வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு

பிரித்தானியாவில் மார்புப் பகுதி ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை 14 மணி நேரம் போராடி மருத்துவர்கள் வெற்றிகரமாக வேறு பிரித்துள்ளனர்.

அயர்லாந்தின் ஈஸ்ட் கோர்க் நகரைச் சேர்ந்த 4 மாத வயதான ஹு சைன் மற்றும் ஹஸன் பென்ஹா பாப் ஆகியோரே லண்டனிலுள்ள கிரேட் ஓர்மொன்ட் வீதி மருத்துவ மனையில் வேறு பிரிக்கப்பட்டுள்ளனர்.

Hassan and Hussein Benhaffaf
இந்த இரட்டையர்களை வேறு பிரிப்பதற்கான அறுவைச் சிகிச்சையில் நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள் உட்பட 20 மருத்துவ உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் லண்டனிலுள்ள பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் பிறந்த மேற்படி இரட்டையர்களை வேறு பிரிக்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என மருத்துவர்களால் எதிர்வு கூறப்பட்டதையடுத்தே மேற்படி அறுவைச் சிகிச் சைக்கு ஏற்பாட செய்யப் பட்டது.

இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பில் இரட்டையர்களின் தாயான அன்கி மற்றும் தந்தையான அஸெடின் ஆகியோர் விபரிக்கை யில், ““எங்களது சின்னஞ்சிறு குழந்தைகள், தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற் கான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள்'' என்று தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல