செவ்வாய், 29 நவம்பர், 2016

எக்ஸெல் டிப்ஸ்... ஒரே டேட்டா.. அலகுகளை மாற்றும் வழிகள்

ஒரே டேட்டா - பல செல்கள்

எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யப்பட்டிருக்கும்.

வேர்ட் டிப்ஸ்... எழுத்துகளின் அகலம்: தனிச் சொற்கள்

எழுத்துகளின் அகலம்

வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம்.

மொபைல் போன்களில் 'அவசர நிலை பட்டன்' என்பது என்ன?

ஆங்கிலத்தில் Panic button என்று அழைக்கப்படும் 'அவசர நிலை பட்டன்' ஒன்றை அனைத்து மொபைல் போன்களில் கட்டாயமாக அமைத்து விற்பனை செய்திட வேண்டும் என இந்திய மத்திய அரசு ஆணை சென்ற ஏப்ரல் மாதம் வெளியானது.

வைரஸ் அல்லது மால்வேர்கள் கம்ப்யூட்டரைக் கைப்பற்றினால் ..

சில வைரஸ் அல்லது மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், நம்மால் கம்ப்யூட்டரை இயக்க முடியாதபடி செய்து, தகவல்களைத் திருடும். சில நாம் செயல்படுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நம் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்துப் பின் திருடும். இவற்றின் செயல்பாடுகளில் ஒரே சீரான நிலையைக் காண இயலாது. இருப்பினும், கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகள், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கும்போது தென்பட்டால், உங்கள் கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்களால் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கொள்ளலாம்.

பத்து கோடி பயனாளர்களின் யு.சி. பிரவுசர்

அலிபாபா மொபைல் பிசினஸ் குரூப் என்னும் நிறுவனம் வழங்கும் யு.சி. பிரவுசரை (UC Browser), இந்தியாவில் மாதந்தோறும் 10 கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Stat Counter என்னும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 57% போன்களில் இந்த பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குரோம் விரிவாக்க செயலிகளை நீக்கும் முன்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் எனப்படும் நீட்சி செயலிகள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.

விண்டோஸ் 10 டாஸ்க் பார்

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் டாஸ்க் பார், இதற்கு முன் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தரப்பட்டவை போல் தான் அமைக்கப்பட்டு இயங்குகிறது. கம்ப்யூட்டரில் செயல்படும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், குறுக்கு வழிகளையும், ஐகான்களையும் கொண்டு நமக்கு உதவுகிறது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம், இந்த டாஸ்க் பாரினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.

திங்கள், 28 நவம்பர், 2016

எலெக்ட்ரானிக் தேசம் தாய்வான்!

தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவான தாய்வானும் இந்தியாவும் இப்போது ஒன்றை ஒன்று வாஞ்சையோடு பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியா மென்பொருள் உற்பத்தியில் வலிமையான நாடு. தாய்வானோ வன்பொருள் (Hardware) உற்பத்தியின் அசைக்கமுடியாத சக்தி. வன்பொருள் உடல் என்றால், மென்பொருள் உயிர். உடலோடு உயிர் ஒன்று சேர்ந்தால் இரு நாட்டுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகம் உயிர்ப்பு பெறும். பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பது இரு நாட்டுக்குமே இருக்கும் எதிர்பார்ப்பு.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஆப்ரிக்காவில் காணாமல் போன குழந்தை, ஐரோப்பா சென்று, மீண்டும் தாயோடு இணைந்த (நிஜக்)கதை

 ஔமோக்கை கவனித்துக் கொள்ளும் காவல்துறை கண்காணிப்பாளர் மரியா வால்பே, (சிறுமியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது)

வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு தனியாக பணயம் செய்த, குடும்பத்திலிருந்து தவறிவிட்ட 4 வயது குழந்தை ஒன்று, தற்செயலான நிகழ்வு ஒன்றால் அதனுடைய தாயோடு சேர்க்கப்படவிருக்கிறது.

10 பொருத்தம் என்றால் என்ன?

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ?

 இவரை நேசிப்போருக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ என்றால் கியூபா, கியூபா என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ என்பது தான் உண்மை

கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ.

உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தன்னுடைய மிக பெரிய எதிரியான அமெரிக்காவின் வாயிலில் செந்நிறக் கொடி தொடர்ந்து பறந்து செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

பலஸ்தீனத்தை பங்குபோடும் 1947 ஐ.நா தீர்மானம் மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்

1947 நவம்பர் 27 மனித குல வரலாற்றில் மாபெரும் கரிநாளாகும். அன்றைய தினத்தில் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ரஷ்;யா என்பனவற்றின் ஆதரவோடு சியோனிஸ யூதர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தை பங்கு போட்டு பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பூமியில் யூத அரசை நிறுவும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

சனி, 26 நவம்பர், 2016

"சோரியாசிஸ்" விடை தெரியா நோய்..!

சோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விபட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்னகாரணம் என்பதை  இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் ‘காளான் சான்படை என்று அழைக்கிறார்கள்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது.

வியாழன், 24 நவம்பர், 2016

ஒரே ஒரு காலி பாட்டிலை வைத்து ரூ.32 லட்சம் சம்பாதித்த பலே கில்லாடி

காலி பாட்டிலொன்றை வைத்து ரூ.32 லட்சத்தை ($47,000) ஒருவர் சம்பாதித்த சம்பவம் ஜெர்மனி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து மேலும் படிக்க: பிரியங்கா நளினி சந்திப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும்

'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்': நளினி

அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.

'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' என்ற பெயரில் நளினி தன் சிறுவயது சம்வங்கள் முதல் தற்போது வரையிலான சம்பவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
பா. ஏகலைவன்

மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து, யாழ் பதிப்பகம் என்ற தனது பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுகிறார்.

வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது.

பிரியங்கா சந்திப்பு


பிரியங்கா

இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் பிரத்யேகமாக பிபிசி தமிழுக்குக் கிடைத்துள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதை "என் விடுதலையும் பிரியங்கா சந்திப்பும்" என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தில் நளினி விவரித்துள்ளார்.

இந்த சந்திப்பு நெடுக தான் நிரபராதி என்பதை கூறும்வகையிலேயே பல்வேறு சம்பவங்களை, நுணுக்கமாக பிரியங்காவிடம் நளினி கூறியிருக்கிறார்.

குறிப்பாக, தனக்கும் தன் கணவர் முருகனுக்கும் (இதே வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருப்பவர்) ராஜீவ்காந்தி கொலையில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை; கொலைக்கு முன்பாக தங்களுக்கு அதைப் பற்றி தெரியாது என்பதற்கான வாதங்களை பிரியங்காவிடம் நளினி முன்வைத்ததாக புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

அதிலிருந்து சில பகுதிகள்:

"விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு 26 வயதும், பெண்களுக்கு 21 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அனுமதி இன்றி யாரும் திருமணம் செய்ய முடியாது. அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். பொதுவாக யாரும் அப்படி மீறுவது இல்லை என்பதே அங்குள்ள செய்திகள்.

அப்படி இருக்க, என் கணவர் எப்படி 21 வயதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்க முடியும்.? திருமணம் செய்துவிட்டு ஊருக்கு போவதற்காக வேதாரண்யம் கடற்கரையில் படகுக்காக ஏன் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்? இயக்கத்தினருக்கு அந்த வழக்கம் இல்லையே. ஆவணங்களில் எல்லாம் இதை மறைத்து விட்டார்கள்.

சம்பவத்திற்கு பிறகு சி.பி.ஐ. சிவராசனை வலை வீசித் தேடிக்கொண்டிருந்தது. அதனால் 7.6.91 அன்று மேலிட உத்தரவுப்படி சிவராசன் தனது மீதிப் பொறுப்புக்களை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு இலங்கை போவதாக சொல்லிப்போனார் என சி.பி.ஐயினர் என் கணவர் பெயரில் உள்ள வாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டிருக்கிறது மேடம்.

இயக்கமாக இருந்திருந்தால் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு புறப்பட்டிருக்க முடியாது. கணவரும் இக்கொலையில் சம்மந்தப்பட்டு இருந்தால் சிவராசன், சுபா, நேருவோடு சேர்த்து என் கணவரையும்தானே இலங்கைக்கு அழைத்திருக்க வேண்டும்."

"என் கணவருக்கு மேலிடத்து உத்தரவு வர, இலங்கை புறப்பட்டு செல்ல வேதாரண்யம் சென்று ஒரு வாரம் காத்திருந்துவிட்டு, படகு வரவில்லை என 18ஆம் தேதி என்னைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார் என்று சிபிஐயினர் கதை அளந்துள்ளனர், என்றபடி, 'இங்கே ஒரு விஷயத்தை விளக்கமாகச் சொல்ல அனுமதிக்கனும் மேடம்' என கேட்கிறேன். 'ஆகட்டும் தொடருங்கள்'என சம்மதிக்கிறார் பிரியங்கா.
முருகனுடன் நளினி

முருகன் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபரா?

அந்த காலகட்டத்தில் புலிகளின் நிறைய படகுகள் வேதாரண்யம் கடற்கரை பகுதிக்கு வந்து சென்றபடி இருந்தன என சி.பி.ஐயினரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் நினைத்த நேரத்தில் தமிழகம் வந்தும் போகும் வசதி அவர்களிடம் இருந்தது என்றும் சொல்கின்றனர்.

என் கணவர், அதில் ஏறிப்போயிருக்கலாம் அல்லவா?

அடுத்து அவர்களுக்கு வயர்லெஸ் தொடர்பும் இருந்தது என்கிறார்கள். என் கணவரும் வயர் செய்திகளை அனுப்பிப் பெற்றுக் கொண்டார் என்கிறார்கள். கணவரை இரண்டாம் கட்ட தலைவர் என்கிறார்கள் தீர்ப்பில். அப்படி இருக்க அதன் மூலம் தொடர்புகொண்டு படகை வரவழைத்து சென்றிருக்கலாம் அல்லவா? சி.பி.ஐ. சித்தரித்தபடி ஒரு இரண்டாம் கட்ட தலைவர் ஒரு வாரம்வரை காத்திருந்துவிட்டு படகு வரவில்லை என்று திரும்பி வரவேண்டியது ஏன்?

வாக்கிடாக்கியில் ஒரு செய்தி சென்றால் படகுகள் வந்து அழைத்துச் சென்றிருக்குமல்லவா? ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால், அவர் சாதாரண நபர், உண்மையில் வேதாரண்யம் போயிருந்தால் மற்றவர்களைப்போல் தனியார் படகிற்கு காத்திருந்தார். அந்த படகு வரவில்லை என்றான பிறகுதான் திரும்பியிருப்பார். ஆனால் அதுவும் உண்மை அல்ல. அந்த சமயத்தில் தன் உறவினர்களுடன் தமிழக கோயில்களுக்கு சென்றிருந்ததுதான் உண்மை."

நான் குற்றவாளியா ?

"என்னைப் பிரதான குற்றவாளி என்று கூறுகிறார்கள். ஆனால் நான் சம்பவம் நடந்த நாள் அன்றும் அதற்கு முன்பும் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. அந்த மே மாதத்தில் ஒரு நாள்கூட நான் அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததில்லை. சம்பவ தினமான மே 21ஆம் தேதியன்றுகூட வழக்கம் போலத்தான் அலுவலகத்திற்கு போனேன். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றேன். அவர்களோ, 'எதற்கு அரை நாள் லீவு. சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டு கிளம்புங்கள்' என்று கூறினார்கள்.

நான் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தேன். என்னிடம் எந்த பதட்டமும் இல்லை. அரை நாள் வேலை செய்துவிட்டு பிறகுதான் இராயப்பேட்டை வீட்டிற்கு போகிறேன். சாட்சி விசாரணைகள் எல்லாம் அதைத்தான் தெளிவு படுத்தியிருக்கின்றன. கொலைச் சதி தெரிந்த ஒருவர் இப்படியெல்லாமா நடந்துகொள்வார் என்று ஏன் யாரும் யோசிக்கவேயில்லை? இப்படியெல்லாம்கூட ஒருவர் கொலைச் சதி குழுவில் இருக்க முடியுமா?"

"தீர்ப்பிலும்கூட ஏராளமான தவறுகள் இருக்கின்றன மேடம்' என்ற நான் சில முக்கிய உதாரணங்களை மட்டும் அவரிடம் எடுத்துக் கூறினேன். கேட்டுக்கொண்டிருந்தவரின் முகம் வாட்டமாகியது. குழப்பமடைந்தவராக காணப்பட்டார். அதை விரும்பாத நான் உதாரணங்களை நிறுத்திவிட்டு, அடுத்த சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலையினை எடுத்துச் சொல்லத் தொடங்கினேன்.

விசாரணையில் ’முரண்பாடுகள்’

கொலைச் சதி சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் பாரிமுனையில் இருந்து பேருந்தில் சென்றதாகதான் சி.பி.ஐ. கூறியது. சாட்சி ஆவணங்களும் அதைத்தான் சொல்கின்றன. அதோடு வெடிகுண்டை முதுகில் கட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் நின்றபடி பயணிக்கும் வெடிகுண்டு பெண்ணால் யார் மீதும் மோதிவிடாமல் நின்றுகொண்டே போக முடியுமா? அப்படியே உட்கார நினைத்தாலும் முதுகில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு உட்கார முடியுமா? வழியிலேயே வெடித்திருக்க வாய்ப்பில்லை என கூற முடியாதே. திட்டமிடுபவர்கள் அப்படியா திட்டமிடுவார்கள்? ஏன் இத்தனை முரண்பாடு?

இன்னொரு முக்கிய விடயம் மேடம்.... ஹரிபாபு எடுத்த கடைசி போட்டோவில் அந்த பொண்ணு தணு வலது தோள் முதுகுப் பக்கம் கை வைத்து யாரோ ஒருவர் உங்கள் தந்தையை நோக்கித் தள்ளுகிற காட்சி பதிவாகி இருக்கிறது. அந்த கை யாருக்கு உரியது என்று இதுவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படவே இல்லை மேடம். இதற்கு பதிலும் இதுவரை சிபிஐ சொல்லவும் இல்லை.

சம்பவ இடத்தில் இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவின் நிலை மற்றும் லதா கண்ணன் , அவரது மகள் கோகிலா ஆகியோரது நிலைதான் என்னுடைய நிலையும். சதித் திட்டம் தெரிந்திருந்தால் ஹரிபாபு அருகில் இருந்து புகைப்படம் எடுத்திருக்க மாட்டார். கூடவே சுபா, தனு, சிவராசன், லதா கண்ணன் அவர் மகள் கோகிலா உள்ளிட்டவர்களையும் படம் எடுத்திருக்க மாட்டாரே. அதே நிலைதான் எனக்கும் என்று அதற்கான பல முக்கிய விஷங்களை மட்டும் கூறினேன்.

முகம் சிவந்த பிரியங்கா


மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்விகேட்டார். அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது. எங்கள் இருவரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமே. கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும், பேசவேண்டும். அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும் என்று அவர்களைப் பற்றி பேசினேன்.

அப்போதுதான் அவர் முகம் மாறத்தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகமும் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்கு கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார். எதிர் கேள்வியால் மறுத்தபடி, "உன்னைப் பற்றி சொன்னாய்.. உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. 'அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்...? அவர்களை பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்?' என சற்று காட்டமாக கேட்டார். அப்படியான அதிருப்தியையும் எதிர்ப்பையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்தம்பித்தேன்

'இல்லைங்க மேடம். அவர்களும் அப்பாவிகள்தான்...' என நான் சொல்ல முற்பட்டபோதே, 'இதோ பாருங்கள். நீங்கள் அனைவருமே நிரபராதிகளா? உங்களில் யாருக்குமே இந்த சம்பவத்தில் தொடர்பில்லையா? அப்படி என்றால் இந்த விசாரணை, சி.பி.ஐ. சாட்சிகள், ஆவணங்கள் எல்லாமும் பொய்யா? நீதிமன்ற முடிவுகள் தவறானதா? என்ன சொல்ல வருகிறீர்கள்' என கோபத்தின் உச்சிக்கு போனபோது எனக்கு நடுநடுங்கத் தொடங்கிவிட்டது.

அதற்கு மேலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்தம்பித்து நின்றேன். சி.பி.ஐ. ஜோடிப்புகள், தீர்ப்புகள் எல்லாமே தவறுதான் என்பதை எப்படி அவருக்கு புரியவைப்பது? அப்படிச் சொன்னால் அவர் குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சகிப்பது மிக சிரமமாச்சே என்று அப்படியே பிரமை பிடித்து பார்த்திருந்தேன். மேற்கொண்டு பேச எனக்கு நா குழறியது.

அவரின் ஆதங்கத்தை, அந்த எதிர்ப்பை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு, இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே இல்லையா, நம்மை ஏமாற்றி விட்டார்களா? தந்தையின் மரணத்திற்கு ஒரு நீதி கிடைக்கவில்லை. கிடைத்ததாக சொல்லும் நீதியும் ஏமாற்றப்பட்டதா? என்ற கோணத்திலான வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.
 நடுவில் இருப்பவர் நளினி

அதைத்தான் என்மீது கோபமாக கொட்டுகிறார் என்பதை புரிந்து கொள்கிறேன். அவரது கோபக் கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. கோபத்தில் அவர் பேசிய தொனி அச்சுறுத்தலாக மாறியது. சில உண்மைகளை சொல்லும்போது அப்படி அவர் ஆகவில்லை என்றால்தான் நாம் சிந்தித்திருக்க வேண்டும். நான் சொன்னதை எல்லாம் உள்வாங்கி இருக்கிறார். எனவே இயற்கையாக எழக் கூடிய உணரச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எங்களின் சந்திப்பு தொடர்ந்து 75லிருந்து 85 நிமிடங்கள் வரை இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக்கொண்டே சின்ன சின்ன கேள்விகளை எழுப்பியிருந்தார். முகத்தில் அதிருப்தியும், வெறுப்புமாக இருந்தது. சமயத்தில் ஆச்சரியம், வியப்பு ஆகியவையும் வெளிப்பட்டன.

அதன் பிறகு நான் மற்றவர்களைப் பற்றி பேசப்போய்தான் அவர் ஒரேடியாக அதிருப்தியை வெளிக்காட்டினார். தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். இந்த வழக்கின் விசாரணைஒட்டுமொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்டிருந்த மனசு ஏற்க தயாராக இருக்கவில்ல. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்.

சந்திப்பை ஒப்புக்கொண்ட பிரியங்காவின் ’’பெருந்தன்மை’’

பிரியங்காவின் பெருந்தன்மை

நான் சொன்ன தகவல் அவரைக் கோபப்படுத்தியது, அந்த கோபம் என்னை அச்சுறுத்தியது, அவ்வளவுதான். நான் சொன்ன விளக்கம் எல்லாமும் ஆவணங்களில் இருந்ததைத்தான் விளக்கினேன் என்பதையும் அறியாதவர் அல்ல. அதனால் அவருக்கு வந்த கோபம் போலியாகவே நடந்த விசாரணைக் கட்டமைப்பின் மீதுதான் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். தவிர ஒரு கைதியிடம் அவர் நடந்துகொண்ட பாங்கு மிக உயர்ந்த குணத்தைக் கொண்டதாகவே அமைந்தது.

அந்த சந்திப்பு பற்றிய செய்தி முதலில் வெளியானவுடன் சிறைத் துறை (மாநில அரசு) " அப்படிச் சந்திப்பு ஏதும் நடக்கவில்லை" என மறுத்தது. ஏன்..? பிரியங்கா "ஆமாம்...நடந்தது" என ஒப்புக் கொண்ட பின்னர்தான் உலகமே நம்பியது. அவரும் இல்லை என மறுத்து இருந்தால் அதனைத்தான் உலகம் நம்பி இருக்கும் . ஏன் எனில் அந்த சந்திப்பு நடந்ததற்கான பதிவு, ஆவணம் , அனுமதி என எதுவுமே சான்றாக இல்லை. அவரது பெருந்தன்மையினையும் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும். அவர் மறுத்து இருந்தால் என் மீது பழி சுமத்தி இருப்பர்களா? என் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டை போட்டிருப்பார்களா?

இந்த இடத்தில் ஒரு கேள்வியினை நான் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை அதே காலத்தில் ராஜிவ் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க விரும்பி இருந்தால் அவர்கள் வேண்டாம்; முடியாது என மறுத்திருக்க முடியுமா? தம் மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக அந்த வாய்ப்பினை நிச்சயம் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பி இருப்பார்கள். நழுவவிட்டால் அது அவர்களது போராட்டத்திற்கு எதிராகப் போயிருக்காதா?

அதை விட்டுவிட்டு 17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இதனுள் அடங்கியிருக்கியிருப்பதாக நினைக்கின்றேன்.

சந்திப்பால் நல்லது நடந்ததா?

அதைத் தாண்டி இன்னொன்றையும் கூறலாம். ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என நினைத்திருக்கலாம். ரகசியச் சந்திப்பை இந்த பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனாலும் பார்க்க வந்திருக்கலாம்.

இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்த சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. 'என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு என அறிக்கை கொடுத்திருந்தார். 2013ல் ஒரு பேட்டி, 'அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போன பிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரை சந்தித்த பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என மூன்று வரிகளில் கூறியிருந்தார். ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என உணர்ந்துள்ளார். அதே நேரத்தில் அவரால் வெளிப்படையாக என் விடுதலையை பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்துபோய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.


Share |

ஞாயிறு, 20 நவம்பர், 2016

வெறும் ரூ.20க்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் மரணம் - கலங்கிய மக்கள் கூட்டம்..!

உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சுகிறார்கள். காரணம் ஒரு சாதாரண காய்ச்சலாக இருந்தால் கூட அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வைத்து நம்ம பர்ஸை ஓட்டைப்போட்டுவிடுகிறார்கள்.

சனி, 19 நவம்பர், 2016

நடுரோட்டில் வைத்து அடித்து, பின்பு உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!:

 The young boy was beaten and set on fire after being accused of robbing locals and businesses in Lagos, Nigeria

நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது.
குறித்த கொடூர சம்பவம் லாகோஸ் மாநிலம் Badagry மாவட்டத்திலே நடந்துள்ளது.

வெள்ளி, 18 நவம்பர், 2016

கைதான இளை­ஞர்கள் மீது புலி முத்­திரை குத்­து­வது நியா­யமா?

ஆவா குழு உறுப்­பி­னர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளோரில் 11 பேரை எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்­டி­கல உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­துடன் இரு­வரை பிணையில் விடு­வித்­தி­ருக்­கின்றார். கடந்த இரு வாரங்­க­ளாக யாழ்ப்­பா­ணத்தில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் இந்த 13 பேரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவர்­களின் விளக்கமறியல் காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கருப்பின இளைஞரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த கொடுமை!! -(வீடியோ)

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 17 நவம்பர், 2016

இது தமிழச்சியின் பதிவு

கடந்த மூன்று வாரங்கள் இணைய தொடர்புக்கு வெளியே இருந்தேன். (வேறொரு நாட்டில்) தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு செய்ததாக தமிழகத்தில் என் மீது செப்டம்பரில் 77 வழக்கு பதிவுகள் அதிமுகவினரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தன.

புதன், 16 நவம்பர், 2016

உடல்நலன் குறித்த வெளிப்படையான அறிவிப்பு: சுஷ்மாவின் முன்னுதாரணம்

 Image copyright Getty Images
  ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ நிலை என்ன?

தங்கள் உடல்நலன் குறித்து இந்திய அரசியல்வாதிகள் ரகசியம் காத்து வரும் பொதுவான நடைமுறையிலிருந்து மாறி இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் உடல்நலன் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களின் கள்ளத்தொடர்பு

யாழ் போதனா வைத்தியசாலை கடைநிலை சிற்றூழியர்களின் திருகுதாளங்கள் ஆதாரங்களுடன் எமது புலனாய்வு செய்தியாளர்களிடம் சிக்கியுள்ளது.

திங்கள், 14 நவம்பர், 2016

ஸ்ரீலங்காவில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) மறுசீரமைப்புச் செய்யப்படுகிறது:

தற்போதுள்ள சட்டம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இழிவு படுத்தப்படுவது பற்றிய அதிர்ச்சி தரும் புதிய அறிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஸ்ரீலங்கா சர்ச்சைக்குரிய 1951ம் ஆண்டின் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை (எம்.எம்.டி.ஏ) மறுசீரமைப்பு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது, 61 பக்கங்களைக் கொண்ட ஒரு மோசமான அறிக்கை இந்த முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் (எம்.எம்.டி.ஏ) காரணமாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பல சம்பவங்களின் இழிவான பக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளது, அது முஸ்லிம் பெண்களை பாரபட்சப்படுத்தி அவர்களை நாட்டின் குடிமக்களிலும் சமத்துவம் குறைந்தவர்களாக மாற்றியுள்ளது. ஸ்ரீலங்காவுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகளை வழங்குவதற்குரிய ஒரு நிபந்தனையாக இந்த சட்டத்தை திருத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளது என்று பரபரப்பாக பேசப்படுவதற்கு மத்தியில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது. அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் பெறுவதற்கு அத்தகைய நிபந்தனைகள் எதுவும் இணைக்கப்படவில்லை, சர்வதேச உடன்படிக்கைகளில் ஸ்ரீலங்கா சில முன்னேற்றங்களைக் காண்பிக்க வேண்டியுள்ளது, அவற்றில் சில குடும்பச் சட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவது மற்றும் முஸ்லிம்களின் விவாக வயதை உயர்த்துவது போன்றவை மறுசீரமைக்கப் படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

குழந்தைகளைக் காக்க... புது இணையதளம்!

குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Apple IOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்!

வ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய‌ இமோஜிக்களில் என்ன விசேஷம்..?

காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ் அப்பில் (WhatsApp) தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணையத்துக்கு வந்திருக்கும் சோஷியல் நெட்வொர்க் - Imzy

ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது.

புதன், 9 நவம்பர், 2016

24 மணிநேரம் வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்

எலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.கூந்தல் அடர்த்தியாக வளர ஆரோக்கியமான உணவு முக்கியம். அதோடு பராமரிப்பும் தேவை. எலுமிச்சை சாறு கூந்தல் செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. பொடுகை கட்டுப்படுத்துகிறது.

சனி, 5 நவம்பர், 2016

ரஜினி, ஷாருக் காட்டிலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டிய 10 இந்தியர்கள்!

நம்மளை பொறுத்தவரை நல்லதாகவே இருந்தாலும், உலகில் சாதித்தாலும், அது சினிமா பிரபலங்களாக இருந்தால் அதிகம் பேசுவோம், நாளிதழ்களிலும் அது பெரிய செய்தியாக வெளிவரும். இது அப்போதும் மாற்றப்படவில்லை, இப்போதைக்கும் மாற்ற முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட

முன்பெல்லாம் 45-50 வயதிற்கு மேல் தான் மூட்டு வலிகள் வரும். ஆனால் இக்காலத்தில் 35 வயதை எட்டும் போதே மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. இதற்காக பலர் ஆரம்பத்தில் வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் அது தற்காலிகமாக வலியைப் போக்குமே தவிர, நிரந்தர தீர்வை வழங்காது.

வெள்ளி, 4 நவம்பர், 2016

தமிழ் சிங்கள மொழியிலான “தமிழினி” பாடல்

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை உரேஷா ரவிஹாரி பாடியுள்ளதோடு, பாடல் வரிகளை காஷ்யப்ப சத்தியப்பிரிய சில்வா என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 நவம்பர், 2016

நீங்கள் யாழ் மாவட்டத்தில் நீதிபதியாக இருக்கும்போது செய்யும் குற்றங்கள்.

01 –நீதிபதி நீதிபதியாக இருக்கும்போது பகிரங்க மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அல்லது உணர்வுகளால் தூண்டபட்டு உரையாற்ற முடியாது என்று சட்டம் சொல்லுகின்றது உங்களுக்குத் தெரியாத குற்றமா ?

யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.

“Dark Web” இணையம்

“Dark Web” “இருண்ட இணையம்” என்று ஓர் இணையம் உண்டு.

இரண்டு வகையான இணையங்கள் உள்ளன. ஒன்று நாம் அனைவரும் தகவல் தேடும் இணையம். கூகுள் சர்ச் போன்ற தேடல் சாதனங்களால் இதனைத் தேடி நாம் தகவல்களைப் பெறுகிறோம்.

புதன், 2 நவம்பர், 2016

பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா?

பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்படுகிறது.

கனடா வாழ் “அன்ரி, மம்மி, டாடி”களின் அட்டகாசம் (ஆட்டம்) – (வீடியோ)

கனடாவில் ‘என்னடி ராக்கம்மா‘ பாடலுக்கு ஒரு வயதான டாடியும், மம்மியும் சந்தோசமாக போட்ட குத்தாட்டம் இது. மகளும் ஒரு குத்தாட்டம் போட்டவாவாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல