சனி, 23 ஜனவரி, 2010

பிரான்சுக் கலாசாரத்தில் மூழ்கிப் போயுள்ள மொரீஷியஸ் தீவு மக்கள்!


இந்து சமுத்திரத்தில் பரிணமித்துள்ள ஒரு சிறு தீவுதான் மொரீஷியஸ் ஆகும். இத்தீவு இந்திய பெருங்கடல், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய கடல்களால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

மடகஸ்கருக்கு அருகில் நிலை கொண்டுள்ள மொரீஷியஸ் தீவு மிகவும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டுள்ளது எனலாம். அதன் தொன்
 மை நாணூறு ஆண்டுகளுக்குட்பட்டது என்று ஆய்வாளர்கள்
 கூறுகின்றனர்.


இந்த 400 வருடங்களுக்குள் மொரீஷியஸ்தீவு பல வெளிநாட்டவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந் தது குறிப்பிடத்தக்கது. இத்தீவைக் கண்டுபிடித்த பெருமை டச்சுக்காரரையே சாரும். ஆனால் மொரீஷியஸ் டச்சுக்காரரால் ஐந்து ஆண்டுகள் மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அதனை அடுத்து பிரெஞ்சுக் காரரின் ஆதிக்கம் எந்தவித இடையூறுமின்றி சுமார் நூறு வருடங்கள் நீடித்தது. மூன்றாவதாக ஆயிரத்து எண்ணூற்று பதினான்காம் ஆண்டு மொரீஷியஸ் தீவை பிரிட்டிஷார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது அத்தீவின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்ற மடைந்ததாக வரலாறு சான்று பகர்கின்றது.

பன்னெடுகாலம் உலகத்தின் கவனத்தில் படாமல் மொரீஷியஸ் மறைந்திருந்ததாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தீவு உலகமக்களின் கவனத்தை ஈர்த்திற்கு இரு பிரதான காரணிகள் கூறப்படுகின்றன. ஒன்று அத்தீவில் மட்டும் காணப்படுகின்ற ‘டோடோ’ என்ற பட்சியின் பரிணாமமாகும் இன்னொன்று மொரீஷியஸ் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது வெளியிட்ட தபால் தலையைக் குறிப்பிடலாம்.

நல்ல உயரத்திற்கும் கூட பறப்பதற்கு ஏற்றவாறு உகந்த இறக்கைகள் அற்ற புறாவின் சாயலையுடைய பட்சியைத் தான் டோடோ பட்சி என்று அழைக்கின்றனர். இப்பறவையைத் தற்செயலாக கண்ட சிலர் அதனை வேட்டையாடிப் பிடிக்கவும் அதைப்பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபடுவதற்காகவும் அத்தீவிற்கு சென்று குடியேரினார்கள். அவுஸ்திரேலியா நாட்டில் கங்காறு என்ற விலங்கு எவ்வளவு பிரசித்தி பெற்றதாக திகழுகின்றதோ அதேமாதிரி டோடோ பட்சி மொரீஷியஸ் தீவில் உலாவித்திரிகின்றது.

ஆங்கிலேயர் மொரீஷியஸ் தீவை ஆட்சி செலுத்திய போது முதன்முதலில் அங்கு தபால் தலையொன்றை வெளியிட்டது. வெளிநாட்டிலுள்ளோர் மொரீஷியஸ் என்று பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகளைக் கண்ணுற்ற பிறகே உலகில் மொரீஷியஸ் என்ற நாடு உள்ளது என்பதை உணர்ந்து கொண்டனர். முதன் முதலில் நாணூறு தபால்களை அச்சிட்டு அஞ்சல் நிலையங்களுக்கு விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டது. ஆனால் அக்கால கட்டத்தில் நூறு ‘ஸ்டாம்புகளை’ விற்பதற்கே தபால் நிலையங்கள் படாதபாடு பட்டனவாம். ஆனால் அதே பழைய முத்திரிகைளை தற்பொழுது முத்திரை சேகரிப்போர் ஆயிரக்கணக்கான ரூபா கொடுத்து வாங்குவதற்கு தயாராக உள்ளனர்.

மொரீஷியஸ் தீவை பிரிட்டிஷ்ஷார் கடற்படைத்தளமாகப் பயன்படுத்தினார்கள். அதேவேளை அம்மக்களுக்கு ஓரளவிற்குச் சுதந்திரமும் அளித்தனர்.

மொரீஷியஸ் தீவு நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிரெங்சு நாட்டின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அந்நாட்டு மக்களோடு பிரெஞ்சு பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, கலாசாரம் என்பவை இரண்டறக் கலந்து விட்டதாம். இன்று மொரீஷியஸ் மக்களின் எந்தவொரு உற்சவத் திலும் பிரெஞ்சின் மணம் கமழுவதைக் காண லாம் ஆதியில் மொரீஷியஸ்ஸை ‘(பிரெஞ்சுத் தீவு” என்றே பெயர் கொண்டு அழைத்தனர்.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றையகாலகட்டத்தில் கூட அங்குள்ள பிரதான துறைமுகத்திற்கு ‘போர்ட் நெப்போலியன்’ என்ற பெயரே மிளிருகின்றது. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகைகள்? பூங்காக்கள் இன்றும் காட்சி தந்த வண்ணமே உள்ளன. இன்று கூட நெப்போலியன் வகுத்த சட்ட திட்டங்களேநடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது அங்கு நடைபெறும் பிரதான அரச நிகழ்வின் போது முதலில் பிரெஞ்சு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னரே பிரிட்டிஷ் தேசிய கீதம் பாடப்படுகின்றது.

மொரீஷியஸ் தீவு மக்கள் கொச்சையான பிரெஞ்சப் பாஷையையே பேசுகின்றனர். அத்தீவிற்கும் இந்தியாவிற்கும் இடையே குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டது பிரெஞ்சுக்காரரின் ஆட்சியின் போதுதான்.

பாரதத்தில் சந்திர நாகூரும், புதுச்ஙசேரியும் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த சமயமே அதிகமான இந்தியர்களை விசேடமாகத் தமிழர்களை பிரெஞ்சுக்காரர் பல்வேறு பணிகளுக்காக மொரீஷியஸ்ஸிற்கு அழைத்துச் சென்றனர்.

அரச சேவையில் சுமார் பதினையாயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையான பணியாளர்கள் இந்தியர்களாகவே உள்ளனர். அரசாங்க சேவை புரிவோர் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று முப்பது வரை பணியாற்றுகின்றனர் அரச பணி மிக குறைந்த அளவு காணப்படுவதினால்தான் இந்த ஏற்பாடு.

மொரீஷியஸ் தீவில் அரச பணியில் உள்ளோர் ஒரு மாத காலத்திற்கு விடுமுறைக்கு விண்ணப்பித்து விட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். பிரயாணச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்கின்றது. அப்படிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வோரில் பெரும்பான்மையானோர் இங்கிலாந்து நாட்டிற்குச் செல்வதையே விரும்புகின்றனர்.

இந்தியாவிலிருந்து முதன்முதல் இறக்குமதியான சரக்கு மனிதர்கள் தான் என்று கூறினாலும் மிகையாகாது. பாரதத்திலிருந்து பயன்தரவல்ல தாவரங்களையும், பல்வேறுபட்ட பறவையினங்களையும் மொரீஷியஸ் தீவிற்கு கப்பல் மூலம் இறக்குமதி செய்தனர். முதன் முதலில் மொரீஷியஸ்ஸில் புழக்கத்திற்கு விடப்பட்ட நாணயங்களும் இந்திய ரூபாய்களே, மொரீஷியஸ் தீவில் ரூபாய் நோட்டுக்களை அந்நாட்டு மத்திய வங்கி புதிதாக அச்சிடும் போது அவற்றின் பெறுமதியை தமிழ் மொழியிலும் பொறிக்கத் தவறுவதில்லை.

1996ம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் அங்கு இருப்பத்து ஐயாயிரம் தமிழர்கள் வசித்தார்களாம். ஆனால் தற்பொழுது அவர்களைப் பார்த்த மாத்திரமே தமிழர்கள் என்று இனங்காண முடியாது.

காரணம் அவர்களுக்கு தமிழ் மொழியும் தெரியாது. தமிழர்களின் நடையுடை பாவனையும் அவர்களிடம் காணவே முடியாது. மொரீஷியஸ் தீவிலுள்ள முதுமைப்பருவத்தை எட்டிய தமிழர்களுக்கே தமிழை நன்றாகப் பேச முடியும். இன்றைய இளம் தமிழ் சமூகத்தினர் ஆங்கில மொழியில்தான் தங்களுக்குள் உரையாடுகின்றனர்.

மொரீஸியஸ் தீவுக்கும் தமிழருக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் புராதன காலத்தில் தென்பட்டதற்கான ஆதாரமாக மொரீஷியஸ் தீவின் பல வீதிகள் தமிழ்பெயரைத் தாங்கியுள்ளன. மதராஸ் வேலுர், திருச்சிராப்பள்ளி, காரைக்கால், துரை, திருநெல்வெலி போன்ற பெயர்களைக் கொண்ட தெருக்கள் காணப்படுகின்றன. உணவுப் பண்டங்கள் சிலவற்றின் பெயர்கள் கூட தமிழ் வாடை வீசுகின்றது. கருவேப்பி லையை அந்நாட்டு மக்கள் கருப்பலே என்று கூறுகின்றனர். அவருக்காயை அவ்ரகா என்றும் கொத்தமல்லியை கோதாமலி என்கிறார்கள். வெற்லையை பெதல் என்கின்ற அதேவேளை பாக்கு அங்கே பக் ஆகின்றது.

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து ஐந்தாம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சிவன் கோயிலொன்று அங்கு உள்ளது. அக்கோயிலைக் கட்டியவர் சங்கரன் என்ற தமிழராவதார். இந்தக் கோவில் களிமண் சோ என்னுமிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு வாழ்கின்ற தமிழர்களும் தமிழ் கூறும் நல்லுலகெ ங்கம் பின்பற்றப்படுவது போன்று தீமிதிப்பு விழா தேர்த்திரு விழா போன்ற ஆன்மீக நிகழ்வுகள் தொடருகின்றன.

மொரீஷியஸ் தீவில் ஆங்கிலம், பிரேஞ்சு, இந்தி, மீனம் போன்ற மொழிகளில் தினப்பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஒரே பத்திரிகையில் பல்வேறு மொழிகள் இடம்பெறுவது அங்கு சர்வசாதரணமான விடயமே. மாதம் இருமுறை பிரசுரமாகின்ற ஜமானா என்ற சஞ்சிகையில் தமிழுக்கும் சிறிது இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

தற்பொழுது மொரீஷியஸில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்டவர்களாக அதனைக் கற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுத்தும் வருகின்றனராம். இதன் காரணமாக இளைய சமூகத்தினர் ஆங்கிலத்துடன் தமது தாய்மொழியான தமிழையும் பேசுவதற்கு பயிற்சியெடுத்து வருகின்றனர். அத்துடன் நின்றுவிடாது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளையும் வைத்துக் கொள்ள முன்வந்துள்ளனர்.

மொரீஷியஸ்தீவு மக்கள் பிரேஞ்சு கலாசரத்தில் ஊறித்திழைத்து நிற்கும் இத்தருணத்தில் தமிழகத்துடன் தொடர்புபள் வைத்திருப்பது போற்றத்தற்குரியது என்பது வெள்ளிடைமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல