செவ்வாய், 17 மே, 2016

வேர்ட் புரோகிராமில் ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட்களைத் திறந்து பயன்படுத்த முடியவில்லை

வேர்ட் புரோகிராமில், எந்த டாகுமெண்ட்டினைத் திறந்தாலும், அதற்கு முன்னர் திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் டாகுமெண்ட் தானாக மூடப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட்களைத் திறந்து பயன்படுத்த முடியவில்லை.



இது சற்று வித்தியாசமான, சிக்கலான பிரச்னை. வேர்ட் இது போல செயல்படக் கூடாது. முதலில் சிக்கலை அலசுவோம்.

ஒருவேளை, வேர்ட் மற்ற டாகுமெண்ட்களை மினிமைஸ் செய்து வைத்திருக்கலாம். எனவே, அது போல செயல்படுகிறதா என்று சோதனை செய்து, சந்தேகத்தினை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

இரண்டாவதாக, நீங்கள் அறியாமலேயே, வேர்ட் இயங்குகையில், வேர்டில் செயல்படும் வகையில், மேக்ரோ புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

கீழ்க்காணும் கட்டளையை, கமாண்ட் ப்ராம்ப்டில் இயக்கினால், அது போன்ற புரோகிராம்கள் முடக்கப்படும்.

தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், winword.exe /a என டைப் செய்து இயக்கவும்.

winword.exe /m எனக் கட்டளை கொடுத்தால், மேக்ரோ புரோகிராம்கள் மூடப்படும்.

இறுதியாக, வேர்ட் புரோகிராமிற்கான ஸ்டார்ட் அப் (Startup) போல்டரைச் சோதனை செய்திடவும்.

இதற்கு வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.

இதற்கு ஆபீஸ் பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு ஸ்குரோல் செய்து சென்று, File Locations என்பதில் கிளிக் செய்திடவும்.

வேர்ட் File Locations டயலாக் பாக்ஸைக் காட்ட்டும்.

இங்கு File Types என்னும் பட்டியலில், Startup என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு Modify என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் பயன்படுத்தும் ஸ்டார்ட் அப் போல்டர் எங்கு உள்ளது என்று காட்டும்.

இது தெரிந்தவுடன், வேர்ட் புரோகிராமினை மூடி, விண்டோஸ் வழியாக, அந்த போல்டரைச் சோதனை செய்திடவும்.

அதில் உள்ள புரோகிராம் அல்லது டெம்ப்ளேட் பைல்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்றவும்.

பின்னர், மீண்டும் வேர்ட் புரோகிராமினை ரீஸ்டார்ட் செய்திடவும்.

அநேகமாக, உங்கள் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறேன்.

இல்லை எனில், மீண்டும் வேர்ட் புரோகிராமினை ரீ இன்ஸ்டால் செய்திடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல