புதன், 21 அக்டோபர், 2015

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே?

(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு..!!

நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

53 கோடி ரூபாய் மோசடி – காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது வழக்கு..

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 8 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 5.3 கோடி ரூபாய்) மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்..!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட பின்பும் ஒரு சில பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓயாமல் இருக்கின்றது.

திங்கள், 19 அக்டோபர், 2015

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு - பகுதி – 2

இக்கட்டான பரிதாப நிலை

கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அப்போது இருந்த சாதாரண மக்களின் இக்கட்டான பரிதாபகரமான ஒரு நிலையை எடுத்துரைக்கிறது. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வான்படையினரின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டது. அவர்களில் இருவர் முறையே 18ம் மற்றும் 20 வயது நிரம்பிய வாலிபர்கள். பாடசாலையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். துயரமான முறையில் அவர்களைப் பிடித்துச் செல்வதற்காக யமன் இஸ்ராயேலின் கபீர் விமானத்தின் வடிவில் வந்திருந்தான். அந்த குறிப்பிட்ட பாடசாலையின் வகுப்புகளுக்கு மாணவர்கள் சமூகமளிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்தப் பாடசாலையின் அதிபர் மாணவர்களை அடையாளம் கண்டு கடத்;துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த அதிபர் இன்று மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக உயர்ந்த அரசியல் பதவியை வகித்து வருகிறார்.

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு பாகம் - 1

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்ltte training உயர் ஆணையர் அலுவலகத்தால் தொகுக்கப் பட்ட ஸ்ரீலங்கா பற்றிய மனித உரிமைகள் விசாரணை அறிக்கையில், ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) போன்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இராணுவக் குழுக்கள் என்பன தெற்காசியாவின் மிக நீண்ட போரில் புரிந்துள்ளதாகக் கூறப்படும் செயற்பாடுகள் பற்றிய ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு அங்கத்தவர்கள் புலிக்கொடிகளையும் மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தையும் ஏந்தியவாறு ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், இந்த ஐநா அறிக்கையை வாசிப்பவர்கள், தனது சொந்த மக்கள்மீதே எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்டுள்ள கொடூரமான நடவடிக்கைகளைக் கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் அடைவார்கள்.

சனி, 17 அக்டோபர், 2015

தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வாயில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற மேற்கொள்ளும் ஒர் முறை தான் ஆயில் புல்லிங். இது பழங்காலம் முதலாக வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்றி வரும் ஓர் செயல்முறை.
ஆனால் இக்காலத்தில் இதை பலர் மறந்து, பல் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று நம் பணத்தை அவர்களுக்கு வாரி வழங்குகிறோம். ஒன்று தெரியுமா ஆயில் புல்லிங் செய்வதால், வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால்.....

நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும்.

அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள்.

வியாழன், 15 அக்டோபர், 2015

பிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள.

ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை பிறந்த தேதி வைத்து, நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

விசாரணை சூழலை எதிர்கொள்ளும் லைக்கா மொபைல் அதிபர்

சிறிலங்கா அரசிடம் இருந்து லைக்க மொபைல் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா பில்லியன் கணக்கில் பணம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல