மூன்றாவதாக பெருக்கல் அடையாளம் அல்லது எக்ஸ் அடையாளம் இருப்பதைக் கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ மூடப்படும். சரி. ஆனால் பல முறை நாம் இந்த பட்டன்களை மாறி கிளிக் செய்துவிடுகிறோம். சுருக்குவதற்குப் பதில் விரித்தால் மீண்டும் சரியான பட்டனை அழுத்தலாம். ஆனால் பெருக்கல் அடையாள பட்டனை அழுத்திவிட்டால் புரோகிராம் மூடப்படும் வரை காத்திருக்க வேண்டும். பணியாற்றிக் கொண்டிருக்கிற நமக்கும் எரிச்சலாக இருக்கும். இந்த டிஜிட்டல் விபத்துக்களை எப்படி தடுப்பது? இந்த பட்டன் கட்டங்கள் சிறிது பெரியதாக இருக்கக் கூடாதா? என்ற ஆதங்கத்தை எப்படி ஆற்றிக் கொள்வது? இந்த பட்டன்களைப் பெரிதாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.
1. டெஸ்க் டாப் திரையில் ரைட் கிளிக் செய்து அதில் Properties என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
2. பின்னர் கிடைக்கும் டேப்களில் Appearance டேபைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் என்ற Advanced பட்டனை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. “Item” என்ற கீழ் விரியும் பாக்ஸில் அஞிtடிதிஞு கூடிtடூஞு ஆ1ச்ணூ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இந்த கீழ் விரியும் பாக்ஸுக்கு அடுத்ததாக அளவை செட்டிங் செய்திடும் இடம் இருக்கும். அதில் மேல் நோக்கி உள்ள அம்புக்குறியை அழுத்த அழுத்த பட்டன் சைஸ் அளவு பெரிதாகும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் –– எந்த அளவிற்கு பட்டன்களைப் பெரிதாக்குகிறீர்களோ அந்த அளவிற்கு டைட்டில் பாரும் பெரிதாகும். அனைத்தையும் முடித்து ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் புரோகிராம் விண்டோக்கள் அனைத்திலும் வலது மேல் முனைப் பட்டன்கள் பெரிதாக இருக்கும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக