செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கால் பதித்த தடயங்கள்

எனக்கே
என்னை ஞாபகமில்லை
என் நினைவு பூராவும்
உடம்பு பூராவும்
உன் ஞாபகம் என்ற
போர்வையால்
போர்த்தப்பட்டுள்ளேன்.

பெண்ணே
உன்னை இல்லை..
என்னை
ஊடுருவிய அந்த
விகாசம் மிகுந்த
விழிகளுக்குள்
கைதியானநாளை
மறக்க முடியுமா?

இதயத்துக்குள் இவ்வளவு
இந்திர ஜாலமா?
என் விண்ணப்பத்தை ஏற்ற
விண்மணியல்லவா நீ?
சத்திரமாக்கப்பட்ட
சந்தோஷத்தின்
காதலர் தினமே நீயே
காவியத் தலைவன்.

அஞ்சுகமே உன்
ஆன்மாவுக்குள் என்
பருவம் என்ற
விதை விருட்சமாகி
இல்லறத்தில் இணைந்த
இந்நாளை
மறக்க முடியுமா?

நம்முள் அடைக்கலமான ஒரே
அன்பளிப்பை
ஆனந்தக் கண்ணீருடன்
அர்ப்பணித்துக் கொண்டோமே
இறுதியில் சொல்கிறேன்.
நம் காதல் வாழ்க்கை
சருகுகள் அல்ல..
சத்தியத்தின்
திறவுகோல்.

மதியே உன் அன்பென்ற
ஆளுமையில்
காலம் காலாவதியானது
தெயவில்லையே?
இளமை விடைகொடுக்க
முதுமைக்கு கிடைத்த
அழைப்பிதழ்....
அதனால்தானோ உன்
அத்தியாயம்
கல்லறைக்குள்
அடைக்கலமானதோ?

இதோ இந்த
காதலர் தினத்தில்
நீ தந்த இதயத்தையும் என்
கண்ணீர்த் துளிகளையும் உன்
கல்லறையில்
காணிக்கையாக்குகிறேன்.

பாத்திமா நளீரா
வெல்லம்பிட்டிய
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல