ஞாயிறு, 5 ஜூலை, 2015

தலைவலியை குணமாக்கும் மிளகு

உடலின் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்கும் மிளகு, நமக்கு ஆரோக்­கிய வாழ்க்­கையை வழங்­கு­கி­றது.

அன்­றாட வாழ்வில் சேர்த்துக் கொள்­ளக்­கூ­டிய மருத்­துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.



*இதில் மங்­கனீஸ், இரும்பு, பொட்­டா­சியம், விற்றமின் சி, விற்றமின் கே மற்றும் நார்ச்­சத்து என்­பன அடங்கி யுள்­ளன.

*வலி மற்றும் காது சம்பந்­த­மான பிரச்­ச­னைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்­குவான் இருமல், ஆஸ்­துமா போன்­ற­வற்­றிற்கு தீர்வு தரும்.

*நரம்­புத்­த­ளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறை­பாடு, முது­மையில் உண்­டாகும் மாறாட்டம் இவற்­றிற்கு மிளகு சிறந்த மருந்­தாகும்.

*மிள­குடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்­பிட்டு வந்தால் தலைப்­பாரம், தலை­வலி போன்­றவை குண­மாகும்.

*மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலை­வலி குண­மாகும் அது மட்டுமின்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்­டாலும் தலை­வலி விரைவில் குண­மாகும்.

*தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்­றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்­ப­டி­யாக குண­மாகும்.

*மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறி­த­ளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறி­த­ளவு நெய் சேர்த்து சாப்­பிட்டால் வயிற்று உப்­புசம், பசி­யின்மை போன்­றவை உடனே குண­மாகும்.

*சளி, தடிமன் அதி­க­மாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல