ஆனால் நாம் சரியாக உணர்ந்து கொள்ளாத ஒரு சமாச்சாரமும் இங்கு தான் ஏற்படுகிறது. எப்போதாவது மவுஸ் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் Menu நீங்கள் உங்கள் செயல்பாட்டினை முடித்தபிறகும் அப்படியே சிறிது நேரம் உறைந்து நிற்பதைப் பார்த்து இதில் ஏதோ பிரச்னை உள்ளது என உணர்ந்திருக்கிறீர்களா? இல்லை, ஏனென்றால் ஏதோ உடனே போகவில்லை; அவ்வளவுதான் என்று எண்ணி அப்படியே விட்டுவிடுகிறீர்கள்.
சில வேளைகளில் இதில் உள்ள ஐகான்களைக் கிளிக் செய்து புரோகிராம்களை இயக்க எண்ணும்போதும் இதே போல் உறைந்து நிற்கும் காட்சியினைப் பார்த்திருக்கலாம். இது போல காட்சிகள் உங்களுக்குக் கிடைக்கையில் வெற்று இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ரெப்ரெஷ் என்பதனைத் தேர்ந்தெடுங்கள். உடனே திரையில் இருக்கும் அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து புதியதாகக் காட்சி அளிக்கும். இவ்வாறு செய்வது திரைத்தோற்றத்தினை புத்துணர்வு பெறச் செய்திடும். மானிட்டரின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக