அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள மிருகக்காட்சிசாலையொன்று கடல் பறவைகளான பென்குயின்களுக்கான ஐபாட் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
லோங் கடற்கரை பிராந்தியத்திலுள்ள மேற்படி பசுபிக் நீர்வாழ் உயிரின காட்சியகத்திலுள்ள பென்குயின்கள், பூனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட எலி பிடிக்கும் விளையாட்டை ஐபாட் திரையில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதாக அந்த காட்சியகத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விளையாட்டின் போது ஐபாட் திரையில் காட்சிப்படுத்தப்படும் எலிகளை பென்குயின்கள் தமது அலகை பயன்படுத்தி கொத்த முயற்சிப்பது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக