செவ்வாய், 17 மே, 2016

எக்ஸெல் டிப்ஸ்.. ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்: டேட்டா வகை பிரித்தால் பார்மட் மாறுமா?:

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.



எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

டேட்டா வகை பிரித்தால் பார்மட் மாறுமா?: எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.

எடுத்துக் காட்டாக, இரண்டு நெட்டு வரிசை டேபிள் ஒன்றை ஒர்க் ஷீட்டில் அமைத்து இருக்கிறேன். முதல் வரிசையில் பல நாட்களுக்கான தேதிகளை, எந்த வரிசையும் இன்றி அமைத்திருக்கிறேன். இரண்டாவது வரிசையில் A முதல் E வரை அமைத்துள்ளேன். C என்ற எழுத்து உள்ள கட்டத்தின் பின் நிறத்தினை ஒரு வண்ணத்தில் அமைத்திருக்கிறேன். இந்த செல்லைச் சுற்றி ஒரு வகையான பார்டர் அமைத்துள்ளேன். இப்போது முதல் நெட்டு வரிசையில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்துகிறேன்.

இப்போது எக்ஸெல் C என்ற எழுத்து உள்ள செல்லினை, அதன் பேக் கிரவுண்ட் வண்ணத்துடன் எடுத்துச் சென்று அதன் புது இடத்தில் வைக்கிறது. ஆனால் பார்டர்கள் வேறாக அமைகிறது.இரண்டையும் ஒன்றாகக் கொண்டு செல்வதே என் விருப்பம். இதற்கான வழியினைப் பார்க்கலாம்.

இதற்கான தீர்வு நாம் செல்களை எப்படி பார்மட் செய்கிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது. இரண்டு வகையான பார்மட் வழிகளை எக்ஸெல் கொண்டுள்ளது - வழக்கமான பார்மட்டிங், நிபந்தனையில் பேரிலான பார்மட்டிங் (regular formatting and conditional formatting). வழக்கமான பார்மட்டிங் முறையை மேற்கொண்டால், மேலே விளக்கியது போல ஒரு பார்மட்டிங் எடுத்துச் செல்லப்பட்டு, இன்னொன்று தங்கிவிடும். நிபந்தனையின் பேரிலான பார்மட்டிங் (conditional formatting) மேற்கொள்கையில், அனைத்து பார்மட்டிங் அமைப்புகளுடன் செல் நகர்ந்து கொடுக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல