­வ­தேச மாநா­டுகள் அனைத்­திலும் கலந்து கொள்ள அவர் தவ­றி­யதே இல்லை. ஆனா­லும்­கூட, அயல் நாடு­க­ளிடம் இந்­தியா கடைப்­பி­டித்த அணு­கு­முறை அவ­ருக்குப் பெருமை தேடித்­த­ர­வில்லை.

இலங்கைப் பிரச்­சி­னையில் மன்­மோகன் சிங் அரசின் அணு­கு­முறை அவ­ரது சரித்­தி­ரத்தில் மிகப்­பெ­ரிய கரும்­புள்ளி. அவ­ரது கனவுத் திட்­ட­மான இந்­திய -– அமெ­ரிக்க அணு­சக்தி ஒப்­பந்­த­மா­வது வெற்­றி­க­ர­மாக நிறை­வேறி பய­ன­ளித்­ததா என்றால் அதுவும் இல்லை.

பிர­தமர் மன்­மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த பல சாத­னைகள் வெளியில் தெரி­யாமல் நடந்­தி­ருக்­கின்­றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்­விக்­கான உரிமைச் சட்டம், வன உரி­மைப்­பா­து­காப்புச் சட்டம், நிலம் கைய­கப்­ப­டுத்­துதல் மற்றும் இழப்­பீடு வழங்­குதல் சட்டம், கிரா­மப்­புற வேலை­வாய்ப்புத் திட்டம், உண­வுக்­கான உரிமைச் சட்டம், இடித்­து­ரைப்­பாளர் பாது­காப்புச் சட்டம் தொடங்கி மொத்தம் 26 சட்­டங்கள் மன்­மோகன் சிங் அரசால் நிறை­வேற்­றப்­பட்டு, இந்­திய ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை வலுப்­ப­டுத்தி இருக்­கின்­றன என்­பதை நாம் மறந்­து­வி­ட­லா­காது.

மக்­க­ள­வைக்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாமல், மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கவே பத்து ஆண்­டுகள் தொடர்ந்து பத­வியில் இருந்தார் என்­பது மட்­டு­மல்ல பிர­தமர் மன்­மோகன் சிங்கின் சாதனை. தனது கூட்­ட­ணியில் இரண்­டா­வது பெரிய கட்­சி­யா­கவும், தான் பிர­த­ம­ராகத் தொடர்­வ­தற்குத் கார­ண­மா­கவும் இருந்த திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தனிப்­பெரும் தலை­வரின் மகளை ஊழல் புகாரில் திஹார் சிறையில் அடைத்­தும்­கூட, தனது ஆட்­சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவரால் பிரதமராகத் தொடர முடிந்ததே, அது பெரிய சாதனை அல்லவா?

ஒரு கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்து பத்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகத் தொடர்ந்தார் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் மிகப் பெரிய சாதனையாக வருங்காலத்தில் பேசப்படக்கூடும். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்று ஒரு சாமர்த்தியம் வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். மன்மோகன் சிங்கிடம் அந்த இரண்டுமே இருந்தன.

[தினமணி]


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல