வெள்ளி, 9 ஏப்ரல், 2010

பொருட் கொள்வனவுக்காக வாழ்நாளில் 2 வருடங்கள் 10 மாதங்களை செலவிடும் பெண்கள்

பெண்கள் தமது வாழ் நாளில் சராரியாக 2 வரு டங்கள் 10 மாத காலத்தை பொருட் கொள் வனவுக்காக செலவிடுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வானது 2,000 பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

உணவு மற்றும் ஆடைகள் உள்ளடங்கலான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெண்கள் 63 வருட காலப் பகுதியில் 25,184 மணித்தியாலங்களையும் 53 நிமிடங்களையும் செலவிடுகின்றனர். மேலும் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வருடாந்தம் 301 தட வைகள் கடைகளுக்குச் செல்வதுடன் அதற்காக 399 மணித்தியாலங்கள், 46 நிமிடங்களை செலவிடுகின்றனர்.

அத்துடன் உணவுக்காக வருடாந்தம் 84 தருணங்கள் கடைத்தெருவுக்கு செல்லும் இப்பெண்கள், அதற்காக 94 மணித்தியாலங்களையும் 55 நிமிடங்களையும் செலவிடுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல