ஞாயிறு, 5 ஜூலை, 2015

கடன் கொடுத்­தோரைக் கலங்­க­டிக்கும் கிரேக்கம்

1991ஆம் ஆண்டில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்­ட­மைப்­பிலும் கிரேக்கம் இணைந்து கொண்­டது. தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் 28 நாடு­களும் நாணயக் கட்­ட­மைப்பில் 19 நாடு­களும் இருக்­கின்­றன. இரண்­டிலும் இணை­யும்­போது கிரேக்கம் தனது பொரு­ளா­தாரம் தொடர்­பான தக­வல்­களைத் திரித்துக் கூறி­யி­ருந்­தது என்ற குற்­றச்­சாட்டும் உண்டு.



யூரோ நாணயக் கட்­ட­மைப்பில் இருப்­பதால் ஒரு நாட்டின் நாண­யத்தின் பெறு­மான மாற்­றங்­களால் ஏற்­படும் பாத­கங்கள் குறை­வ­டை­கின்­றன. நாணயக் கட்­ட­மைப்பில் உள்ள நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­தகம், முத­லீடு போன்­றவை இல­கு­வாக நடக்கும். நாணயக் கட்­ட­மைப்பில் இருக்கும் ஒரு நாடு தனது உள்­நாட்டுப் பொரு­ளா­தார நிலை­க­ளுக்கு ஏற்ப நாண­யத்தின் பெறு­ம­தியை மாற்­றி­ய­மைக்க முடி­யாது.

2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து கிரேக்கம் பொரு­ளா­தார நெருக்­க­டி­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இக்­கா­ல­கட்­டத்தில் மூன்று

பொரு­ளா­தார வீழ்ச்­சி­களை அது சந்­தித்­துள்­ள­துடன், அதன் கடன் மொத்தத் தேசிய உற்­பத்­தியின் 180 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

கிரேக்­கத்தில் தற்­கொலை செய்­வோரின் எண்­ணிக்கை 35 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. ஜேர்­ம­னியின் பொரு­ளா­தார சூழ்­நி­லைக் கேற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும், யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாண­யத்தைத் தமது நாண­ய­மாகக் கொண்ட கிரேக்கம், வட அயர்­லாந்து, ஸ்பெயின், இத்­தாலி, போர்த்­துக்கல் போன்ற நாடு­க­ளுக்கு ஒத்­து­வ­ர­வில்லை. இவற்றில் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட நாடு கிரேக்கம். தற்­போது கிரேக்­கத்தில் வேலை­யில்­லாப் ­பி­ரச்­சினை 26 விழுக்­கா­டா­கவும் இதில் 25 வய­திற்குக் குறைந்தோர் மத்­தியில் இந்த விழுக்­காடு 50 ஆகவும் இருக்­கின்­றது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சிக்­கன நட­வ­டிக்கை நிபந்­த­னை­க­ளுக்கு ஏற்ப அயர்­லாந்தும் போர்த்­துக்­கலும் தமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வெகு­வாக சீர­மைத்­துள்­ளன. சைப்­பிரஸ் தேசமும் இவ்­வாறே தேறிக் கொண்­டிக்­கின்­றது. சிக்­கன நட­வ­டிக்­கை­களைச் சிறப்­பாக செய்த ஸ்பெயின் இப்­போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்­றாகும்.

கடன்­பட்டு கடன் நிலுவை கொடுக்க முயன்ற கிரேக்கம்

தான் பட்ட கடன்­க­ளுக்கு உரிய தவ­ணை­முறைக் கொடுப்­ப­ன­வு­களைக் கிரேக்கம் கொடுக்க முடி­யாமல் போகும் போதெல்லாம் அதற்கு கடன் வழங்­கிய ஐரோப்­பிய ஒன்­றியம், ஐரோப்­பிய மைய வங்கி, ப.நா.நிதியம் ஆகி­யவை கிரேக்க அரசு சிக்­கன நட­வ­டிக்­கை­களைச் செய்ய வேண்டும் என நிர்ப்­பந்­தித்­தன. இதனால் சமூ­க­நலக் கொடுப்­ப­ன­வுகள் பாதிக்­கப்­பட்­டன. அரசின் செல­வீ­னங்கள் குறைந்­ததால் நாட்டின் மொத்தத் தேசிய உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. இதனால் அரச சிக்­கன நட­வ­டிக்­கைக்கு எதி­ரான அலை கிரேக்­கத்தில் எழுந்­தது.

ஜேர்­ம­னிக்கு எதி­ராக கிரேக்க ஆட்­சி­யாளர்

நான்கு ஆண்­டுகள் அரச சிக்­கன நட­வ­டிக்­கை­களால் சலிப்­ப­டைந்த கிரேக்க மக்கள், அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலை­மை­யி­லான தீவிர இட­து­சாரிக் கட்­சி­யான சிரி­ஸா­வுக்கு வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்­மைக்கு இரண்டு இடங்கள் பற்­றாக்­குறை என்­ற­ப­டியால் சிக்­கன நட­வ­டிக்­கைக்கு எதி­ரான கொள்கை கொண்ட வல­து­சாரிக் கட்­சி­யான சுதந்­திர கிரேக்கக் கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்­சியைக் அமைத்துக் கொண்­டது. இது ஐரோப்­பாவில் பெரும் அதிர்­வ­லையை உரு­வாக்­கி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பெரி­யண்ணன் ஜேர்­ம­னி­யுடன் கடன் பிரச்­சி­னையில் மோதிக் கொண்­டி­ருக்கும் கிரேக்­கத்தின் தலைமை

அமைச்சர் பத­வியை ஏற்­ற­வுடன் அலெக்ஸிஸ் சிப்ரஸ் முதல் செய்த வேலை, இரண்டாம் உலகப் போரின்­போது ஜேர்­ம­னி­யர்­களால் கொல்­லப்­பட்­ட­வர்­களின் நினைவுச் சின்­னத்­திற்கு மலர் வைத்து அஞ்­சலி செலுத்­தி­ய­மையே.

அத்­துடன் அவர் ரஷ்­யா­விற்கு எதி­ரான பொரு­ளா­தாரத் தடைக்கு எதி­ராகக் குரல் கொடுத்­தமை ஐரோப்­பாவின் பல நாடு­களின் பாது­காப்புத் துறை­யி­னரை அதிர வைத்­துள்­ளது. கிரேக்­கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலை­மை­யி­லான சிரிஸா கட்சி வெற்றி பெற்­றது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னைக்கு ஏற்ப சிக்­கன நட­வ­டிக்­கை­களைச் செய்து கொண்­டி­ருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்­தாலி ஆகிய நாடு­களில் உள்ள தீவிர இட­து­சாரிக் கட்­சி­க­ளுக்கு ஆத­ரவு பெரு­கி­ய­துடன் அக் கட்­சி­களும் புதிய உத்­வேகம் பெற்­றுள்­ளன.

பன்­னாட்டு நாணய நிதியம்

அர­சுகள் சமூகக் கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­பதும் அதற்­கான பணத்தை வரி அதி­க­ரிப்பின் மூலம் அற­வி­டு­வதும் இட­து­சா­ரிகள் செய்­பவை. இதன் மூலம் வசதி குறைந்த மக்­களின் வாழ்கைத் தரத்தை உயர்த்­தலாம் என்­பது அவர்­களின் கொள்கை. ஆனால், இது பொரு­ளா­தா­ரத்­திற்கு ஒத்­து­வ­ராது என்­பது முத­லா­ளித்­துவப் பொரு­ளி­ய­லா­ளர்­களின் நம்­பிக்கை. இப்­ப­டிப்­பட்ட இட­து­சா­ரிகள் எந்த நாட்­டி­லா­வது ஆட்­சியில் இருப்­பதைப் பன்­னாட்டு நாணய நிதியம் விரும்­பு­வ­தில்லை. கிரேக்கம் அதிகம் கடன் பட்­டது, ஐரோப்­பிய ஒன்­றியம், ஐரோப்­பிய மைய வங்கி பன்­னாட்டு நாணய நிதியம் ஆகி­ய­வற்­றி­ட­மி­ருந்­தாகும்.

கிரேக்­கத்தின் விடாப்­பிடி

ஏற்­க­னவே சோமா­லியா, சிம்­பாப்வே, சூடான் ஆகிய நாடுகள் பன்­னாட்டு நாணய நிதி­யத்தின் கடனை மீளக் கொடுக்க முடி­யாமல் போனது. ஆனால் ஒரு வளர்ச்­சி­ய­டைந்த நாடு, ஓர் ஐரோப்­பிய நாடு ப.நா.நிதி­யத்தின் கடன் நிலு­வையைக் கொடுக்க முடி­யாமல் போவது இதுதான் முதற்­த­டவை. ஆனால் கடன் நிலுவை கொடுக்கத் தவறும் நாடு­க­ளுக்கு முப்­பது நாள் கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­துண்டு.

ஜூன் 30 ஆம் திகதி நள்­ளி­ர­விற்கு முன்னர் கிரேக்கம் தான் மீளச் செலுத்த வேண்­டிய கடன் தவணைத் தொகை­யான 1.6 பில்­லியன் யூரோவைச் செலுத்­து­வ­தற்குப் புதிய கட­னாக 32பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைத் தனக்குக் கடன் கொடுத்த ப.நா. நிதியம், ஐரோப்­பிய ஒன்­றியம், ஐரோப்­பிய மைய வங்கி ஆகிய மூன்று தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் கோரி­யது. அதற்கு அந்த மூன்று தரப்­பி­னரும் கிரேக்கம் அரச ஊழி­யர்­க­ளி­னது ஊதி­யத்­தையும் ஓய்­வூ­தியக் கொடுப்­ப­ன­வு­க­ளையும் குறைக்கும் படியும் விற்­பனை வரி­களை அதி­க­ரிக்கும் படியும் குறைந்த ஓய்­வூ­தியம் பெற்­ப­வர்­க­ளுக்­கான சமூ­க­நல கொடுப்­ப­ன­வு­களை நிறுத்தும் படியும் நிபந்­த­னைகள் விதித்­தன.

அரச ஊழி­யத்­தையும் ஓய்­வூ­தி­யத்­தையும் குறைக்க கிரேக்க அரசு மறுத்­தது. மருந்­து­க­ளுக்­கான விற்­பனை வரி அதி­க­ரிப்­பிற்கும் மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் காத்­தி­ர­மான கடன் நிவா­ர­ணத்­தையும் கிரேக்கம் கோரி­யி­ருந்­தது. கிரேக்கம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­னதும், ஐரோப்­பிய மைய வங்­கி­யி­னதும் பன்­னாட்டு நாணய நிதி­யத்­தி­னதும் நிபந்­த­னைகள் தொடர்­பாக கிரேக்க மக்­களின் கருத்­துக்­களை அறிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என அறி­வித்­தது.

இது அந்த மூன்று தரப்­பி­ன­ரையும் ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­ய­துடன் உலக நாடு­க­ளிலும் உலக நிதிச் சந்­தை­யிலும் பெரும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் புதிய கடன்கள் கிரேக்­கத்­திற்கு வழங்க அந்த மூன்று தரப்­பி­னரும் மறுத்­தனர். இதனால் ஜூன் 30ஆ-ம் திகதி கொடுக்க வேண்­டிய கடன் தவணைக் கொடுப்­ப­னவை கிரேக்க அரசால் செய்ய முடி­யாமல் போனது.

இதைக் கடன் கொடுக்கத் தவ­றி­யமை என ப.நா. நிதியம் கரு­தாமல் நிலுவைப் பணத்தைக் கொடுக்கப் பிந்­தி­யது என அறி­வித்­தது. முதலில் கிரேக்­கத்­திற்கு 30 நாள் அவ­காசம் வழங்­கப்­பட மாட்­டாது என அறி­விக்கப் பட்­டி­ருந்­தது.

மிரட்டப் போய் வாங்கிக் கட்­டிய கிரேக்கம்

நாடு­களின் கடன்­படு திறனைத் தரப்­ப­டுத்தும் முக­வ­ர­கங்­களில் ஒன்­றான ஃபிட்ச், கிரேக்­கத்தின் தரத்தை "சிசிசி" இலிருந்து "சிசி"இக்குக் குறைத்­துள்­ளது. நாடு­களின் கடன்­படு திறன் குறையும் போது அந்த நாட்டின் நாண­யத்தின் பெறு­மதி குறையும். ஆனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்­ட­மைப்பில் இருப்­பதால் யூரோ நாண­யத்தின் மீது தாக்கம் ஏற்­பட்­டது. கிரேக்­கத்தின் அரச கடன் முறி­களின் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்­டது. கிரேக்கம் தனது கடன்­களைச் செலுத்த முடி­யாமல் போனால் அது யூரோ நாணயக் கட்­ட­மைப்­பி­லி­ருந்தும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்தும் விலகும் நிலை ஏற்­ப­டலாம். அப்­படி வில­கு­வதால் கிரேக்­கத்­திற்குக் கடன் கொடுத்த நாடு­க­ளுக்கு இழப்­பீடு ஏற்­படும்.

ஜேர்­ம­னிக்கு 61 முதல் 84 பில்­லியன் யூரோக்கள் இழப்­பீடு ஏற்­ப­டலாம். இதை மனதில் கொண்ட கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் எப்­ப­டி­யா­வது ஜேர்­மனி இறு­தியில் இறங்கி வந்து தனது வேண்­டு­கோள்­க­ளுக்குச் சம்­ம­திக்கும் என நம்­பினார். தனது இறுதி மிரட்­ட­லாக அவர் அறி­வித்த கருத்துக் கணிப்பை எடுத்து விட்டார். அது அவ­ருக்குக் கடன் கொடுத்­த­வர்­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை கூட்­டி­யது.

ஜூன் 30 ஆம் திகதி கிரேக்கம் ப.நா. நிதி­யத்­திற்குக் கொடுக்க வேண்­டி­யதைக் கொடுக்க முடி­யாமல் போகும் என்­ற­வுடன் பல மாற்­றங்கள் கிரேக்­கத்தில் நிகழ்ந்­தன. வங்­கி­களின் வாடிக்­கை­யா­ளர்கள் தமது பணத்தை மீளப்­பெறப் பல முயற்­சிகள் செய்­தனர். 29ஆம் திக­தியே வங்­கிகள் இழுத்து மூடப்­பட்­டன. அரச நிதிப் பற்­றாக்­கு­றை­யினால் முன்னாள் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொ டுப்பனவு அரைவாசியாக்கப்பட்டது.

நிலைமை மோசமாகப் போய்க் கொண் டிருப்பதை அவதானித்த கிரேக்கத் தலைமை அமைச்சர் அலெக்சிஸ் சிப்ரஸ் மீண்டும் ஜுலை முதலாம் திகதி ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் கடன் கொடுத்தோர் ஜூலை 5ஆம் திகதி அலெக்சிஸ் சிப்ரஸ் செய்யவுள்ள கருத்துக் கணிப்பின் பின்னர் பேச்சு வார்த்தை செய்யலாம் என மறுத்து விட்டன.

கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப் பிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் விலகினால் என்ன பாதிப்புக்கள் இந்த இர ண்டுக்கும் நடக்கும் என்பதைச் சரியாக எதிர்வு கூற முடியாமல் இருக்கின்றது.

கிரேக்கம் யூரோவில் இருந்து விலகி தனது பழைய நாணயமான டிரச்மாஸை மீண்டும் அறிமுகம் செய்து, அதை ஒரு மலிவான நாணயமாக்கினால் அதன் ஏற்று மதி அதிகரித்து பொருளாதாரம் வளர வாய் ப்புண்டு.

வேல் தர்மா

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல