புதன், 7 ஜனவரி, 2015

ஐ.எஸ். போராளி குழுவினரால் 8 ஈராக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஐ.எஸ். போரா­ளிகள் தொடர்பில் ஈராக்­கிய அர­சாங்­கத்­துக்கு தகவல் அளித்த குற்­றச்­சாட்டில் அந்தப் போராளி குழுவால் 8 ஈராக்­கிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மரணதண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.



‘தீர்ப்பு தினம்’ என்ற தலைப்பில் ஐ.எஸ். போரா­ளி­களால் இணை­யத்­த­ளத்தில் மேற்­படி புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அந்தப் போராளிக் குழுவால் அடுத்து வெளி­யி­டப்­ப­ட­வுள்ள வீடியோ காட்­சி­யி­லி­ருந்தே அந்த புகைப்­ப­டங்கள் எடுக்­கப்­பட்டிருந்தன.

மேற்படி புகைப்­ப­டங்­கள் செம்­மஞ்சள் ஆடை அணிந்து கண்கள் கட்­டப்­பட்டு ஆற்­றங்­க­ரை­யோ­ர­மாக அமைந்த பால­மொன்றின் கீழ் மண்­டி­யிட்­டி­ருந்த 8 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் ஐ.எஸ். போரா­ளி­களால் கொல்­லப்­ப­டு­வதை காண்­பிக்­கின்­றன.

மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட ஈராக்­கிய படைவீரர்கள் பல­ரது பெயர்கள் அந்தப் புகைப்­ப­டங்­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

அர­சாங்­கத்­துக்கு தகவல் அளிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்ட மேற்படி குழுவின் தலைவர் கப்டன் ஹொஸ்ஸம் சலாஹ் பனோஷ் என ஐ.எஸ். போரா­ளி­களின் ஊட­கத்தில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளார்.

பனோஷும் ஏனைய ஏழு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் ஐ.எஸ். போராளி குழுவில் இணையும் முக­மாக சுன்னி இஸ்லாம் மதத்­துக்கு மாறி­ய­தாகவும் பின்னர் அவர்கள் ஈராக்­கிய அர­சாங்­கத்­துக்­காக ஐ.எஸ். போரா­ளி­களை இர­க­சி­ய­மாக உளவு பார்த்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

அர­சாங்­கத்­துக்கு தகவல் அளிப்­பதில் ஈடு­பட்ட மேற்­படி குழுவில் அஹமட் பஸில் ரமடான் என்­பவர், ஐ.எஸ். போராளிக் குழு ­வினரின் வீடுகள் தொடர்பில் தக­வ­ல­ளித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் நுணுக்­குப்­பன்னி கரு­வியை அணிந்­தி­ருந்த மாவன் ஹபிப் ஷெயித் என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர், ஐ.எஸ். போராளிக் குழுவில் இணைந்து அந்தப் போராளி குழு தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு தகவல் அளித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

அந்த 8 பேருக்கும் தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ஐ.எஸ். போரா­ளி­களால் சலா­ஹுதீன் மாகா­ணத்தில் 13 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டு சில வாரங்களிலேயே மேற்படி புதிய மரணதண்டனை நிறைவேற்ற வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல