ஜேர்மனியரான ஜோசப் கிரவ்ஸ் கார்ல் (Joseph Kraus Karl) என்ற மேற்படி நபர், இச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த ஆரம்பித்த சமயம் அவர்களில் ஒருவருக்கு வயது 5 ஆகும்.
தற்போது 7 வயது தல் 15 வயது வரையுள்ள மேற்படி சிறுமிகளை சியாங்மாயிலுள்ள ( Chiang Mai)தனது இல்லத்துக்கு வரவழைத்தே கார்ல் ஜோசப் கரோல் இந்த குற்றச்செயலை புரிந்துள்ளார்.
அவரிடமிருந்து சிறுமிகளின் 100 க்கு மேற்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி கிறிதாபோல் யீஸாக் கோர்ன் (Colonel Kritapol Yeesakorn)தெவித்தார்.
சில புகைப்படங்களில் வேறு சில சிறுமிகளுடன் கார்ல் ஜோசப் கரோல் நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு தசாப்த காலமாக தாய்லாந்தில் வசிக்கும் அவர், 2008 ஆம் ஆண்டு மேற்படி சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாக கூறி அச்சிறுமிகளின் குடும்பத்தினரை அணுகியுள்ளார்.
இந்நிலையில் அவர் தன்னிடம் ஆங்கிலம் கற்க வந்த சிறுமிகளை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சொக்லேட்டுகளையும் இனிப்புகளையும் வழங்குவதாக ஆசை காட்டி தனது இல்லத்துக்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் அவர் சிறுமிகளில் மூத்தவருக்கு இனிப்புகளுக்கு பதிலாக 120 அமெக்க டொலரை வழங்கியுள்ளார்.
சந்தேகங் கொண்ட சிறுமிகளின் பெற்றோர் அவர்களை தீவிரமாக விசாரிக்கவும் உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக