ஞாயிறு, 18 மே, 2014

தந்தையானதால் தனது வாழ்வு முடிந்து விட்டதாக சினமடைந்து 5 வார மகனை படுகொலை செய்த நபர்

தந்­தை­யா­னதால் தனது வாழ்வு முடி­வுக்கு வந்து விட்­ட­தாக சின­ம­டைந்த இளம் தந்­தை­யொ­ருவர் தனது 5 வார மகனின் முகத்தை தொட்­டி­லுடன் மோதி அவனை படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 Matthew Wickens, 24
டெவொன் பிராந்­தி­யத்தில் பெயிக்ன் டொன் எனும் இடத்தைச் சேர்ந்த மத்­தியூ விக்கென்ஸ் (24 வயது) என்ற தந்­தையே தனது 5 வார மக­னான றிலே கார்ட்­னரை படு­கொலை செய்­துள்ளார்.

குழந்­தையின் முகத்தை தொட்­டி­லுடன் மோது­வ­தற்கு முன்னர் அவனை மோச­மான முறையில் அவர் குலுக்­கி­யுள்ளார்.

அதேசமயம் மேற்­படி குழந்­தையின் படு­கொலை தொடர்பில் அலட்­சி­ய­மாக இருந்­த­மைக்­காக அவ­னது தாயா­ரான ஜெம்மா கார்ட்­னரும் சந்­தே­கத்தின் பேரில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறார்.

அத்­துடன் மேற்­படி தம்­ப­தியின் பிறி­தொரு 14 மாத மக­னான ஜேடன், அவர்­க­ளி­மி­ருந்து மீட்­கப்­பட்டு சமூக பணி­யா­ளர்­களின் பரா­ம­ரிப்பில் வாழ்­வ­தற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளான்.

இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த எக்ஸ்டர் கிறவுன் நீதிமன்றம் மத்தியூ விக்கென்ஸுக்கு 6 வருடங்கள் 5 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல