ஞாயிறு, 1 ஜூன், 2014

மலே­ஷி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம்!

மலே­சி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம் நில­வு­வ­தாக சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நபர் அவுஸ்­தி­ரே­லியா அனுப்­பு­வ­தாக ஏமாற்­றியே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவரின் மனைவி குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.



மட்­டக்­க­ளப்பு, களு­தா­வ­ளையை பிறப்­பி­ட­மாக கொண்ட அருந்­த­வச்­செல்வன் சச்­சுதன் என்­பவர் கடந்த 24ஆம் திகதி மலே­ஷி­யாவில் இடம்­பெற்ற வாகன விபத்தில் உயி­ரி­ழந்தார். இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், கடந்த நான்கு வருட கால­மாக மலே­ஷி­யாவில் தொழில் புரிந்­து­வந்­துள்ளார்.

நேற்­று ­முன்­தினம் அவ­ரு­டைய சடலம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டது. இதன் போது அவ­ரு­டைய மனைவி கருத்து தெரி­விக்­கையில்,

எனது கணவர் கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­னரே அவுஸ்­தி­ரே­லிய செல்­வ­தற்­காக ஒரு தர­க­ரிடம் 8 இலட்சம் ரூபா பணத்தை செலுத்த வேண்­டி­யுள்­ளது என்றும், அதற்­கான பணத்தை தனது கணக்­குக்கு போடும்­ப­டியும் கூறினார். அதன்­படி பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், தரகர் அவுஸ்­தி­ரே­லியா அனுப்­பு­வ­தாகக் கூறி அவரை ஏமாற்­றி­விட்டார்.

இதன் கார­ண­மாக இறந்­த­வ­ருக்கும் தர­க­ருக்கும் இடையில் பல முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. இவற்­றை­யெல்லாம் எனது கணவர் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். எனவே, அவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல