செவ்வாய், 17 மே, 2016

வேர்ட் டிப்ஸ்... சொற்களை அழிக்க, வேர்ட் டேபிளில் படுக்கை வரிசைகளை உருவாக்க

சொற்களை அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் சில சொற்களை நீக்க நினைப்போம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிப்போம். சொற்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. நாம் அதிகம் சிரமப்படாமல் இதனை நிறைவேற்ற சில வழிகள் நமக்கு உள்ளன. அவை குறித்து காணலாம்.
ஒரு சிலர், குறிப்பிட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து, Delete கீயினை அழுத்தலாம்.


சிலர் அந்த சொல் அருகே கர்சரைக் கொண்டு சென்று, டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் அழியும் வரை அழுத்தலாம். ஆனால், இதற்கு அதிக நேரமும் முயற்சியும் வேண்டும். இதற்கு ஒரு ஷார்ட் கட் கீ உண்டு என்பதை அறிந்தால், இவர்கள் அதனைப் பயன்படுத்த விருப்பப்படலாம். கர்சரை சொல்லின் முன் வைத்து, கண்ட்ரோல் + டெலீட் (Ctrl+Del) கீகளை அழுத்தினால், கர்சர் எங்கு உள்ளதோ, அதிலிருந்து, சொல்லின் இறுதி வரை உள்ள எழுத்துகள் அனைத்தும் மறையும். எடுத்துக் காட்டாக, கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வலது புறமாக நான்கு சொற்கள் அழிக்கப்பட வேண்டும் என்றால், கண்ட்ரோல் + டெலீட் கீகளை நான்கு முறை அழுத்த வேண்டும்.

இந்த கீ களை அழிப்பதற்கு மட்டுமல்ல. வேகமாக எடிட் செய்திடவும் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, "sidestep" என்ற சொல்லை "sideways" என மாற்ற வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் "step" என்பதை அழித்து, அந்த இடத்தில் "ways" என டைப் செய்திடலாம். இதற்கு டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை நான்கு முறை அழுத்த வேண்டியதிருக்கும். ஆனால், இதற்கு இன்னொரு விரைவான வழி உண்டு. "step," என்ற சொல்லுக்கு முன்னால் கர்சரை வைத்து, கண்ட்ரோல்+டெலீட் ஒருமுறை அழுத்தினால், அந்த சொல் நீங்கிவிடும். பின்னர் "ways" என டைப் செய்துவிடலாம்.

வேர்ட் டேபிளில் படுக்கை வரிசைகளை உருவாக்க: வேர்டில் டேபிளில் படுக்கை வரிசைகளை அதிகரிக்கும் சில வழிகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். ஆபீஸ் ரிப்பனில், Layout பிரிவில், Insert Above மற்றும் Insert Below டூல்களைப் பயன்படுத்தி, படுக்கை வரிசைகளைப் புதியதாக இணைத்திருப்பீர்கள். அல்லது படுக்கை வரிசையின் இறுதி இடத்திற்குச் சென்று, என்டர் அழுத்த, வரிசை ஒன்று, அதன் கீழாகப் புதியதாக இணைக்கப்படுவதனைப் பார்த்திருப்பீர்கள்.

இவற்றைக் காட்டிலும் வேகமாக வரிசைகளைப் பெறும் ஒரு வழி உள்ளது. குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட படுக்கை வரிசைகள், ஏற்கனவே உருவாக்கப்பட்ட டேபிளில் உள்ள வரிசைகளுக்கு கீழ் மேலாக இவற்றை இணைக்கலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி செயல்படவும்.இருக்கும் டேபிளில், எத்தனை படுக்கை வரிசைகள் புதியதாக வேண்டுமோ, அத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், ரிப்பனில், Layout டேப் பிரிவில், Insert Above பட்டனில் கிளிக் செய்திடவும். (இந்த லே அவுட் டேப், நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாட்டினை மேற்கொண்ட பின்னரே, காட்டப்படும். ) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைகளுக்கு மேலாக, அதே எண்ணிக்கையில் வரிசைகள் இணைக்கப்படும்.
-----------------------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல