செவ்வாய், 17 மே, 2016

வேர்ட் டாகுமெண்ட்களில் குறிப்பிட்ட டேப் நிறுத்தத்தை மட்டும் நீக்க

வேர்ட் டாகுமெண்ட்களில், அமைந்துள்ள டேப் நிறுத்தங்களில், மொத்தமாக அனைத்தையும் நீக்காமல், நீக்க வேண்டிய குறிப்பிட்ட டேப் நிறுத்தத்தை மட்டும் எப்படி நீக்குவது?



அதற்கான வழி.

1. கர்சர், எந்த பத்திக்கான டேப் குறியீட்டை நீக்க வேண்டுமோ, அந்த பத்தியில் இருக்க வேண்டும்.

2. டேப் டயலாக் பாக்ஸைப் பெறவும். ரிப்பனில், ஹோம் டேப்பில், பாரா குரூப்பில் காட்டப்படும் Paragraph என்பதன் வலது ஓரத்தில் உள்ள சாய்வான அம்புக் குறி ஐகானில் கிளிக் செய்திடவும். டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

3. இங்கு கிடைக்கும் Tab Stop Position பாக்ஸ் கீழாகக் கிடைக்கும் பட்டியலில், நீங்கள் நீக்க விரும்பும் டேப் நிறுத்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்து Clear என்பதில் கிளிக் செய்திடவும்.

5. இதே போல நீங்கள் நீக்க விரும்பும் டேப்கள் அனைத்தையும் நீக்கலாம். இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

6. இன்னொரு வழியும் உள்ளது.

நீங்கள் ரூலர் எனப்படும் அளவு ஸ்கேலினை இயக்கி வைத்திருந்தால், நீக்க வேண்டிய டேப் அடையாளம் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிளிக் செய்து, அப்படியே மேலே இழுத்துவிட்டால், அது நீக்கப்படும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல