செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தேயிலைத் தேசத்தின் சின்ன அழகிக்காய்

நீ
அணிந்து கொள்வதால்தானே
இறப்பர் வளையல்களுக்கும்
மதிப்பு உயர்கிறது

அழகிய
தோடுகளை விடவும்
கறிவேப்பிலைக் குச்சி
காதுகளுக்கு அழகென
உனை பார்த்தபின்பே
உணர்ந்து கொண்டேன்

நீ பேசுவதால்தானே
அரைகுறைத் தமிழ்கூட
அகராதித் தமிழைவிட
அழகு பெறுகிறது

நீர்க்குடம் சுமப்பது
சுமையல்ல
அழகை அதிகரிக்கும்
அற்புத தருணம் அதுவென
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொருவரும்
ஒத்துக்கொள்வர்

எந்த மேக்கப்பும்
இட்டுக் கொள்ளாமலே
என்னமாய் ஜொலிக்கிறது
உந்தன் கறுப்பு வதனம்

கோடி பொருத்தமில்லா
மாறுபாடான பாதணிகளை
மங்கை உந்தன் பாதம்
மாட்டியிருப்பதை பார்த்தேன்
அடடா...........
வேறுவேறு காலணிகளும்
வித்தியாசமான அழகுதான்

உழைப்பின் எதிரியான
அப்பாவுக்குமாய்............
உடலில் நோயுற்ற
அம்மாவுக்குமாய்........
பத்து வயதையும்
தொட்டுவிடாத
மூன்று தங்கைக்குமாய்
தோளிலே கூடையேற்றி
துவளாமல் மலையேறி
கொழுந்து பறித்து
குடும்பம் காக்கும்
இப்போது வெளிச்சத்தில்
ஆனால்
உன் வாழ்வு மட்டும்.........

குடும்ப மரத்தின்
கிளைகளுக்காகவே
பணம் புரிவதை
மறுதலித்து நிற்கும்
மலைநாட்டு மங்கையே....
நித்தம் நீங்கள்
எரிந்து கொண்டிருப்பதால்
தேசமெனும் வீடு
உயர்ந்து கொள்கிறது
உங்கள் லயன்கள் மட்டும்
அப்படியே..............
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல