திங்கள், 5 ஜூலை, 2010

கொம்பியூட்டரை ஆபத்திலிருந்து மீட்க உதவும் புரோகிராம்

கொம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கொம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், இப்படி ஆகும் என்று எதிர் பார்க்கவில்லையே என்று எண்ணுகிறார்கள். நம் கொம்ப் யூட்டர் நன்றாகத்தானே செயல்படுகிறது என்று அதனைப் பலரும் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். கொம்ப்யூட்டர் ஒரு டிஜிற்றல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. அதனால், அவசரத்திற்கு உதவ பூட்டபிள் சிடி ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி.

ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.

இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கொம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டொக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம். வைரஸ் மற்றும் ஸ்பை வேர்களால் பாதித்த கொம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி.ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.

அத்துடன் வைரஸ் பாதித்த கொம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல் பாடுகளையும் இது தருகிறது.

இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி, எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட் எடிட்டர், ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவ போன்றவை) வசதிகளைக் கண்டறியும் வசதி. இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்களிலும் செயல்படும். சிடியாகத் தயார் செய்திட வேண்டிய புரோகிராமினை டவுண்லோட் செய்திட டttணீ://தீதீதீ.ச்திஞ்.ஞிணிட்/தண்ஞுண/ ஞீணிதீணடூணிச்ஞீஞூடிடூஞுஞிஞீச்ணூடூடிண்ணி என்ற கவயில் உள்ள தளத்திற்குச் செல்லவும். யு.
எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து செயல்படுத்த http://www.avg.com/de-en/avg-rescue-cd-download என்ற முகவரிக்கு செல்லவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல