தமிழ் சினிமாவை மறந்து விட்டீர்களா?
தமிழ் சினிமாதான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்த இடம். அதை எப்படி மறக்க முடியும். தமிழ் ரசிகர்கள் என்னை நன்றாகதான் ஆதரித்தார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களால் தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. அந்த சமயங்களில் கிடைத்த மாற்று மொழி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். அதற்காக தமிழ் சினிமா பக்கமே இனி வர மாட்டேன் என நினைக்க வேண்டாம். தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
மாற்று மொழிகளில் வாய்ப்புகள் எப்படி?
கன்னடப் படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவைப் போல அங்கும் ஹீரோயின்களிடையே போட்டி அதிகமாக இருக்கிறது. அந்தப் போட்டியில் நானும் இருக்கிறேன். தமிழைவிட நல்ல கேரக்டர், கிளாமர் என நடிப்புக்கான களம் அங்கே இருக்கிறது. தொடரும் வாய்ப்புக்களால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நயன்தாரா கன்னடத்துக்கு வரப் போவது தெரியுமா?
அப்படியா? எனக்குத் தெரியாது. இப்போதே கன்னடத்தில் நல்ல போட்டி இருக்கிறது. நயன்தாரா வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். நயன்தாராவை வரவேற்று அவருடனான போட்டிக்கு தயாராக வேண்டும்.
தமிழைப் போல் ஹிந்தியிலும் உங்கள் கவர்ச்சி அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறதாமே?
தமிழ் சினிமாவுக்குப் பின் ஹிந்தியில் சில படங்கள் வந்தன. அந்தப் படங்கள் யாவும் வெற்றி. பத்திரிகையாளராக நடித்த ‘ஜகருதலா’ நன்றாக போனது. கிளாமர்தான் என்னை தேடி வந்தது. அதில் பிடித்ததைச் செய்துவிட்டு வந்து விட்டேன். மீண்டும் ஹிந்திக்கு செல்லும் திட்டம் இல்லை. நல்ல கேரக்டர்கள். கதை அமைப்பு வந்தால் பார்க்கலாம். ஹிந்தியில் என் கிளாமர் பேசப்பட்டது உண்மை.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நீங்களும் இணைந்திருக்கும் படங்கள் இணையத் தளங்களை கலக்குகிறதே?
எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஸ்ரீசாந்த் அப்பா. அதனால் ஸ்ரீசாந்த்துவை சிறு வயதில் இருந்தே தெரியும். என் அம்மாவின் பிறந்த நாளை மும்பை ஹோட்டலில் கொண்டாடி னோம். அந்த விழாவுக்கு ஸ்ரீசாந்த் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் இணையத் தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது வழக்க மான ஒன்றுதான் இதற்கு காதல் அல்லது வேறு மாதிரியோ வதந்தி பரவினால் அதற்கு நான் பொறுப்பல்ல. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக