வெள்ளி, 9 ஏப்ரல், 2010

உலகின் மிகவும் வயதான முதலாம் வகுப்பு மாணவி

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை சீனாவைச் சேர்ந்த 102 வயது பெண்மணியான மா ஸியுஸியன் (Ma Xiuxian) நிரூபித்துள்ளார்.
தனது வாழ்நாளில் ஒரு போதும் பாடசாலை செல்லவில்லை என்பது மா ஸியுஸியனுக்கு பெருங் குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் அவர் வெஷன் வீதி ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்பில் சேர்ந்து 5 வயது மாணவர்களுடன் இணைந்து தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் மிகவும் வயதான மாணவர் என்ற சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.

மா ஸியுஸியன் தனது 13 ஆவது வயதிலேயே பருத்தி நெசவாலையொன்றில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

18 ஆவது வயதில் திருமணபந்தத்தில் இணைந்த அவருக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். அவர்க ளில் 7 பேர் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களாவர்.

முதலாம் வகுப்பில் இணைந்த முதல் நாளில் மா ஸியுஸியன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி யில், ““நான் எனது ஆசிரியருக்கும் எனது சக மாணவர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். நான் கடுமையாக படித்து எனது நாட்டுக்கு பங்களிப்பை செய்வேன்'' என்று கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல