செவ்வாய், 17 மே, 2016

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், மொபைல் போன் மூலம் நாம் தேடிய தளங்களை அழிக்க

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனைப் பொறுத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரில், நாம் தேடிய அப்ளிகேஷன்கள் குறித்த பதிவுகள், நாம் தேடிப் பார்த்த திரைப்படங்கள், நூல்கள், பாடல்கள் மற்றும் இது போன்ற அனைத்து தேடல்கள் குறித்தும் பதியப்படுகிறது.



அதே போல, இலவசமாகப் பெற்றாலும், கட்டணம் செலுத்திப் பெற்றாலும், நீங்கள் டவுண்லோட் செய்த அனைத்து அப்ளிகேஷன்களும் “My Apps” என்னும் பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாள் செல்லச் செல்ல மிக நீண்டதாக வளரும். ஒரு கட்டத்தில் இவை எந்த கட்டுப்பாட்டிற்கும் அடங்காததாகச் சென்றுவிடும். ஆனாலும், இவற்றை நீக்கும் வழியும் எளிதானதே.

ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகானைத் தொடவும்.

”பிளே ஸ்டோர்” திறக்கப்படும்.

இடது மேல் ஓரமாக உள்ள மூன்று சிறிய கோடுகள் அடங்கிய மெனு ஐகானைத் தொடவும்.

இதில் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த திரையில் “Clear local search history” என்பதைத் தொடவும்.

உடன் நமக்கு போன் என்ன செய்கிறது என்பது காட்டப்பட மாட்டாது.

சர்ச் ஹிஸ்டரி காலியாகிவிட்டதா என்று நமக்குத் தெரியாது.

எனவே “Back” பட்டன் அழுத்தி, கிடைக்கும் திரையில் மேலாக உள்ள தேடல் கட்டத்தில் தொடவும்.

இங்கு நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட தேடல்கள் கிடைக்கவில்லை என்றால், அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று பொருள்.

திரையில் மேல் இடது புறம் உள்ள அம்புக் குறியினைத் தொட்டு பிளே ஸ்டோரின் முதல் திரைக்குச் செல்லலாம்.

---------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல