
சோமவதி சவப்பெட்டி தயாரிக்கிறார்.
எம்பிலிபிட்டிக்குச் சென்றால் இவரை நேரில் காணலாம். எம்பிலிபிட்டி, கொலொன்ன என்ற ஊரிலுள்ள இருபத்தொன்பது கிராமப் பிரிவுகளிலும் இப்பெண் பிரபல்யமிக்கவர்.
கையில் கத்தரிக்கோல் கத்தியுடன் காணப்படும் இப்பெண்ணின் பெயர் சோமவதி தேவநாராயண் சவப்பெட்டி கடையொன்றை நடத்திவருகிறார். கொலொன்ன பொலிஸ் நிலையத்தின் அருகிலுள்ள இக்கடையில் நம்பிக்கையான இரு ஊழியர்களிருப்பினும் எல்லா வேலைகளையும் சோமவதி செய்து வருகிறார்.
ஒருவர் இந்ததும் என்னை தேடி வருபவர்களுக்கு அனைத்தையும் செய்து கொடுக்கிறேன். மனதர்கள் இறந்ததும் சவம் என்று பெயராகிவிடுகிறது சவத்தை கடைக்கு கொண்டு வந்ததும் உரியவர்கள் கூறியபடி குறிப்பிட்ட நாட்களுக்கு கெடாதவாறு எம்பாம் செய்கிறேன். உடல் அறுவை மூலம் அதனை செய்ய வ§ண்டும். இதையடுத்து இறந்தவரின் அளவுக்கேற்ப உடைகளை தைக்கிறேன், சவப் பெட்டியையும் நானே தயாரிக்கிறேன், பாவாடை, மலர் வளையம், வாசனை திரவியம் உட்பட இதர பொருட்களை வழங்குவதுடன் சவப்பெட்டியை வீட்டுக்கு அல்லது மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஹர்ஸ் எனும் வாகனத்தை செலுத்த ஒருவருமில்லையெனில் நள்ளிரவு பன்னிரெண்டு மணியானாலும் நானே எடுத்துச் சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றார் சோமவதி.
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் உயர்தரத்தில் சித்தியடைந்த இவர் தன் பெற்றோருக்கு சுமையாகயிராமல் சிறுவயதில் தொழிலுக்கு சென்றார். முதலாவதாக திஸ்ஸமஹாராமையில் உள்ள மோட்டார் கராஜில் வேலை செய்தார். எவ்வித வாகனங்கள் உடைந்தாலும் அதனை திருத்தியமைக்க இவரால் முடியும். வாகன சில்லின் டியூப்களுக்கு பெச்சிடுதல், இயந்திரத்தின் கீழ் சென்று திருத்தும் வேலை, கம்பி வெட்டும் வேலை, வீடுகளுக்கு மின்சார இணைப்புக்காக ஆரம்ப வேலைகள் (வயரிங்) செய்தல் முடியுமென்றும் ஒரு வேலையை ஒரு முறை பார்த்தால் அதனை சரியாகச் செய்யும் ஆற்றல் இவரிடமிருப்பதாக கூறினார்.
என்னுள்ளிருந்த திறமை காரணமாக எனக்கு நம்பிக்கையிருந்தது என்னாலும் எம்பாம் செய்யும் வேலையை செய்ய முடியுமென்று. எம்பாம் செய்யுமிடங்களுக்கு சென்றதால் அதனையும் கற்றேன். நான் இருபதாவது வயதையடைந்ததும் சிறிய வயது முதல் என்னுடன் பாடசாலைக்கு வந்த எனது மைத்துனரை மணந்தேன். வீட்டு செலவுக்காக ஒரு சதமேனும் என் கணவரிடம் நான் பெற்றதில்லை என் கையில் எப்போதும் பணமிருந்தது.
கணவர் சம்பதிப்பது அவருடைய செலவுக்கு சரியாக இருந்தது. எங்களுக்கு இரு பிள்ளைகளுண்டு மகனுக்கு இருபத்து நான்கு வயது, மகளுக்கு பதின்மூன்று என்வயது தற்போது நாற்பத்தெட்டாகிறது’ என்றார்.
சொந்தமாக சவப்பெட்டி சாலையொன்றை அமைக்கவிருக்குமிடம்.
சவப்பெட்டி, எம்பாம் வேலைகளில் கணவர் உங்களுக்கு உதவுவதில்லையா என கேட்டபோது ‘நான் மரண வீடுகளுக்கு செல்வது எம்பாம் செய்வது சவப்பெட்டி, உடைகள் தயாரிப்பதில் என் கணவருக்கு விருப்பமில்லை; எதிர்ப்பும் தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியூட்டி நற்பிரஜைகளாக்க வேண்டுமென்பதால் கொலொன்ன பிரதேசத்துக்கு வந்த 1985ம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் பூணிப்பாயுள்ளேன். என் தொழில், கணவருக்கு விருப்பமில்லையாதலால், என்னில் விருப்பமின்றி விட்டுச் சென்றார். இவரது வீடு மாத்தறை கடற்கரையருகிலிருந்தது. இங்கு ஏற்பட்ட ஆழிப் பேரழிவில் கணவரும் அவரது குடும்பத்தில் பலரும் இறந்தனர். கணவரின் சடலம் கிடைத்ததால் பெளத்த ஆலய மதகுருவுடன் சென்று இறுதி கிரியைகளை செய்துமுடித்து வீடு திரும்பினேன்’ என்றார் சோமவதி. இவர் இரும்புப் பெண்ணென்று அழைக்கப்பட்டாலும் மனதில் ஈரமிருந்தது. மேலும் அவர் கூறியதாவது:-
மரண வீடுகளுக்கு சென்றால் சிலர் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இறுதிக் கிரியைகள் நடைபெறுவது கூடாதென்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மனிதன் பிறப்பதில்லையாயென்று நான் கேட்கிறேன். இதிலேதும் பிழையுண்டா. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பிறந்த விற்பன்னர்கள் பலர் உலகிலுள்ளனர்.
நாம் சவத்தை வெட்டுவதற்கான மேஜையொன்றுண்டு. தேவையென்ற மனப்பக்குவத்துடன் பார்ப்பவர்களுக்கு இதனை காணலாம். இதனை காண்பதால் எங்களுக்கென்ன குறை வந்துவிடப் போகிறது. உலக வாழ்வை சரியாக உணர இவற்றை பார்ப்பது நல்லது’ என்று சொன்ன சோமவதி மேலும் கூறியதாவது :-
நான் மூன்றரை வருடங்களாக கொலொன்ன ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின் போது சடலங்களை வெட்டும் தொழிலினை செய்தேன். ஒன்றாம் இலக்க சவச்சாலையில் சில வேளைகளில் நானும் சவமும் மட்டுமேயிருந்தோம். இல்லையெனில் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை எம்பிலிபிட்டிக்கு எடுத்துச்செல்லவேண்டும். நான் பெண்ணாக இருந்ததினால் என் தொழில் நிரந்தரமாக்கப்படவில்லையென நினைக்கிறேன். பணமேதும் பெறாமல் மூன்றரை வருடங்களாக இதனை செய்தேன். ஒருவருடைய சடலத்தை பார்த்ததும் மரணத்துக்குரிய காரணத்தை என்னால் கூறமுடியும்.
தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டாரா என்பதை என்னால் கூற முடியும். இவ்வாறு ஒருமுறை கூறியது சரியாயிருந்தது. திடீர் மரண விசாரணை அதிகாரி முதலில் சடலத்தின் உயரத்தை அளந்து எழுதிக்கொள்வார் சடலமிருந்த நிலையை வரைந்து கொள்வார். சடலத்தை புரட்டி கீறல் அல்லது காயங்களிருக்கிறதா என்று பார்ப்பது என் வேலை.
மாவட்ட வைத்திய அதிகாரி அச்சமயம் அருகிலிருப்பார். விஷமருந்தி அல்லது சந்தேகத்துக்கிடமில்லாத சடலங்கள் மட்டும் இவ்வாறு செயல்படுத்தப்படும். இதையடுத்து சவப்பெட்டி உடைகளை வழங்குவது என் வேலை. இதன் மூலம் பணம் கிடைக்கும். தினமும் காலை எட்டு மணிமுதல் நண்பகல் பன்னிரெண்டு மணிவரை பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை சவச்சாலையிலிருப்பேன். சடலங்கள் வெட்டுவதற்கு இல்லாத நாளுமுண்டு. இங்குள்ள இருபத்தொன்பது பிரிவுகளில் ஏதாவதொன்றில் ஒருவர் இறப்பார் என்றார்.
சவப்பெட்டி பற்றி கேட்டபோது தேக்கு, புறுத பலகையினால் செய்யப்பட்டது என கூறுவது பொய். இவைகள் வர்ணம் பூசப்பட்டு ஏமாற்றப்படுகின்றன. சவப்பெட்டி கடைகாரர்கள் அனேகமாக ‘எல்பிசியா’ பலகையினால் :ரிt&@pநி தயாரிப்பதைப்போல் நானும் தயாரிக்கிறேன். அரை அங்குல எட்டுப் பலகையென கூறப்படுபவை ஒன்பது, அகலம் நான்குடைய ஆறு பலகைகள் ஆறரையடி நீண்டதாயிருக்க வேண்டும். பன்னிரெண்டு சரனேறுகள், இருநூற்றைம்பது கிராம் ஆணி, ஒன்றரை அங்குலமுடையது. ஐநூறு கிராம் பொலிதீன், வைக்கல் உட்பட இதர பொருட்கள் சவப்பெட்டி தயாரிக்க உதவுபவைகள்.’ என்று கூறிய அவர் மேலும் சொன்னார்.
‘மதுபோதையில் சடலம் எம்பாம் செய்யுமிடத்துக்கு வருபவர்கள் சிலவேளைகளில் என்னை கேலிசெய்யும் போது அவ்வாறெனில் நீர் இதனை செய்யும் நான் போகிறேன் எனக் கூறி எழுந்ததும் அவர்கள் சென்றுவிடுவர். ஒருநாள் ஆஸ்பத்திரியில் மாதக் குழந்தையொன்று பால் தொண்டையிலடைத்ததன் காரணமாக இறந்தது. அந்த வார்டிலுள்ள எல்லா தாய்மார்களும் அழுதனர். இத்தொழிலிலிருக்கும் எனக்கு அழுகை வரவில்லை. நான் அந்த சிசுவின் சடலத்தை வெட்ட முனையும் போது ‘மற்ற தாய்மார்களைப் போல் உனக்கு வருத்தமோ துக்கமோயில்லையா’ என வைத்தியர் என்னிடம் வினவினார். வாழ்க்கையில் ஆரம்பத்திலும் இறக்கிறோம் முடிவிலும் இறக்கிறோம் சார்’ என்றேன்.
இதற்கு மேலுள்ள வீட்டில் என் தாயார் இறந்தார். என்பாதுகாப்பிலிருந்த தந்தையுமிறந்தார் இவ்விருவரின் சடலங்களை நான் எம்பாம் செய்தேன். இவை எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.
எந்தச் சடலமானாலும் வாரக் கணக்கில் கெடாமலிருக்க வைத்திருக்கும் முறை எனக்கு தெரியும். என் தாயின் பூதவுடலை நான்கு நாட்கள் வைத்திருந்தேன். எனிடா ஊசி மூலம் மருந்திட்டு சடலத்தை பாதுகாக்கலாம். இதனை முறையாகச் செய்தால் பத்திலிருந்து இருபத்தொரு நாட்கள் வரை சடலத்தை பாதுகாக்கலாமென கூறும் சோமவதி தேவநாராயண ஆவிகள் என்பதில் நம்பிக்கையற்றவராயிருக்கிறார். அவ்வாறிருந்தால் என்னிடம் வரவேவராது. ஒரு நாளில் அதிக நேரத்தை நான் சவத்துடன் கழிக்கிறேன். பூதவுடலை வைக்கும்போது தலை பக்கத்தை அப்படிவை, இப்படிவை சூரியன் உதிக்கும் திசையை நோக்கி தலையை வைக்கக் கூடாதென்றெல்லாம் சிலர் கூறுவர். வீட்டில் எவ்வாறு வசதியிருக்கிறதோ அதன்படி நான் பூதவுடலை வைக்கிறேன்.
என்னிடம் சவப்பெட்டி எடுப்பவர்களுக்கு மட்டும் இதனை செய்கிறேன். பூதவுடல் அடக்கம் செய்யப்படும்வரை என் கடமைகளை ஒழுங்காக செய்துவருகிறேன். சம்பூர்ணமான சவச்சாலையொன்றை கொலொன்ன நகரில் அமைக்க வேண்டும்மென்பது இவரது எண்ணம். பூதவுடலுடனான வாகனத்தை நள்ளிரவில் கொண்டு செல்வதுகூடாது என்ற ஒரு இயல்புண்டாவென கேட்டபோது, சம்பந்தப்பட்டோர் கூறுவதுபோல் பூதவுடலை அவ்விடத்துக்கு எடுத்து செல்வது என் வேலை, இதில் நள்ளிரவு மற்ற இரவுகள் பற்றி எனக்கு கவலையில்லை. நான் பல முறை நள்ளிரவு வேளைகளில் பூதவுடலை எடுத்துச் சென்றிருக்கிறேன். எந்தப் பிரச்சினைகளும் எனக்கேற்பட்டதில்லை. மூட நம்பிக்கையுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நான் பேரூந்தில் பயணம் செய்யும் போது என் அருகில் ஒருவரும் அமர்வதில்லை. காரணம் என் தொழில். என் கைபையில் சவங்களை வெட்டும் ஆயுதமிருப்பதே காரணம். என் மகள் என்னை ‘அம்மா’ என்று அழைப்பதில்லை. அவள் ‘லோக்கி’ (தலைவி) என்றே அழைக்கிறாள். எவ்வாறழைத்தாலும் அவள் என் மகளல்லவா என மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறேன் என்றார் சோமவதி தேவநாராயண.
எம். எப். ஜெய்னுலாப்தீன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக