நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சொப்ட்வேர் என்ஜினியர் வித்யாசாகருக்கும் கடந்த வருடம் ஜுலை மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ‘வரவு எட்டணா செலவு பத்தனா’ என்ற தமிழ் படம் தற்போது கன்னடத்தில் தழுவல் ஆகிறது. ஜி. ஆர். தயாரிக்கிறார்.
இதில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக நடித்து வருகிறார். மலையாள படமொன்றிலும் நடிக்கிறார்.
திருமணத்துக்கு பிறகு மீனா குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று கணவர் வீட்டார் விரும்பினர். ஆனால் மீனா அதற்கு உடன்படவில்லை. நிறைய புதுப்படங்களுக்கு கால்iட் கொடுத்துள்ளார்.
கணவர் வித்யாசாகரும் மாமியாரும் குடும்பத்தில் மீனா அக்கறை இல்லாமல் இருப்பதாக சக உறவினர்களிடம் ஆதங்கப்படுகிறார்களாம்.
திருமணம் முடிந்தவுடன் மீனாவை அழைத்துக்கொண்டு தேனிலவு செல்ல வித்யாசாகர் விரும்பினார். ஆனால் கடைசி நிமிடத்தில் மீனா படப்பிடிப்புக்கு கிளம்பியதால் ரத்துச் செய்யப்பட்டது.
சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஒப்புக்கொள்கிறாராம். மத்தியஸ்தர்களை வைத்து சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக