ஞாயிறு, 5 ஜூலை, 2015

பூனைகள் தமது சிறு­நீ­ரி­லுள்ள இர­சா­ய­னங்கள் மூலம் எலி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன ரஷ்ய ஆய்­வா­ளர்கள்

அதி வேக­மாக தப்­பி­யோடும் எலி­களை எவ்­வாறு பூனை­க­ளுக்கு மட்டும் பிடிப்­பது சாத்­தி­ய­மா­கி­றது என்ற மர்­மத்­திற்கு விடை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக ரஷ்ய ஆய்­வா­ளர்கள் உரிமை கோரி­யுள்­ளனர்.



மொஸ்­கோ­வி­லுள்ள அன் செவர்டோவ் சூழ­லியல் மற்றும் கூர்ப்பு நிறு­வ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் முடி­வுகள் செக் குடி­ய­ரசில் இடம்­பெற்ற பரீட்­சார்த்த உயி­ரியல் சபையின் வரு­டாந்த கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பூனை தனது சிறு­நீரில் காணப்­படும் பெலினைன் என்ற இர­சா­யன உள்­ள­டக்­கத்தால் எலி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

பூனையின் சிறு­நீ­ரி­லுள்ள இர­சா­ய­னத்­துக்கு முகங்­கொ­டுக்கும் இளம் எலிகள், தமது பிந்­திய வாழ்க்­கையில் அந்த இர­சா­ய­னத்தை தவிர்க்க முடி­யாத நிலைக்கு உள்­ளா­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பூனை­களின் சிறு­நீ­ரி­லுள்ள இர­சா­யன வாச­னையை எலிகள் நுகரும் போது, அவற்றின் மூளையின் நரம்­புக்­க­லங்­க­ளி­லுள்ள இர­சா­யன உணர்­க­லங்கள் அந்த வாச­னையை உள்­வாங்­கு­கின்­றன.

அது அவற்றில் ஹோர்

­மோன்­களின் மட்­டங்­க­ளி­லான அதி­க­ரிப்பு உள்­ள­டங்­க­லான பிர­தி­ப­லிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

விருத்தி நிலையில் இந்த இர­சா­ய­னத்­துக்கு முகங்­கொ­டுக்கும் இளம் எலிகள், அந்த இர­சா­ய­னத்தால் அவற்றின் மூளையில் ஏற்படும் பாதிப்புக் காரணமாக அந்த வாசனையை தவிர்க்க முடியாது தப்பியோடும் முயற்சியை பெருமளவிற்கு கைவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல