வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நித்தி. ஆசிரமத்தில் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவாமி நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் கர்நாடக சிஐடி பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பல முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

இதற்கிடையில், ஆசிரம அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகிய நித்தியானந்தா தலைமறைவானார் அத்தோடு தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோயும் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். மேலும் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யக்கோயும் கர்நாடக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த ஆச்சிரமத்திலும் இந்த ஆச்சிரமத்துக்குச் சொந்தமான கல்லுகோபஹள்ளி கிராமத்தில் உள்ள மையத்தில் இருந்தும் அன்றாடப் பதிவேடு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை பொலிஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் உயரதிகாரி யோகப்பா கூறியதாவது நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக காவல்துறைக்கு தமிழக காவல்துறையினர் கடந்த மாதம் மாற்றியதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவருடைய பிடதி ஆசிரமத்தில் நடத்தப்படும் முதல் சோதனை இதுதான். இதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா முறைகேடான உறவில் ஈடுபட்ட அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதில், புலனாய்வுக்கு தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. மேலும், ஆசிரமத்தில் மற்றவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்றார்.
ஆசிரமத்தில் கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் சேகக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் முக்கிய ஆவணங்களை முன்பே அழித்து இருக்கலாம் என்று பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, இது குறித்து நிருபர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், நித்தியானந்தா வழக்கு விசாரணையை மிகவும் நிதானமாக பொலிஸார் நடத்தி வருவதாக கூறுவது சரியல்ல. பொலிஸார் சரியான முறையிலேயே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசார ணையில் அரசு குறுக்கிடவில்லை என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல