செவ்வாய், 17 மே, 2016

விட்ஜெட் (Widget) என்பது எதைக் குறிக்கிறது

விட்ஜெட் என்பது முதலில் ஒரு கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் (GUI (Graphical User Interface)). அதன் ஒரு உறுப்பு எனலாம். அல்லது இது சிறிய அளவில் செயல்படும் ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் எனவும் கூறலாம்.



இது தகவல்களைத் தொடர்ந்து காட்டும் ஒரு செயலி. சில விட்ஜெட்கள், பயனாளர் இவற்றுடன் தொடர்பு கொள்ள வழி தருகின்றன. அல்லது இதன் வழியாக, விட்ஜெட்டை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான சில எடுத்துக் காட்டுகளை இங்கு பார்க்கலாம்.

நாம் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கத் தரப்படும் பட்டன்கள், டிக் அடையாளம் அமைக்கும் சிறிய கட்டங்கள், தலை கீழ் அம்புக் குறி அடையாளத்தில் அழுத்தினால் கிடைக்கும் கீழ் விரி பட்டியல்கள், விண்டோவின் விஸ்தீரணத்தை மாற்றி அமைக்க உதவிடும் முனைகள், ஸ்குரோல் பார்கள், தேடல் கட்டங்கள், சிறிய வரைபடங்கள், ஒரே அழுத்தத்தில் இரு வேறு நிலை காட்டும் ஸ்விட்ச்கள், அலகுகளை மாற்றிக் காட்டும் சிறிய செயலிகள், எத்தனை பேர் ஒரு தளத்தைப் பார்த்துள்ளனர் என்று எண்ணிக்கை காட்டும் சாளரங்கள் மற்றும் விண்டோக்கள் என ஒரு பட்டியலே தரலாம். இத்தனையும் விட்ஜெட்டுகள் என்பதால் தான், உங்களுக்கு அனைத்துமே, விட்ஜெட்டுகளாகத் தெரிகின்றன.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல