வெள்ளி, 9 ஏப்ரல், 2010

பாலியலுக்கு மறுத்த மனைவி மீது அமிலம் வீசிய கணவர்

பாலியலுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவிக்கு அமிலம் வீசிய கணவரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இறப்பர் பெருந்தோட்டமொன்றின் உரிமையாளரான மேற்படி நபர் (47 வயது), அதிகாலை வேளையில் மனைவியை எழுப்பி பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

தனக்கு உடல் நலம் இல்லையெனவும் தலை வலிப்பதாகவும் கூறி மனைவி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர், போமிக் அமிலத்தை எடுத்து வந்து மனைவியின் முகத்திலும் உடலிலும் தெளித்துள்ளார்.இதனையடுத்து வீட்டிலிருந்த மேற்படி தம்பதியின் இள வயது பிள்ளைகளும் அத்தையொருவரும் அமில வீச்சுக்கு ஆளான பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

மோசமான அமில எரிகாயங்களுக்கு ஆளான அப்பெண் மருத்துவ சிகிச்சைகளையடுத்து தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து அமில வீச்சுத் தாக்குதல் நடத்திய கணவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல