84 கிலோகிராம் நிறை
மலேசியாவில் வாழும் சீக்கியரான ஜஸ்வந்த் சிங் கோஸா, உலகிலேயே மிகவும் பெரியதும் பார மானதுமான 1,430 பக்க சீக்கிய புனித நூலான “குரு கிரான்த் சாஹிப்' இனது நான்காவது கையெழுத்துப் பிரதியை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட இந்தப் புனித நூலின் நான்காவது கையெழுத்துப் பிரதியானது 91.44 சென்மீற்றர் நீளமும் 66.04 சென்மீற்றர் அகலம் 84 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும்.
இதன் மூலம் அவர் இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் மேற்படி புனித நூலின் 76.2 சென்மீற்றர் நீளம் 48.26 சென்மீற்றர் அகலம் 45 கிலோகிராம் நிறையுடைய இரண்டாவது கையெழுத்துப் பிரதியை எழுதி தன்னால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.
நான்காவது கையெழுத்துப் பிரதியான இந்த புனித நூலானது திறந்து வைக்கப்படும்போது 182.9 சென்மீற்றர் நீளமானதாகும்.
14 மாதங்கள் தினசரி 14 மணித்தியாலங்கள் வீதம் செலவிட்டு மேற்படி புனித நூலை எழுதியதாக தெவிக்கும் ஜஸ்வந்த் சிங் கோஸா, தனது இப்புதிய நூல் பிரதியை அமெரிக்காவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக கூறினார்.
இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள சீக்கிய ஆலயமொன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த 200 ஆண்டுகள் பழைமையான புனித நூலுக்குப் பதிலாக தற்போது ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டாவது கையெழுத்துப் பிரதி பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது பிரதியின் அளவான புனித நூலின் மூன்றாவது கையெழுத்துப் பிரதி 2007 ஆம் ஆண்டில் கனடாவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட அளவிற் சிறிய முதலாவது கையெழுத்துப் பிரதி, 1998 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள சீக்கிய ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தன்னால் எழுதப்பட்ட மூன்றாவது கையெழுத்துப் பிரதிக்கு 200,000 அமெக்க டொலர் பெறுமதியான பணம் சன்மானமாக வழங்கப்பட்ட போதும், அதை ஏற்க தான் மறுத்து விட்டதாக தெவிக்கும் ஜஸ் வந்த் சிங் கோஸா, தனக்கு பணம் முக்கிய மல்ல. இறை தொண்டே பெரியது என்று கூறினார்.
அவர் மேற்படி புனித நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுத இரண்டரை மணித்தியாலங்கள் செலவிட்டுள்ளார். அவர் முழுமையாக ஒரு பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு இடையில் இயற்கை கடன்களைக் கூட கழிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தொடர்ச்சியாக தினச 14 மணித்தியாலங்கள் கையெழுத்துப் பிரதியை எழுதுவதில் ஈடுபட்டதால் அவருக்கு கடுமை யான முதுகு வலி ஏற்பட்டதுடன் அவருடைய கால்களும் பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்துள்ளதுடன் தனது அடுத்த கையெழுத்துப் பிரதியை எழுதும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக