ஜாதக கிரக நிலையில் ஒருவரின் ஆளுமைத்திறனுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்தஸ்துடைய கெளரவமான வாழ்விற்கும் முக்கிய காரணியாக அமைபவர் பிரகஸ்பதி எனப்படும். குருபகவான். இவர் வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக சஞ்சாரம் செய்பவர். அதன் மூலமாக பன்னிரு ராசிகளுக்கும், பலாபலன்கள் நன்மை, தீமை என அமைவதுண்டு. அந்த வகையில். வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி நேற்று ஞாயிறு பின்னிரவு 11 மணி 41 நிமிட நேரமளவில் கடகராசியில் இருந்து தனது நட்பு வீடான சிம்மராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமாரான பலன், மத்திம பலன் என பலாபலன்கள் ஏற்படும்.
எனவே அதற்குரிய வழிபாடு, செயற்பாடு என்பன எம்மைக் காத்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாம் எல்லோரும் எங்கள் மனங்களிலே அன்பு, அறம், அடக்கம், கொண்டு செயற்பட்டால் இறையருள் எமக்குள் இருக்கும். பெரும் துன்பங்கள் எம்மை அணுகாமல் காத்திடும். எனவே இறைவன் தந்த இந்த அற்புதமான மனிதப்பிறப்பில் “மனிதம்” எனும் மேன்மையை மறந்து செயற்படுகின்ற எமக்கு கிரகங்கள் விதிவழியாக வந்து எமக்கு அறிவுரை தருகின்றன. தமது பலன் மூலமாக இதை நன்கு உணர்ந்து நாம் செயற்பட்டு வாழ்வியலை வளமாக்குவோம்.
மேடம்
(அஸ்வினி, பரணி,
கார்த்திகை 1ஆம் பாதம்)
மேடராசி அன்பர்களே!
உங்களுக்கு அமையப் போகும் குருப் பெயர்ச்சி அமோகமானதாகவே இருக்கும். பஞ்சமஸ்தானம் எனப்படும் 5ஆம் இடம் குருபகவான் அமைகின்றார். எல்லா விதமான சிறப்புகளையும் பெறக்கூடிய நிலை அமையும். எதிர்பார்ப்புகளில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும்.குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் அமையும். உங்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் தீருகின்ற நிலை அமையும். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் நிலை உண்டு. கொடுக்கல் வாங்கல் விடயங்களில் சுமுகமான நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக நன்மைகள் பெறக்கூடிய நிலைகள் அமையும். பிள்ளைகளின் மூலம் அனுகூலங்கள் அமையும். உங்களின் ராசிக்கு அட்டமத்து சனியின் சஞ்சாரம் நடைபெறுவதால் இடையிடையே சிறு சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் அமையலாம். இருப்பினும் பெரும் சிரமமான பலன்களுக்கு இடமில்லை. மனதில் இருக்கின்ற சுமைகள் நீங்கக்கூடிய நிலை இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் மற்றும் குழந்தைப் பேறு போன்ற பலாபலன்களை எதிர் கொள்கின்றவர்களுக்கு அப்போது நிறைவுடையதாக கிடைக்கும் நிலை உண்டு. பெண்களுக்கு மகிழ்வும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மையும் அமையும் நிலைகள் உண்டு. எனவே எல்லா வகையிலும் இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் நன்மைகளைப் பெறலாம். எதையுமே தீர்க்கமாக சிந்தித்து செயற்படுகின்ற ஆற்றலும் நல்ல ஆளுமை நிறைந்த நிர்வாகத்திறனும் கொண்ட நீங்கள் இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலமாக உங்களின் உண்மையான உழைப்பிற்குரிய உன்னத பலன் பெறுவீர்கள்.
இடபம்
(கார்த்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1ஆம், 2ஆம் பாதம்)
இடபராசி அன்பர்களே!
உங்களுக்கு அமையும் குருவின் பெயர்ச்சி பலன்கள் ஓரளவிற்கு அனுகூலம் தருவதாய் அமையும். தொழில் நிலைகளில் சற்று அலைச்சல் நிலைகள் அமைந்தாலும் தொழில் சார்ந்த முன்னேற்றம் அமையும். குடும்ப நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலன் ஏற்படும். இருப்பினும் தாயாருடன் சிறு சிறு மனச்சஞ்சல நிலைகள் இடையிடையே ஏற்பட்டு மறையும். எதிர்பாராதவகை திடீர் மருத்துவச் செலவுகளும் அமையும் நிலை இருக்கும். புதிய முயற்சிகளில் சற்று பொறுமை நிதானத்துடன் செயற்படவும். கடன் பிரச்சினைகள் சற்று இழுபறி நிலைகளைக் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் பொறுமையாக செயற்படவும். பொதுவாகவே எதிர்பாராத வகையில் திடீர் சிக்கல் நிலைகளும் மனச்சஞ்சல நிலைகளும் இடையிடையே ஏற்படுகின்ற நிலை இருக்கும். திருமணம், வெளிநாட்டுப் பிரயாணம் போன்ற விடயங்களை எதிர் கொள்கின்றவர்கட்கு சற்றுச் சிரமங்களும் இழுபறி நிலைகளும் ஏற்படும். எனவே அதற்கு ஏற்புடையதான பொறுமையான நிதானமான செயற்பாடு கொள்வதே மிகவும் நல்லது. மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நிலையிலே அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். பொதுவாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் சற்று அலைச்சலும் இழுபறி நிலையும் தொடரும். எல்லா விடயங்களிலும் தனித்துவமான ஒரு போக்கையும் மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியாத இறுக்கமான இதயமும் கொண்ட நீங்கள் எதையும் ஆளுமையுடன் செயற்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். எனவே சாதுர்யமாக செயற்பட்டு உங்கள் தேவைகளை அடைவீர்கள்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3ஆம் 4ஆம் பாதம்,
திருவாதிரை, புனர்பூசம் 1ஆம் 2ஆம்
3ஆம் பாதம்)
மிதுனராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் ஜெயஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் சஞ்சரிக்கின்றார். எனவே பெரும் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எதையும் சற்று நிதானமுடன், பொறுமையுடன் செயற்படுவதே உங்களுக்கு மிக நல்லது. தொழில் நிலைகளில் தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். வேலைப்பளு சற்று அதிகமாக அமையும். எதிர்பார்ப்புகளில் தடை, தாமத நிலைகள் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப செயற்படவும். குடும்ப நிலையில் சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். தொழில் நிலையில் பதவிகளில் சிக்கல் நிலை இருக்கும். மன நிலையில் அதிகமான யோசனைகளும், சஞ்சல நிலைகளும் இருக்கும். திருமணம், வெளிநாட்டுப் பயணம் என்பனவற்றில் தடை, தாமத நிலைகள் இருக்கும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் நிதானம் தேவை. உங்களின் ராசி நிலைக்கு சனீஸ்வரன் 6ஆம் இடம் அமைவது மிகவும் அனுகூலமான நிலையாகும். பெரும் சிரமங்களையோ கஷ்ட நிலைகளையோ ஏற்படுத்தாது இருப்பினும் வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற புஷ்பத்தால் அர்ச்சனை செய்வதோடு கடலை மாலையும் அணிவித்து வழிபட்டு வருவது மிகவும் நல்லது. ரகசியங்களையும் சாணக்கியமான குறுக்குவழி செயற்பாடுகளையும் அதிகம் உங்கள் மனநிலையில் கொண்டுள்ள நீங்கள் எதையும் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். இதனால் இந்தக் குருப்பெயர்ச்சி பலனை நன்கு உணர்ந்து அதற்கேற்ப வெற்றி பெறும் ஆளுமையை கொண்டிருப்பீர்கள்.
கடகம்
(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம்,
ஆயிலியம்)
கடகராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் சஞ்சாரம் தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம் அமைவது மிகவும் சிறப்பான பலாபலன்களைக் கொடுக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் மேன்மையான முன்னேற்ற பலன்கள் அமையும் நிலை உண்டு. குடும்பத்தில் மகிழ்வும் உறவினர்களின் மூலம் நன்மைகளும் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமாக அமையும் நிலையுண்டு. எதையும் திட்டமிட்டு செய்யக்கூடிய ஆற்றல் அமைகின்ற நிலை ஏற்படும். தொழில் சார்ந்த பதவி உயர்வுகளும் வெளிநாட்டுப் பிரயாணங்களும் அமையும் நிலை இருக்கும். திருமணம் குழந்தைப்பேறு போன்ற பலாபலன்களை எதிர் பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவுடையதாக அமையும். பொதுவாக உங்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் சுமுகமாக தீரும் நிலை அமையும். உங்களின் வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்க்கின்ற வெற்றிகள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே உங்களின் தொழில் நிலைகளில் நீங்கள் நினைக்கும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறு பெறலாம். பொதுவாகவே கலகலப்பாக எல்லோருடனும் பழகும் குண இயல்பை பெற்றுக்கொண்ட நீங்கள் மற்றவர்களின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். இதனால் பலவிடயங்களிலும் மற்றவரை விட முன்னிலையில் இருக்க வேண்டும். என்கின்ற துடிப்பு உங்களிடம் மிக அதிகமிருக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்தரம்
1ஆம் பாதம்)
சிம்மராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு ஜென்மகுரு எனும் நிலையில் உங்களின் ராசிக்கு குருபகவான் அமைகின்றார். எனவே எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமாக பொறுமையாக செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். தொழில் நிலையில் வீண் அலைச்சல் நிலையும் பதவி பறிபோகும் நிலைகளும் அமையும். எனவே நீங்கள் உண்டு உங்களின் வேலை உண்டு என இருப்பதே உங்களுக்கு மிக மிக நன்மை தரும். குடும்பத்தில் மனச்சஞ்சலமும் தேவையற்ற வீண் பிரச்சினைகளும் அமையும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். உடல் நிலையில் சிறு சிறு சுகயீனங்கள் ஏற்பட்டு மறையும். மருத்துவ செலவுகளும் அமையும். எதையும் திட்டம் தீட்டி செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே பொறுமையும் நிதானமும் மிகவும் முக்கியம். கடன் பிரச்சினைகளில் இழுபறி தாமத நிலைகள் அமையும். மாணவர்களின் கல்வி நிலையில் மந்த நிலைகளும் இழுபறி நிலைகளும் அமையும். எனவே ஊக்கத்துடன் செயற்பட வேண்டும். பொதுவாகவே மனதுக்குள்ளே ஒரு திட்டம் வைத்துக் கொண்டு வெளியில் வேறு விதமாக பேசிக் கொள்ளும் குண இயல்பு கொண்டவர்கள். வைராக்கியமும் பிடிவாதமும் மிகவும் முதன்மையாகக் கொண்டு செயற்படும் குணம் உங்களிடம் மேலோங்கி இருக்கும். இதனாலேயே பலவித பகைமைகளை தேடிக் கொள்வீர்கள். உங்களுக்கு அமையும் குருப் பெயர்ச்சியும் மத்திமமாகவே அமையும். எனவே பொறுமை நிதானத்துடன் செயற்படவும்.
கன்னி
(உத்தரம் 2,3,4ஆம் பாதம் அத்தம்,
சித்திரை 1ஆம் 2ஆம் பாதம்)
கன்னிராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் விரயஸ்தானம் எனப்படும் 12ஆம் இடத்திலே அமைகின்றார். எதிர்பாராதவகையில் திடீர் செலவுகள் அமையும் நிலை இருக்கும். சுபவிரயம் எனப்படுகின்ற நல்ல விடயங்களுக்கு உரிய செலவுகளாகவே இவை அமைகின்ற நிலையும் இருக்கும். தொழில் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும் நிலை இருக்கும். இருப்பினும் தொழில் சார்ந்த நிலைகளில் எடுக்கும் தீர்மானம் முடிவு என்பனவற்றில் சற்றுக் குழப்ப நிலைகள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் குழப்பமான சில தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். பணவரவு ஓரளவிற்கு அனுகூலமாக அமையும். உறவினர் நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படுகின்ற நிலையும் இருக்கும். திருத்தல யாத்திரைகள் செல்லக் கூடிய நிலைகளும் அமையும். திருமணம், வெளிநாட்டுப் பிரயாணம் போன்ற பலன்களை எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் சற்று சுமாரான நிலையிலேயே அமையும். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையில் கூடுதலான நிலைப்பாடுடைய முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் அவதானமாக செயற்பட வேண்டும். எந்த விடயமாக இருந்தாலும் சற்று இழுபறி தாமத நிலைகளில் பின்னரே அனுகூலமான பலன்கள் அமையும். பொதுவாகவே எதையுமே அலசி ஆராய்ந்து செயற்படுகின்ற குணமுடைய நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். உங்களுடைய செயலும் முடிவுமே இறுதியானதாக இருக்கும். எனவே நிதானமாக வெற்றிபெறுக!.
துலாம்
(சித்திரை 3ஆம் 4ஆம் பாதம்,
சுவாதி, விசாகம்
1ஆம் 2ஆம் 3ஆம் பாதம்)
துலாம் ராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் லாபஸ்தானம் எனப்படும் 11ஆம் இடம் அமைகின்றார். எல்லா வகையிலும் அனுகூலமான சிறப்பான பலன்கள் அமைகின்ற நிலை உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் மேன்மையான சிறப்பான முன்னேற்றங்கள் அமையும். பதவி உயர்வும் தொழில் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களும் அமையும் நிலை உண்டு .குடும்பத்தில் குதூகலமான நிலைகள் அமையும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமைகின்ற நிலை உண்டு. திருமணம், குழந்தைப் பேறு போன்ற பலன்களை எதிர் கொள்கின்றவர்களுக்கு நிறைவான நல்ல அனுகூல பலன் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமாக அமையும். கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலை அமையும். வழக்கு விவகாரங்கள் வெற்றியைத்தரும். நீங்கள் எதிர் பார்க்கின்ற நீண்ட நாட் கனவுகள் பலிதமாகும் நிலை இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றிகளையும் அனுகூல பலன்களையும் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் நல்ல முன்னேற்றமும் பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளும் கிடைக்கும் நிலை இருக்கும். உங்களுடன் எதிர் முனையில் போட்டி போட்டுக் கொண்டு இருந்தவர்கள் உங்களிடம் சமாதானமாக வருவார்கள். துவளாத மனமும் நேர்மையான நல்ல செயற்பாடும், சமூக அக்கறையும் தெய்வ பக்தியும் அதிகம் உழைக்கும் செயலும் கொண்ட உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி சகல வழிகளிலும் நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4ஆம்
பாதம், அனுசம், கேட்டை)
விருச்சிகராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் ஜீவனஸ்தானம் எனப்படுகின்ற பத்தாம் இடம் அமைகின்றார். சற்று மத்திமமான பலனே அமையும் நிலை இருக்கும். தொழில் நிலைகளில் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். திடீர் பிரச்சினைகள், பதவி மாற்றம், இடமாற்றம் போன்ற பலன்கள் அமையும் தேவையற்ற வீண் தலையீடுகளை தவிர்த்து உங்களின் செயற்பாட்டுடன் இருப்பதே மிகவும் நல்லது. எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையில் தடைகளும் தாமத நிலைகளும் அமையும். பணவரவு சற்று சுமாரானதாகவே அமையும். குடும்பத்தில் மந்தமான நிலைகளும் மனச்சஞ்சலங்களும் அமையும் நிலை இருக்கும். எதிர்பாராதவகையில் திடீர் செலவுகள், அலைச்சல் நிலைகள் என்பன அமையும். திருமணம் போன்ற சுபகாரிய நிலைகளை எதிர்பார்க்கின்றவர்களுக்கு இழுபறி, தாமத நிலைகள் இருக்கும். கடன் பிரச்சினைகள் மந்தமாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் நிதானம் தேவை. வழக்கு விவகாரங்களில் இழுபறி தாமத நிலைகளைக் கொடுக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் ஊக்கமுடன் செயற்பட வேண்டும். பரீட்சைகளில் நிதானம் தேவை. எல்லா விடயங்களிலும் மிகவும் நிதானமாக சிந்தித்து உங்களின் அனைத்து விடயங்களிலும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் உங்கள் நலனில் பின்பே மற்றவர் விடயங்கள் பற்றி சிந்திக்கும் குண இயல்பும் கொண்ட நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியில் மத்திம பலன் பெறலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்தராடம்
1ஆம் பாதம்)
தனுசுராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு பாக்கியஸ்தானமாகிய ஒன்பதாம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைகின்றது. மிகவும் சிறப்பான அனுகூலமான நற்பலாபலன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். குடும்பத்தில் நல்ல மகிழ்வும் உறவினர்களின் மூலமாக அனுகூலமான பலன்களும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். எதையும் திட்டமிட்டு சிறப்பாக செய்யக்கூடிய நிலை இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில்சார்ந்த பதவி உயர்வுகளும் நல்ல இடமாற்றங்களும் அமையும் நிலை இருக்கும். வெளிநாட்டு பிரயாண வாய்ப்புகளும் அமையும். திருமணம், சந்தானப்பேறு, போன்ற பலாபலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவுடையதாக கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சுமுகமான பலன் அமையும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் அனுகூலமான பலன் அமையும். நீண்ட நாட் திட்டங்களை மிகவும் இலகுவாகச் செய்யக்கூடிய நிலைகள் அமையும். பொதுவாகவே இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலம் நீங்கள் நல்ல நிறைவான பலாபலன் பெறலாம். தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உழைப்பும் கொண்டவர்கள் நீங்கள். மற்றவர்களின் அறிவுரைகளை பெரிதாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவே எல்லா விடயத்திலும் முதன்மை பெறும் நிலை இருக்கும். எதுவாயினும் வெற்றி உண்டு.
மகரம்
(உத்தராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம்.
திருவோணம், அவிட்டம் 1ஆம் 2ஆம்
பாதம்)
மகரராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் அட்டமஸ்தானமாகிய 8ஆம் இடம் அமைகின்றார். எனவே சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமைகின்ற நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் அலைச்சல், வேலைப்பளு என்பன அதிகம் அமைந்திருக்கும். எதிர்பாராத வகையில் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை இருக்கும். பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் நிதானமாக செயற்பட வேண்டும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் நிலை அமையும். எதிர்பாராத வகையிலே குடும்பத்தில் குழப்ப நிலைகள் அமையும். உடல் நிலையில் திடீர் சுகயீனங்களும் மருத்துவ செலவுகளும் அமையும். வழக்கு விவகாரங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமை நிதானத்துடன் செயற்பட வேண்டும். தடை இழுபறி தாமத நிலைகள் எடுக்கும் முயற்சிகளிலே தொடரும் நிலை இருக்கும். எந்த விடயமாகினும் சற்று சிந்தித்தே செயற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் மந்தமான பலன் இருக்கும். பரீட்சைகளிலே மிகவும் பொறுமை நிதானமுடன் செயற்படவேண்டும். குரு வழிபாடு மிகவும் நன்மை தரும். பொதுவாகவே எதையும் பெருமையாக பேசுகின்ற சுபாவம் கொண்டவர்கள் நீங்கள். உங்களுடைய செயற்பாடுகள் மூலமாக நீங்களே பிரச்சினைகளை வாங்கிக் கொள்வீர்கள். யாராகினும் முகத்துக்கு நேரே நீங்கள் கூறும் விடயங்கள் பலவித பகைமையை உருவாக்கும். எனவே இந்தக் குருப் பெயர்ச்சியில் நிதானமாக செயற்படவும்.
கும்பம்
(அவிட்டம் 3ஆம் 4ஆம் பாதம், சதயம்,
பூரட்டாதி 1ஆம் 2ஆம் 3ஆம் பாதம்)
கும்பராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குரு பகவான் களத்திரஸ்தானம் எனப்படுகின்ற ஏழாம் இடம் அமைகின்றார். ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். எதையும் சமாளிக்கக் கூடிய நிலை குடும்பத்தில் ஏற்படும். மனைவி வழி உறவினர்கள், கணவன் வழி உறவினர்கள் என இருவழி நிலையிலும் அனுகூலமான நன்மைகள் அமையும் நிலை இருக்கும். திருமணம் சந்தானவிருத்தி, போன்ற பலாபலன்களை எதிர் கொள்கின்றவர்கட்கு அப்பலன் நிறைவுடையதாக கிடைக்கும் நிலைகள் அமையும். மன நிலையில் மகிழ்வும் உத்வேகமும் ஏற்படும். தொழில் நிலைகளில் சிறு சிறு சிரமங்கள் இடையிடையே ஏற்பட்டு மறையும். சற்று பொறுமை கொண்டு செயற்பட வேண்டும். எதிர்பாராதவகையில் திடீர் செலவுகள் அமையும். அவை நல்ல சுபகாரிய செலவுகளாய் இருக்கும். உறவினர்களிடம் இருந்து வரவேண்டிய வரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வெளிநாட்டுப் பிரயாணங்கள் எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் ஓரளவிற்கு அனுகூல நிலை தரக்கூடியதாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் சற்றுக் கவனம் வேண்டும். இருப்பினும் கல்வி நிலையில் பாதிப்பான பலன் அமைய இடமில்லை. பொதுவாகவே அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரவழைக்கும் சூட்சுமம் தெரிந்தவர்கள் நீங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து உங்களின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்து கொள்ளும் திறன் உங்களின் பலம். இந்தக் குரு பெயர்ச்சியானது ஓரளவிற்கு உங்களுக்கு அனுகூலம் கொடுக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4ஆம் பாதம்,
உத்தரட்டாதி, ரேவதி)
மீனராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு குருபகவான் ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைகின்றார். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு மந்தமான நிலை அமையும். தொழில் நிலையில் அலைச்சலும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படும் .குடும்பத்தில் சற்று மந்தமான மத்திம பலனே அமையும் நிலை இருக்கும். உங்களுக்கு எதிரிகளின் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் அமையும். எனவே நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும். தொழில் நிலையில் நஷ்ட நிலைகளும் விரயங்களும் ஏற்படலாம். அத்தோடு உடல் நிலையிலும் திடீர் சுகயீனங்களும் சத்திர சிகிச்சைகளும் அமையலாம். புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதை அறவே தவிர்த்துக் கொள்ளவும். திருமணம் போன்ற சுபகாரியம், வெளிநாட்டுப் பிரயாணம் போன்ற பலாபலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று மத்திமமானதாகவே அமையும் நிலை இருக்கும். அத்தோடு தொழில் நிலைகளில் சக உத்தியோகத்தர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும் நிலைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி மேற்கொள்ள வேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளில் சற்று மந்த நிலையான பலன் ஏற்படலாம். குரு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. எதையும். மிடுக்கான தொனியுடன் செயற்படுத்துகின்ற குணமும் எதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். என்கின்ற எண்ணமும் கொண்ட நீங்கள் எல்லோரும் உங்களை பணிய வேண்டும் என நினைப்பார்கள். எனவே மிகவும் பொறுமையாக செயற்பட்டு நன்மைபெறுக.
ஜோதிட கலாநிதி S.R.T. சர்மா வெள்ளவத்தை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக