ஞாயிறு, 1 ஜூன், 2014

15 வயது சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்:மலேஷியாவில் அதிர்ச்சி

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.


மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் தனது தோழியை பார்க்க சென்றாள். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் 15 வயது இளம் பெண்ணை கடத்தி சென்றது. பின்னர் அங்கு கேட்பாரற்று கிடந்த குடிசைக்குள் அவளை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பெண்ணை 38 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் தோழியும் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவளிடமும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடும் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும் என முஸ்லிம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல