புதன், 7 ஜனவரி, 2015

அடையாளம் காண உதவுங்கள்

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஸ்ரீ ராம­நாதன் மாவத்­தையில் இடம்­பெற்ற விபத்து ஒன்றில் உயி­ரி­ழந்த ஒரு­வரின் சட­லத்தை அடை­யாளம் காண பொது­மக்­களின் உத­வியை பொலிஸார் நாடி­யுள்­ளனர்.



பொலிஸ் பிரேத அறையில் தற்­போது குறித்த நபரின் சடலம் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரின் புகைப்­படம், அங்க அடை­யா­ளங்­களை வைத்து அவர் தொடர்பில் தக­வல்­களைப் பெற்­றுத்­த­ரு­மாறு கொட்­டாஞ்­சேனை பொலிஸார் பொது­மக்­க­ளிடம் வேண்­டு­கின்­றனர்.

விபத்து இடம்­பெறும் போது குறித்த நபர் கறுப்பு நிற நீளக் காற்­சட்­டையும் இளம் நீல நிற சேட்டும் அணிந்­தி­ருந்­துள்­ள­துடன் தலை முடி, தாடி ஆகி­யன சில நாட்­க­ளுக்கு முன் வெட்­டப்­பட்­டதை போன்று காட்­சி­ய­ளிப்­ப­தா­கவும் பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.

அத்­துடன் இவர் 5 அடி 6 அங்­குல உய­ர­மா­னவர் என குறிப்­பிடும் பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலை­யத்தின் போக்குவரத்துப் பிரி­வுக்கு நேர­டி­யா­கவோ அல்­லது 0112431861, 0112432898, 0112435653 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்தோ அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல