ஞாயிறு, 5 ஜூலை, 2015

தினமும் 50 இராணுவ வீரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினர் (படங்கள் இணைப்பு)

இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் கதை

இரண்டாம் உல­கப்­போரின் போது தினமும் 50 ஜப்­பா­னிய இராணுவ வீரர்­க­ளுடன் உறவு வைத்­துக்­கொள்ள கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பாலியல் அடி­மை­யாக நடத்­தப்­பட்ட மூதாட்டி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.



தென் கொரி­யாவை சேர்ந்­தவர் லீ ஒக் சியோன்(Lee Ok Sean 87). இவர் கடந்த இரண்டாம் உல­கப்­போரின் போது ஜப்­பா­னிய இராணுவ வீரர்­களால் பாலியல் அடி­மை­யாக நடத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் கூறி­ய­தா­வது, எனது 15 வயதில் நான் ஜப்­பா­னிய இராணுவ முகாமில் விப­சா­ரத்தில் கட்­டா­ய­மாக ஈடு­ப­டுத்­தப்­பட்டேன். என்­னோடு ஏரா­ள­மான சிறு­மிகள் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். மேலும் நான் தினமும் 50 ஜப்­பா­னிய இராணுவ வீரர்­க­ளுடன் உறவு வைத்­துக்­கொள்ள கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டேன் என்று தெரி­வித்­துள்ளார்.

முகாமில் இருந்து பல முறை தப்­பிக்க முயற்சி செய்­த­தா­கவும் எனினும் இராணுவ வீரர்கள் எளி­தாக பிடித்­து­விட்­ட­தா­கவும் லீ தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட தனக்கு நிவா­ர­ண­மாக 16 மில்­லியன் பவுண்ட தர வேண்டும் என கோரி அவர் ஜப்­பா­னிய அர­சாங்­கத்தின் மீது வழக்கு தொடர்ந்­துள்ளார். மேலும் இந்த செய­லுக்­காக வருத்தம் தெரி­விக்­க­வேண்டும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது குற்­றச்­சாட்டை ஜப்பான் மறுத்துள்ளது. மேலும் அவர் இரண்டாம் உலகப் போரின் போது பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரி வித்துள்ளது.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல