சனி, 23 ஜனவரி, 2010

ட்ரை ஸ்டார் விமானத்தாக்குதல்!


அக்கால கட்டத்தில் தமிழ் விடுதலை இய்ககங்களை ஒன்றிணைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தமிழர் அமைப்புக்கள் மத்தியிலான ஒற்றுமை முயற்சி எனும் போது முதலாவதாக வல்வெட்டித்துறை ஞானமூர்தி, வேற்பிள்ளை, சபாரட்ணம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் 1971ம் வருடம் பெப்ரவரி மாதம் 7ம் திகதி வல்வெட்டித்துறையில் தங்கவடிவேல் அவர்களது இல்லத்தில் யாழ் மேயர் சி. நாகராசா தலைமையில் அ. அமிர்தலிங்கம், சி.நவரட்ணம், சி. சுந்தரலிங்கம், மு.சிவசிதம்பரம், சு.நடராசா, க.துரைரட்ணம், ராம கிருஸ்ணா வேலாயுதம் ஆகியோர் ஒன்று கூடினர்.

இவர்கள்தான் 9 அம்சங்களைக் கொண்ட வல்லைத் தீர்மானத்தை முன்வைத்தவர்கள்.

இந்த வல்வைத் தீர்மானம் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு யாழ் மேயர் சி.நாகராசாவினால் அனுப்பப்பட்டு பிரதமரைச் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்கப்பட்டது.

1971ம் வருடம் ஏப்ரல் மாதம் 1ம் திகதி இக்கோரிக்கைக்கு பதிலளித்திருந்த பிரதமர், சந்திக்கவும் பேசவும் தனக்கு நேரமில்லை எனக் கூறியிருந்தார்.



இதன்பின் இவர்கள் 1972ம் வருடம் மே மாதம் 14ம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் ஒன்று கூடியதன் பயனாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம், எஸ்.தொண்டமான் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோர் இக்கட்சியின் தலைவர்களாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் 1982ம் வருடம் நடுப்பகுதியில் அருளர் எனப்படும் அருள்பிரகாசம் ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார். இம்முயற்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசியல் ரீதியிலாக எதிர்கொள்ளும் முயற்சியாக இருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

இதன் பின்னர் தமிழ் விடுதலை இயக்கங்களை ஒற்றுமைப்படுத்துவதில் பத்மநாபா பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இதன் பயனாக ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ரெலோ ஆகிய அமைப்புக்கள் ஈழத் தேசிய முன்னணி என்ற பெயரில் இணைந்து கொண்டன.

இந்த அமைப்பில் 1985ம் வருடம் ஏப்ரல் மாதம் 10ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கமும் இணைந்து கொண்டது. இந்தக் கால கட்டத்தில் இந்த அமைப்பானது ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனப் பெயர் மாற்றம் பெற்றது. இது புலிகளின் இணைவுக்கு சிலகாலம் முன்பு நடந்த விடயமாகும்.


இந்த அமைப்பில் உள்வாங்கப்பட்டிருந்த பிரபாகரனுக்கு இந்த இணைவானது வெறுக்கத்தக்க தொன்றாகவே இருந்தது. எனவே இந்த அமைப்பின் கூட்டங்களில் அவர் கலந்து கொண்ட போதிலும் எப்போதும் மௌனமாகவே இருக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தார். இந்த அமைப்பின் முதலாவது கூட்டத்தில், நாட்டில் நிலவும் நிலைமைகள் தொடர்பில் ஏனைய தலைவர்கள் பேசும் போது அதில் எந்தவிதமான அக்கறையும் இன்றி பிரபாகரன் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். பிரபாகரனின் இந்த மௌனத்தைக் கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர் ஒருவர் “நீங்களும் உங்களுடைய கருத்துக்களைக் கூறலாமே!” என்ற போது,

“நீங்கள் பேசுங்கள்… எனக்கு நன்றாகக் கேட்கிறது… தொடர்ந்து பேசுங்கள்” என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.

இவ்வாறான கூட்டங்களில் பிரபாகரனுக்கு பதிலாக விடுதலை புலிகள் இயக்கம் சார்பில் அன்ரன் பாலசிங்கம் அதிகமாகப் பேசி வந்தார்.

இந்த இணைவு ஏற்பட்டு சிறிது காலம் செல்கையில் இந்த நாட்டில் போராளிகளின் செயற்பாடுகள் மிக அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த நிலையில் போராளிகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை அரசு ‘ஸ்ரீ லங்கா விN~ட செயற்பாட்டு படை’ (ளுவுகு) யை ஆரம்பித்தது.

இதனிடையே 1985ம் வருடம் ஜூன் மாதம் 18ம் திகதி இந்திய தலையீட்டினால் இலங்கை அரசுக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த யுத்த நிறுத்தத்தின் பின்னர் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எனினும் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் ஒருபோதும் இணங்கவில்லை. இருப்பினும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜீவ் காந்தி அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்தார். 1984ம் வருடம் ஒக்டோம்பர் மாதம் 31ம் திகதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதன் பின்னர் அவரது மகனான ராஜீவ் காந்தி பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தி இலங்கை அரசுக்கு சாதகமான தீர்மானங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்தவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த விமானமொன்று இந்தியாவில் தரையிறங்குவதற்கு அவர் அனுமதி அளித்திருந்தார். இந்த வகையில் இந்திராகாந்தியின் செயற்பாட்டை விட இலங்கைக்கு சார்பான நல்லதொரு பின்னணி இந்தியாவில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

திம்பு பேச்சுவார்த்தை
பிரபாகரன் விருப்பங் கொண்டிராத நிலையிலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் இலங்கை அரசும், தமிழ் இயக்கங்களான விடுதலைப் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன திம்பு நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததுடன் பிரபாகரனின் வெளித் தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படலாயின. அதாவது மீசையை அவர் எடுத்திருந்தார்.

“நாங்கள் போராடும் போது மட்டும்தான் மீசை வைத்துக் கொள்வோம். சமாதானம் பற்றி பேசுவதற்கு வரச் சொன்னால் நாங்கள் மீசையை எடுத்து விடுவோம்” என இதற்கவர் கேலியாக பதிலளித்திருந்தார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாக பிரபாகரன் பூட்டானின் தலைநகரான திம்புவதற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்தார்.

இப்பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு சார்பாக ஹெக்டர் ஜயவர்தன, எம்.எல்.டி.சில்வா, எஸ்.எல். குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் ஆகியோரும் ரெலோ சார்பாக மோகன், சார்ள்ஸ் ஆகியோரும் புலிகள் இயக்கம் சார்பாக லோரன்ஸ் திலகர், சிவகுமார் ஆகியோரும் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜபெருமாள் மற்றும் கேதீஸ்வரனும் ஈரோஸ் சார்பாக இரத்தினசபாபதி மற்றும் சங்கர் ராஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் மாவட்ட அபிவிருத்தி மற்றும் பன்முகத் தன்மை தொடர்பிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழர் தரப்புப் பிரதிநதிகள் இந்த யோசனைகளை நிராகரித்தனர். தமிழர் தரப்பில் நான்கு அம்சங்கள் முன்வைக்கப்பட்டன. ‘திம்புக் கோட்பாடு’ என அழைக்கப்படும் இந்த நான்கு அம்சங்களை முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை வெற்றியடைவதற்கு இந்த நான்கு அம்சங்களும் அடிப்படையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன.

திம்புக் கோட்பாட்டின் நான்கு அம்சங்கள் பின்வருமாறு.
1. இலங்கைத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. இலங்கையில் தமிழர்களுக்கென இனங்காணப்பட்ட தாயகம் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. இலங்கைத் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
4. இலங்கையைத் தாயகமாகக் கொண்ட அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த நான்கு அம்சங்களை இலங்கை அரசு நிராகரித்தது. உண்மையிலேயே இந்தப் பேச்சுவார்த்தையானது எந்தப் பயனையும் தராது என்பது ஆரம்பந்தொட்டே தெரிய வந்திருந்தது.

இரு தரப்பினரும் இரு தரப்பினரையும் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். சில சந்தர்ப்பங்களில் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த இரு தரப்பினருக்கும் இடையில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்தது.

இதன் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகள் நடந்து கொண்ட முறை குறித்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஸ் பண்டாரியும் சினம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. 1985ம் வருடம் ஜனவரி மாதம் 8ம் திகதி ஆரம்பித்திருந்த இப்பேச்சுவாது;தையின் இரண்டாம் கட்டம் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி தொடங்கி 17ம் திகதி வரை நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த போதே இப்பேச்சுவார்த்தைகளை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல இயலாத நிலை தோன்றியிருந்தது. இதனால் புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்ற அமைப்புகள் தங்கள் தரப்புப் பிரதிநிதிகளைக் குறைத்து ஓர் அமைப்புக்கு ஒருவர் வீதம் கலந்து கொள்ளச் செய்திருந்தன. பிரபாகரன் தனது இரு பிரதிநிதிகளையும் சென்னைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

பிரபாகரன் தனது பிரதிநிதிகளை இப்பேச்சுவார்த்தைகளிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தது மட்டுமல்லாது ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து மிகுந்த கோபங் கொண்டிருந்தார். கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஏனையவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அத்தோடு திம்புப் பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் ஒதுங்கிக் கொண்டதுடன், பாலசிங்கம் ஏனைய அமைப்புகளுக்கு இது தொடர்பில் அறிவித்திருந்தார்.

பாலசிங்கம் இந்தியாவில் இருந்தார். அப்போது இந்திய அதிகாரிகள் அவர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தியிருந்தனர். இவர் ஒரு வெளிநாட்டு ஒற்றர் என்று கூறப்பட்டது.

இதனிடையே சென்னையில் இவர் தங்கியிருந்த வீட்டின் மீது பாரிய குண்டொன்று வெடித்தது. இதலிருந்து பாலசிங்கம் உயிர்தப்பினார். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது திம்பு பேச்சுவார்த்தை முறிவடைந்திருந்தது.

இதன் பின்னர் இதுவரை காலமும் இருந்த யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொள்வதற்கு புலிகள் உள்ளிட்ட ஏனைய இயக்கங்கள் முனைந்தன.

புலிகள் தங்களது வன்முறைகளை மீண்டும் ஆரம்பித்திருந்தனர். இதன்படி 1986ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி பொலன்னறுவை மாவட்டத்தில் சோமாவதிய பகுதிக்கருகில் உள்ள திருகோணமடு பகுதிக்குள் நுழைந்த புலிகள் தாக்குதல்களை மே;றகொண்டிருந்தனர். இதன் போது ஆறு சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி அறந்தலாவை எனும் சிங்களக் கிராமத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்பு இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்தது. இதற்குள் அப்பாவி தமிழ் மக்கள் பலரும் சிங்கள மக்களும் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டிருந்தனர்.

1986, மே மாதம் 03ம் திகதி, எயார் லங்கா விமான சேவைக்குத் சொந்தமான யூ.எல். 520 ரக ட்ரைஸ்டார் விமானம் இலண்டன், சுரிச், டுபாய் ஊடாக இலங்கைக்கு வந்திருந்தது.

காலை 7.30 மணி இருக்கும். ‘சிடி ஒப் கலம்பு’ எனும் பெயரைக் கொண்டிருந்த இந்த விமானம் அடுத்ததாக மாலைதீவுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது.

நேர அட்டவணையின் பிரகாரம் இவ்விமானம் காலை 9.14க்கு புறப்பட வேண்டும்.

இந்த விமானத்தில் 276 பயணிகள் பயணஞ் செய்ய இயலும். அன்றைய தினம் 133 பயணிகளே மாலைதீவு நோக்கிச் செல்லவிருந்தனர். இவர்களில் அநேகமான வெளிநாட்டவர்களும் அடங்கினர்.

நேரம் காலை 9.10 ஐ அண்மித்துக் கொண்டிருந்தது.

இதுவரையில் 111 பயணிகள் விமானத்தில் ஏறியிருந்தனர்.

22 பயணிகள் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தனர். நேரம் சரியாக காலை 9.10 ஐக் காட்டும் போது, சூழ இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓட ஆரம்பித்தனர்.

ட்ரைஸ்டார் விமானத்தின் நடுப்பகுதி இடி ஓசையை எழுப்பியவாறு இரண்டுத் துண்டங்களாகின. விமானத்தின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கிய போது, தீச் சுவாலை அவற்றினூடாக வெளியேறி, அப்பகுதியையே ஆக்கிரமித்துக் கொண்டது.

இத்தாக்குதலில் 17 பயணிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். இன்னும் சிலரது உடம்புகளில் தீப்பற்றிக் கொண்டிருந்தது. இவர்கள் எரியும் நெருப்பை உடம்புகளில் ஏந்தியவாறு சிதைவுகளினூடாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.

மாலைதீவைச் சேர்ந்த ஜமீலா அப்துல் எனும் பெண்மணி தனது 5 வயதுடைய மகன் உசைன் ~pயாதின் நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தார்.

உரிய சிகிச்சை முடிந்து மகனுடன் மாலைத்தீவு நோக்கிச் செல்வதற்காக அந்த விமானத்தில் ஏறி இருந்தார்.

இத்தாக்குதலில் இப்பெண் தனது பிள்ளையை கட்டித் தழுவியபடியே கொல்லப்பட்டிருந்தார். இக்காட்சி அப்போதைய ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

மகனின் கைகள் இரண்டும் முறிந்து தாயும் மகனும் தீயினால் கருகியிருந்தனர். மறுநாள் இவர்கள் இருவரின் சடலங்களும் ஜாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கஞ் செய்யப்பட்டன.

இன்னுமொரு பெண் மாலைதீவில் இருக்கும் தனது கணவரைச் சந்திக்கும் எதிர்பார்ப்புகளுடன் விமானத்தில் ஏறியிருந்தார். அதிர்~;டவசமாக உயிர்த்தப்பிய இவரது உடமைகள் யாவும் எரிந்து சம்பராயிருந்தன.

இவ்வாறு இத்தாக்குதல் அக்கால கட்டத்தில் பெரும் சோகங்களையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், இத்தாக்குதலின் மூலம் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 41 பேர் காயமடைந்திருந்தனர்.

1986ம் வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த ட்ரைஸ்டார் விமானம் தாக்குதலுக்கு உட்படுவதற்கு சிலகாலம் முன்பாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.

இத்தாக்குதல் தொடர்பிலும் இலங்கைத் தமிழ் இயக்கங்களே சந்தேகிக்கப்பட்டன.


இப்னு அசூமத்

நன்றி: வெளிச்சம் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல