1954 ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனை யொன்றின் போது எடுக்கப்பட்ட மர்லின் மன்றோவின் மார்பக எக்ஸ்ரே படங்கள் மூன்றைக் கொண்ட தொகுதியொன்று லாஸ் வெகாஸில் பிளனட் ஹொலிவூட் கூடத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 45,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த எக்ஸ்ரே படத் தொகுதிக்கு 3000 அமெக்க டொலர் மட்டுமே கிடைக்குமென மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏல விற்பனையில் மர்லின் மன்றோவின் கடைசி புகைப்படத்தில் காணப்பட்ட நாற்காலியொன்று 35,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
அது மட்டுமல்லாது ஏனைய நடிகைகளுக்கு உடைமையாக இருந்த பொருட்களும் இதன்போது ஏலத்தில் விடப்பட்டன.
டைட்டானிக் திரைப்படத்தில் நடிகை கேட் வின்ஸ்லெட்டால் அணியப்பட்ட ஒரு ஜோடித் தோடுகள் 25,000 அமெரிக்க டொலருக்கும் “பணி பேஸ்' திரைப்படத்தில் நடிகை அவுட்ரே ஹெப்பேர்ன் அணிந்த ஆடை 56,250 அமெரிக்க டொலருக்கும் ஏலத்தில் விற்பனையாகின.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக